நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 70

இரண்டே அறைகளைக்கொண்ட.. சாதாரண ஓட்டு வீடுதான் அது. மழைக்காலங்களில் ஓட்டுச்சந்தின் வழியாக. . வீட்டுக்குள் சாரல் நன்றாகவே அடிக்கும். தண்ணீர் வடியும். சில இடங்களில் சொட்டுச் சொட்டாய்.. சொட்டிக்கொண்டிருக்கும்.
இரண்டில் ஒரு அறை.. சமையலுக்கானது. இன்னொரு அறையில்தான். . உட்கார்வது… படுப்பது எல்லாமே..!

சாப்பிட்டு. . மறுபடி ஒருமுறை கண்ணாடி பார்த்துவிட்டு. . காலில் செருப்பை மாட்டிக்கொண்டு.. தனது செல்லில்.. சந்தியாவைக் கூப்பிட்டுப் பார்த்தாள்.
‘ஸ்விட்ச் ஆஃப் ‘ பில்தான் இருந்தது. நேற்றிலிருந்து. .!

தெருவில் இறங்கி நடந்தாள். கீழ்தட்டு மக்கள் வசிக்கக்கூடிய ஏரியாதான் அது. நகராட்சியின்.. அலட்சியம் காரணமாக.. தெருவே அசிங்கமாக இருந்தது. தெருமுனையில்.. பெண்கள் நவீனக்கழிப்பிடம் இருக்கிறது. அதன் அருகில் போனாலே.. நாற்றம் குடலைப் புரட்டும். ஆனாலும் வேறு வழியில்லை.. பெண்கள் எல்லாம் அங்குதான் போயாக வேண்டும்.

அடுத்த தெருவில் இருந்தது.. சந்தியாவின் வீடு. கதவு லேசாகத் திறந்திருந்தது.
” சந்தியா..?!” கதவருகே நின்று குரல் கொடுத்தாள்.
உள்ளே டிவி ஓடிக்கொண்டிருந்தது.

மறுபடி… சத்தமாக.. ”சந்தியா..” என்றாள்.

இடப்பக்கமாக இருந்த அறையிலிருந்து வந்தான் சந்தியாவின் கணவன்.
படுத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் தலை முடி கலைந்திருந்தது. முகம் கொஞ்சம் வீங்கியிருப்பது போலத் தெரிந்தது. இடுப்பில் லுங்கி மட்டும் கட்டியிருந்தான். மார்பில் பொசு பொசுவென..முடி..!

”உமாவா…? வா…!” எனச் சிரித்தான்.
” எப்படி இருக்கீங்க. .?” சிரித்த முகத்துடன் கேட்டாள் உமா.
” ம்.. நல்லாருக்கேன்..! நீ எப்படி இருக்க. .?”
” நல்லாருக்கேன்..அண்ணா..! லீவா இன்னிக்கு. .?”

” ம்..! வா.. உள்ள வா…”

உள்ளே நுழைந்தாள் ”சந்தியா. .?”
” வெளில போனா..! ஏன் உமா..?”
” எங்க போனா..?”
”வந்துருவா.. உக்காரு. ..! அப்பறம் எங்க. .. இந்தப் பக்கமெல்லாம் வர்றதே.இல்ல போலருக்கு. .?”
” எடைல.. ஒரு ரெண்டு மூணு தடவ வந்தேன்.. நீங்க இல்ல. .”
”ஓ…! அப்படியா.. சரி…உக்காரு” என ஒரு சேரை எடுத்துப் போட்டான்
உட்கார்ந்தாள் உமா. ”எங்க போனா .?”
” ஏன் உமா. . ஏதாவது ஜோலியா..?” என ஆர்வமாக அவளைப் பார்த்தான்.
”இல்ல. . பாக்கலாம்னுதான்..”
”அப்றம்.. லீவா இன்னிக்கு. .?”
” ம்…! ஏன்ணா ஒரு மாதிரி. . டல்லா இருக்கீங்க. .?”
” கொஞ்சம் ஒடம்பு சரியில்ல..”
” என்னாச்சு…?”
” லைட்டா..தலைவலி..” என கட்டிலில் உட்கார்ந்தான்.

மறுபடி ”சந்தியா வந்துருவாளா..?!” எனக்கேட்டாள்.
”வந்துருவா.. வந்துருவா..!” என்றான் ”எனக்கு காபி போடத்தெரியாது..”
” பரவால்லண்ணா… வேண்டாம்..” எனச் சிரித்தாள்.

