நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

அவள் ஜவுளிக்கடைக்குப் போகும்போதே… லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது.

நினைத்தது போல.. நல்லதாக ஒரு சுடிதார். . உள்ளாடைகள் எல்லாம் எடுத்தாள். பில் பணம் செட்டில் பண்ணியபோது.. அங்கலாய்ப்பாகத்தான் இருந்தது.

அவள் கடையை விட்டு வெளியே வர… நன்றாகவே மழை பெய்துகொண்டிருந்தது.
அந்த ஜவுளிக்கடை வாசலிலேயே ஓரங்கட்டி.. நின்றாள்.

லேசான சாரலுடன் மழை பெய்தது.
மழையில் நனைந்தவாறு. . வேகமாக வந்து. ..அந்த ஜவுளிக்கடை வாசலில் பைக்கை நிறுத்தினான் கார்த்திக்.
உமாவின் முகம் மலர்ந்தது.
ஆனால் கார்த்திக் அவளை கவனிக்கவில்லை. வேகமாக கடைக்குள் நுழையப் போனான்.

”கார்த்தி..” உமா அழைத்தாள்.
உடனே அவள் பக்கம் பார்த்தவன் ”அட… உமா. .” என்றான்.
” ரொம்ப நனஞ்சிட்டியே..!” எனச் சிரித்தவாறு அவன் பக்கம் நகர்ந்தாள்.
அவன். . தலைவழியாக இறங்கிய மழைநீர்..கூரான முக்கில் வழிந்து கொண்டிருந்தது. கைக்குட்டையால்.. தலையைத் துடைத்தான்.

”மழை பெருசாகிருச்சு.. அப்பறம்.. எங்க… இங்க. .?” எனக் கேட்டான்.
”துணி எடுக்க வந்தேன்..”
” எடுத்துட்டியா…?”
” ம். . ம்..!”
” என்னது..?”
”சுடிதான்….!”
” ஏதாவது விசேசமா…?”
” இல்ல.. போடறதுக்கே.. இல்ல. .”

அதற்குள்… அந்த ஜவளிக்கடை முதலாளி… கார்த்திக்கை உள்ளே அழைத்தான்.
”அலோ.. சார்..! ஏன் வாசல்லயே நின்னுட்டிங்க… உள்ள வாங்க…”
அவரைப் பார்த்து ”அலோ..” எனக்கையைத் தூக்கினான். உமாவைப் பார்த்து..
”உள்ள வா..” என்றுவிட்டு. . முன்னால் போனான்.

கடை முதலாளியும் ”வாங்கம்மா… உக்காருங்க. .” என்றான்.

உள்ளே போய் ஸ்டூலில் உட்கார்ந்தனர்.
கார்த்திக் அவ்வப்போது.. உமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு… கடை முதலாளியுடன் வியாபாரம் பற்றி. . நீண்ட நேரம் பேசினான்.

அரைமணிநேரம் கழித்து மழை விட்டது.

” கிளம்பலாமா உமா. .?” கார்த்திக் கேட்டான்.
” உம்.. ” தலையாட்டினாள் உமா.

கடை முதலாளியிடம் விடைபெற்றுக்கிளம்பினர்.
பைக் சீட்டின் ஈரம் துடைத்து…உட்கார்ந்து. . ஸ்டார்ட் பண்ணி..
” உக்காரு உமா. .!” என்றான்.

அவன் பின்னால் உட்காரும்போது.. மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

”காபி குடிக்கலாமா உமா. . சூடா ஏதாவது சாப்பிடனும் போலருக்கு..?”எனக் கேட்டான்.
”உம்…சரி..!” என்றாள்.

அன்னபூர்ணாவுக்கு அழைத்துப் போனான். ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

”டிபன் ஏதாவது சாப்படறியா..உமா. .?”
”வேண்டாம் கார்த்தி.. காபி மட்டும் போதும். .”

