”ஐயோ. . நீ சொல்றது எல்லாம் அப்படியே. .ஆப்போசிட்டா இருக்கு உமா..! பீரோ சாவி எப்பவும் வீட்லதான் இருக்கும் .! பண வரவு செலவு எல்லாமே.. அவரு பொறுப்புதான்.. அவரா பாத்து குடுக்கறதுதான் வீட்டுச்செலவுக்கு..! நேத்து கூட என்கைல.. நூறு ரூபாய்தான் குடுத்து தாட்டிவிட்டாரு..!” எனப் புலம்பலாக சந்தியா சொல்ல..
உமாவுக்கு ஒன்று புரிந்தது.
அவளது கணவன் பலே கில்லாடி… நேற்று.. திட்டமிட்டே… நாடகமாடியிருக்கிறான்.
பாவம் இந்த அப்பிரானி..சந்தியா. .! அவன் நாடகமாடிக் கவுத்தது என்னை மட்டும்தானா இல்லை. . இன்னும் உண்டா..?
எது.. எப்படியாயினும்.. ஏதோ தன்னால் முடிந்த.. உதவி..!!
” அப்ப. .. சந்தேகமே.. இல்ல சந்தியா…” என்றாள் உமா.
மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உமாவைப் பார்த்தாள் சந்தியா .
”என்ன. ..உமா. .?”
” வண்டி… ரூட் மாறியாச்சு…?”
‘மவனே.. செத்தடா..நீ. ?’
”ஐயோ. .. என்ன உமா சொல்ற.?”
”நா சொன்னேன்னு சொல்லாத.. நீயே சாதாரணமா கேளு..! நா உன் வீட்டுக்கு. . உன்னப் பாத்து பணம் இருந்தா கேக்கலாம்னுதான் வந்தேன். அப்பதான் இதெல்லாம் சொன்னாரு..! முக்கியமா…அந்த போன் வந்தப்பறம்..! அவரே பேசி முடிச்சிட்டு.. அத நீதான்னு சொன்னாரு…! நீ வரதுக்கு லேட்டாகும்னு போன் பண்ணேன்னாரு..! ஆனா என்கிட்ட ஏன்.. அந்தண்ணா.. அப்படி சொல்லனும்..?? ஒருவேளை.. எனக்கு சந்தேகம் வரக்கூடாதுன்றதுக்காக… அப்படி சொன்னாரோ…?” இது போதும். .. அவனது நிம்மதியைக்கெடுக்க….!
சந்தியாவின் முகம் இருளடைந்து போனது..!
உமா ” அந்தண்ணா… நல்லண்ணாதான்…! ஆனாலும்.. இப்பெல்லாம் யாரையும் நம்ப முடியாது. .. எதுக்கும் கொஞ்சம்… கவனிச்சுக்கோ.. பின்னால.. அழக்கூடாது பாரு..” என்றாள்.
அதேநேரம் அவளது பஸ் வர..
”சரி..சந்தியா… நா வரேன் உன் வீட்டுக்கு.. அப்பறம் பேசிக்கலாம்..! ஏதோ பிரெண்டுங்கற முறைல.. எனக்குத் தெரிஞ்சத… சொல்லிட்டேன்..!!” என்றுவிட்டுப் போய் பேருந்தில் ஏறிக்கொண்டாள் உமா. ..!!!
ஒரு மாலை நேரத்தில்..கார்த்திக்குக்கு போன் செய்தாள் உமா.
”ஹலோ. .?” எனக் கேட்டான் கார்த்திக்.
”நான்தான் கார்த்தி.. உமா..!” என்றாள்.
” ஓ.. உமா..! எப்படி இருக்க..?”
”ம்.. நல்லாருக்கேன்..கார்த்தி..! நீ எப்படி இருக்க.?”
” ஓ..! உன் போன நான் எதிர் பாக்கவே இல்ல..!”
”ஏன்..என்னை மறந்துட்டியா..?”
”சே..சே.. உன்ன மறப்பனா..? நீ என் கண்ணாச்சே..?”
”என்னாச்சு. . வர்றேனு சொன்ன வரவே இல்ல..”
”ஓ.. ஸாரி உமா..! கொஞ்சம் பிஸியா இருக்கேன். அதான் வர முடியல.. ஆனா டெய்லி உன்ன நெனச்சுப்பேன்..அந்த பழைய உமாவ..! நீ கட்டியிருந்த தாவணிய எனக்குக் கட்டி… கை கொட்டிச் சிரிச்ச.. உமாவ..! பதினாலு வயசுல.. நந்தவனமா பூத்துக்குலுங்கின.. அழகான உமாவ… என்னால மறக்கவே முடியாது..”என்றான்.
உமாவின் மனசு குளிர்ந்தது. மனதில் பழைய நினைவுகள் மலர்ந்தன.
மீசை இல்லாத… தாவணி கட்டின கார்த்திக்.. கண்முன் தோண்றினான்.
”சரி எப்ப வரே..?” கனவு கலையாமலே கேட்டாள்.
”ம்… கூடிய சீக்கிரம் வரேன்..”
”அதான் எப்ப. .?”
” ஒரு ரெண்டு. . மூணு நாள் கழிச்சு. .”
”அவ்ளோ நாள் ஆகுமா..?”
”கொஞ்சம் பிஸி முடியட்டும் உமா..! ஃப்ரீயா வரேன்..! மனசு விட்டு நெறைய பேசனும் உன்கிட்ட. .”
” நீ வந்துருவேனு.. ஆசையா காத்திட்டுருந்தேன்.. சே…!”
”ஏய்… கோச்சுக்காத.. உமா..”
”சே..சே.. கோபமில்ல கார்த்தி.. பீல் பண்றேன்..!”
”பீல் பண்ணாத உமா. .கண்டிப்பா வரேன்..!”
” எனக்கு உன்ன பாக்கனும் போலருக்கு.. கார்த்தி..”
”ஐயோ. . எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லேன்னா நெனச்ச..? ரெண்டே நாள் பொறு… வந்துர்றேன்..!”
”வருவ இல்ல. ..?”
” என்னோட அரை லூசு உமா மேல சத்தியமா. . வருவேன்..”
” ஹேய்.. இன்னும் நான். .அரைலூசா..?”
” சரி… முழு லூசு..!” எனச் சிரித்தான்.
அவளும் சிரித்தாள்.
”ஏதாவது உதவி வேனுமா..உமா. .?” கார்த்திக் கேட்டான்.
” சே.. சே.. நா அதுக்காக. . இப்ப போன் பண்ணல கார்த்தி.. சும்மாதான்.. வேலையா இருக்கியா..?”
” ஆமா. . உமா..! ஏதாவது உதவி தேவைப்பட்டா.. தயங்காம போன் பண்ணு.. என்கிட்ட கூச்சப்படாத..!”
”சரி..” மெதுவான குரலில் ”நானும்.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும் கார்த்தி..” என்றாள்.
”ம்.. சொல்லு உமா. ..?”
”ஐ லவ் யூ…கார்த்தி..!” என்றுவிட்டு. .இணைப்பைத் துண்டித்தாள்.
சம்பளம் வாங்கியதும்.. செலவுகளைக் கணக்குப் போட்டாள் உமா. சம்பளப் பணம் பற்றாது போலிருந்தது. எப்படியும்… ஒரு சுடிதார். .. இரண்டு செட் உள்ளாடைகள் எல்லாம் எடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தாள்.