நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”ஹாய் மச்சி.. வெல்கம்..!” என்று புன்சிரிப்புடன் வரவேற்றாள்.

நைட்டி போட்டிருந்தாள் சைலா. கையில் பேனா வைத்திருந்தாள். இரட்டை பின்னலில் ரோஜா வைத்திருந்தாள். வாயில் எதையோ போட்டு.. அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.

”வாய்ல.. என்ன..? இந்த மெல்லு… மெல்ற..?” என்று கேட்டான்.

” பூமர்…” என்று புஷ்ஷென்று பபுள் ஊதிக்காட்டினாள்

உள்ளே நுழைந்தான் ”கைல பேனா வெச்சிட்டு என்ன பண்ற…?”

”ஹோம் ஒர்க்.. மச்சி..! செம போர்.. ஆனா.. என்ன பண்றது..? எழுதியே ஆகனும்..” என்றாள்.

இயல்பாக அவள் தோளில் கை போட்டான்.
”ம்…! ப்யூச்சர்ல நீ… நல்லாருக்கனுமில்ல…?”

”எப்படி.. உங்கள மாதிரியா..?” என்று சிரித்தாள்.

செழுமை படர்ந்த.. அவளது ஆப்பிள் கன்னத்தில் தட்டினான்.
”சரி… நம்மாளு… எங்க.. காணம்…?”

” நம்மாளு இல்ல..! உங்க ஆளு…!!” என்றாள்.

”சரி… என் ஆளு…?”

” பின்னால.. துணி தொவைச்சிட்டிருந்தா…”

” சரி… நீ எழுது..”என்று விட்டு.. வீட்டின் கொல்லைப் பக்கம் போனான்.

முழங்கால் தெரிய… நைட்டியை இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த கீர்த்தனா..துணிகளைத் துவைத்து முடித்து.. பாக்கெட்டில் முக்கி அலசிக்கொண்டிருந்தாள்.
நிமிர்ந்து தாமுவைப் பார்த்ததும் இடுப்பில் சொருகியிருந்த நைட்டியை இறக்கி விட்டாள்.

”ஹாய்..” என்றான்.

” வா…!” புன்னகைத்தாள்.

”முடிஞ்சுதா..?”

” ம்.. ம்ம்..! சைலா இருக்காளா..?”

” ம்.. ம்ம்..! எழுதிட்டிருக்கா..!”

” நீ போய்… அவகூட பேசிட்டிரு.. நான் இப்படியே குளிச்சிட்டு வந்தர்றேன்..!!” என்றாள்.

”ம்…!!”ஒரு இரண்டு நிமிடம்.. அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டான்.
” சினிமா போலாமா..?”

” எப்ப..?” என அவனைப் பார்த்தாள்.

” மேட்னி…?”

” இவ வேற இருக்காளே..?”

”ஏன்.. அவ இருந்தா..என்ன..?”

” அவளும் வர்றேம்பா..! விட்டுட்டு போகவும் முடியாது..!!”

”சரி.. வந்தா.. வரட்டும் விடு..!!” என்றான்.

”சரி.. உங்கக்கா எப்படி இருக்காங்க..?”

”ம்.. ம்ம்..! தேவலை..!!”

”குணமாகிட்டாங்க.. இல்ல..?”

” ம்…ம்ம்..!”

துணிகளை உதறி.. கொடியில் போட்ட கீர்த்தனா.. மெதுவாகச் சொன்னாள்.
”கம்பெனில எல்லாருக்குமே தெரிஞ்சு போசசு..!!”

”என்ன..?”

”நாம லவ் பண்றது..” என லேசாக புன்னகைத்தாள்.

” எல்லாம் உன்னாலதான்..! நீதான்.. உன் பிரெண்டுகிட்ட சொல்லி.. அவ மூலமா.. கம்பெனி பூரா பரவிருச்சு..”

” நான்.. என்னத்த கண்டேன்..! அவ யாருகிட்டயும் சொல்ல மாட்டான்னுதான் நெனச்சேன்..!!”

” நல்ல ஆளுகிட்டபோய் சொன்ன..”

அவள் மெதுவாக..” ஆனா.. அந்த ரகுக்கு உன் மேல.. பயங்கர பொறாமை தெரியுமா..?” என்று.. அவனை குறுகுறுவெனப் பார்த்தாள்.

”என்மேலயா… ஏன்..?”

”நான்.. உன்ன லவ் பண்றேனே..” என லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.

அது உண்மைதான்..!
”அவனும் உன்னை மடக்க.. எவ்வளவோ ட்ரை பண்ணான்..”

”சீ..! அவன எனக்கு.. புடிக்கவே செய்யாது..!!”

”உன்னை மடக்க… ஒரு கேங்கே ட்ரை பண்ணுச்சு..”

”ஆனா.. நான் யாருகிட்டயுமே மடங்கல..! உன்னைத் தவிற..!”

”ம்.. நானே..கேக்கனும்னு நெனச்சேன்..! யாருக்குமே மடங்காத நீ.. எப்படி என்னை லவ் பண்ண..?”

உதட்டைப் பிதுக்கினாள். ”எனக்கே தெரியல..! ஆனா உன்ன எனக்கு ரொம்பமே புடிக்கும்..! ஸ்கூல் போறப்ப இருந்தே…!!” என்றாள்.

அவனது முகத்தில் பெருமிதம் வழிந்தது.
திடுமென..”அப்றம்.. நம்ம மேட்டர்.. எங்கக்காளுக்கு தெரிஞ்சு போச்சு..” என்றான்.

பதறினாள் ”அய்யய்யோ…! அப்றம்…?”

”உன்ன பத்தி கேட்டா..”

” நீ என்ன சொன்ன..?”

”கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்டா..”

”ஒன்னும் திட்டலையா..?”

”இல்ல… உன்னை புடிச்சிருக்குனுசொன்னா..”

கீர்த்தனா மகிழ்ச்சியடைந்தாள். நெஞ்சம் பூரிக்க.. அவனைக் காதலோடு பார்த்தாள்.
அவனும்.. அவளைப் பார்த்தான்..! அவளைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் ஆவல் பொங்கியது..!
ஆனால்…….

”நெனைச்சேன்…!!” என்று குரல் கேட்டுக்கலைந்தனர்.
சைலா வந்தாள்.
” என்னடாது போய் ரொம்ப நேரமாச்சே.. இன்னும் காணமேனு யோசிச்சப்பவே நெனச்சேன்..! இப்படி ஏதாவது.. ஏடாகூடமா.. நடக்கும்னு..!!”

”ஏய்.. என்னடி.. ஏடாகூடம் இப்ப..?” என்று கேட்டாள் கீர்த்தனா.

” ஹ்ஹா..!! அட…அட…அட.. என்ன லுக்கு…? அப்படியே ஒருத்தரையொருத்தர் பார்வையாலேயே திண்றுவீங்க போல..! செம சைட்டு போடறீங்கப்பா..!!” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அசடு வழிந்தான் தாமு.

”இங்க தொவைக்கற எடத்துல.. உங்களுக்கு என்ன வேலை..?” என அவன் கையைப் பிடித்து ”வாங்க என்கூட..” என அவனை வீட்டுக்குள் கூட்டிப்போனாள் சைலா..!

டி வி முன்னால் உட்கார்ந்தான் தாமு.
சைலா ”தண்ணி வேனுமா..?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

” வேண்டாம்..!!” என்றான்.

அவன் தோளில் கை வைத்தாள் ”கோபமா.. மச்சி.. என்மேல..?”

அவன் வேணடுமென்றே.. முகத்தை உம்மென்று வைத்திருந்தான்.
அவன் தாடையைப் பிடித்து..
”ஹைய்யோ.. என்ன மச்சி..இவ்ளோ கோபம்..?” என்று கேட்டாள்.

சிரித்துவிட்டான் ”வாலு..! எழுதிட்டியா..?”

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.