காபியும்… சூடாக வடையும் வந்தது. காபியைக் குடித்தவாறு கேட்டான்.
”ஏன் உமா. .. கல்யாணம் பண்ணிக்கலை…?”
”நான் எங்க வேண்டாம்னேன்.. எந்த மன்மத ராசனும் என்னைப் பண்ணிக்கலை..” எனச் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
” ஓ…” என்றான். வருந்துவது போலத் தோண்றியது. அவளை ஆழமாகப் பார்த்துவிட்டுச் சொன்னான் ”உன்னை இப்படி ப்க்கறப்ப… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உமா. .”

புன்னகைத்துப் பேச்சை மாற்றினாள்.
”அதவிடு… நீ வர்றேனு சொன்னதோட சரி.. வரவே இல்ல. .?”
”ஸாரி உமா. . கொஞ்சம் அலச்சல் அதிகமாப் போயிருச்சு..”
” ஆமா. .! நீ எப்பத்தான் அலையாம இருந்துருக்க…?” எனச் சிரித்தாள்.
”ஏய். ..” அவனும் சிரித்தான் ”அது வேற… இது வேற..!”
”அது.. சரி…! இது என்ன. ..?”
”பணம்..” என்றான்.
”ஏன். ..?”
”பைனான்ஸ் பண்றதுன்னா… சும்மாவா..? விட்ட பணத்த வசூல் பண்றதுக்குள்ள… செத்து சுண்ணாம்பாகிரனும். .!”
”அப்ப. . இன்னும் உன் அலைச்சல் தீரல..?”
” எங்க. . கண்ணாமுழி திருகுது”
”எப்பத்தான் தீரும். .?”

சிரித்தான். பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான்.
”நீ இன்னும் அப்படியேதான் உமா இருக்க. .”
”ஏய்..நல்லா பாரு. ..! நல்லா சதை போட்றுக்கேன் இல்ல. .” என்க….
அவளின் விம்மிப் பருத்த.. மார்பைப் பார்த்தான்.
” நா.. ஒடம்ப சொல்லல.. உமா. உன் பேச்சு. .சிரிப்பு. ..பார்வை..”
” அதெல்லாம் எப்படி கார்த்தி மாறும்..?”
” மாறாதா…?”
” மாறாது..!”
”சரி. ..நான் எப்படி. ..?”
”நீ முன்னைக்கு இப்ப ரொம்ப மாறியிருக்க..”
”எப்படி. ..?”
” நல்லா குண்டாகிட்ட…”
”ஏய்.. எழுபது கிலோதான் உமா இருக்கேன்.. இது குண்டா..?”

சிரித்தாள் ”அப்பறம் ஓவரா தம்மடிப்ப போல… ஒதடெல்லாம் கருத்துருக்கு..”
” ம்… வேற..?”
” ரொம்ப பீர் குடிப்பியோ..?”
” ரொம்ப இல்ல. . ஏன்..?”
” நல்லாவே.. தொப்பை போட்றுக்க…!”
” அசிங்கமாவா இருக்கு..?”
” சே..சே..! எத்தனை மாசம்னு கேக்கனும் போலருக்கு. .”
” நீ..கூடத்தான்.. மாசமா இருக்கற மாதிரி இருக்க. .”
”என்னோடது.. லைட் தொப்பைதான் கார்த்தி..”
”ஆனா.. உமா…உன்னோட.. அழகே..அழகுதான்..! இப்பவும் நீ அசத்தலா இருக்க..!”

உதடுகள் பிரியாமல் புன்னகைத்தாள்.

காபி குடித்தவாறு. . கேட்டான்.
”உனக்கு கல்யாண ஆசை இல்லியா உமா…?”
”இல்லாமா..?” அவனை நேராகக்கேட்டாள் ”நீ பண்ணிக்கறியா.. என்ன. .?”
”ஏய். .” என்றான் திகைப்பாக”எனக்கு ஆகிருச்சு..”
”அதனால என்ன. .. எனக்கொன்னும்.. ஆட்சேபனை இல்லை. .” என்றாள்.

திடுக்கிட்டுப் பார்த்தான் கார்த்திக்.