அவன் பார்வை.. அவள் மார்பில் படிவதை உணர்ந்தாள்.
”ஏதாவது முக்யமான ஜோலியா.. உமா. .?”
”இல்லண்ணா..” சொல்லத் தயக்கமாக இருந்தது. ”கொழந்தைங்க..?”
”கூட்டிட்டு போனா..! ”
” எங்க போனா.. அப்படி. .?”
” ஒரு சின்ன வேலையா.. போயிருக்கா..! வந்துருவா.. உக்காரு. .! நாம காபி குடிக்கலாமே… நீ காபி போட்டு குடுத்தீன்னா..?” எனச் சிரித்தான்.
புன்னகைத்தாள். ஒரு காபிக்காக இத்தனை குழைவா.?
”சரிண்ணா..” என எழுந்தாள்.
”தப்பா நெனச்சுக்காத உமா..! எனக்கு காபி போடத்தெரியாது.. அதான் உன்னை…”
”பரவால்லண்ணா..!” சிரித்தாள் ”ஒரு சின்ன உதவிதான..”

சமையற்கட்டுக்குப் போனாள் உமா.
அவனும் எழுந்து அவளுடன் போனான். அவளுக்கு உதவினான். பால்.. காபி பொடியெல்லாம் எடுத்துக்கொடுத்தான்.
”ஆம்பளைங்க கூட எல்லா வேலையும் தெரிஞ்சுக்கனும் உமா..! இப்ப பாரு தலைவலிக்கு ஒரு காபி குடிக்கனும்னா கூட… உன்ன மாதிரி யாராவது வந்து. .. உதவி பண்ண வேண்டியிருக்கு..! அப்பவும் என் பொண்டாட்டி சொல்லுவா… சமையல் எல்லாம் பழகிக்கச் சொல்லி..”
” பழகிக்கலாமே..?”
”அதென்னமோ..கஷ்டமாருக்கு உமா..” என்றவன் வெற்று மார்புடனேயே சுற்றினான். அவன் உடம்பை.. அவளுக்குக் காட்டுகிறான் என்பது நன்றாகவே புரிந்தது.
கக்கத்தில் நிறைய முடி வைத்திருந்தான்.

காபி தயாராகிவிட்டது. இருவருக்கும் ஊற்றி எடுத்துக்கொண்டு போய்… டி வி முன்பு உட்கார்ந்து கொண்டனர்.

”அப்றம் எப்ப உமா. . கல்யாணம்..?” எனக் கேட்டான்.
ஒருபக்கமாக… இதழ்கள் சுழியப் புன்னகைத்தாள்.
”என்னத்த சொல்ல….!”
” ஏன் உமா..?”
” மெதுவா பாக்கலாம்…”
” இப்ப என்ன வயசு உனக்கு. .?”
”பொண்ணுககிட்ட.. வயச கேக்கக்கூடாது..”
” பொணணுககிட்டதான கேக்கககூடாது..?”
” ஏன் நான் பொண்ணில்லியா..?”
” பொம்பள…!!” எனச் சிரித்தான்.”சந்தியாவோட பிரெண்டுதான நீ..? அவ வயசுதான உனக்கும். . இருக்கும்..?”

அவனைப் பார்த்துக் கஷ்டமாகச் சிரித்தாள்.

”உன்னோட பிரெண்டு சந்தியா அவள்லாம் கல்யாணம் பண்ணி..ரெண்டு கொழந்தை பெத்துட்டா… ஆனா நீ..? இன்னும் கல்யாணமே ஆகாம.. என்ன கொடுமை பாரு. ..! உன் மனசுல எத்தனை. . எத்தனை ஆசைகள் இருக்கும்..? எத்தனை வருச ஏக்கம் தேங்கிக்கெடக்கும்..? பாவம்..!” என அவளுக்கு ஆறுதலாகப் பேசுவதுபோல… அவளின் உள்ளக்கிடக்கையைத் தூண்டி விட்டான்.

அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் உமா.

ஆனாலும் அவன் விடாமல் கேட்டான்.
” நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி. . இருந்தாலும் மனசுக்கு கஷ்டமா இல்லையா உமா. ..?”

கண்களில் ஏக்கம் தளும்ப.. அவனைப் பார்த்த உமா… ஆழமாகப் பெருமூச்சு விட்டாள்.
ஆனால் பேசவில்லை. மௌனமாகவே காபியை உறிஞ்சினாள்.