நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

பெருமூச்சு விட்டான் ”உன் புருஷன்..?”

”இன்னும் வரல..! அதென்னடா.. உன் புருஷன்..?”

” அப்பறம்…?”

”அண்ணானு சொல்லு..! இல்ல… மச்சான்னு சொல்லு..!!”

”ரொம்ப முக்கியம் இப்ப..” என்று விட்டு.. கடுப்போடு கேட்டான் ”பால் இருக்கா..?”

” வாங்கிட்டு வா…” என்றாள்.

அவன் கடைக்குப் போக..
”அப்படியே.. விக்ஸ் ஆக்சன்.. ரெண்டு வாங்கிக்க..!!” என்றாள்.

எரிச்சலாகி.. ”வேற ஒன்னும் வேண்டாமா..?” என்றான்.

”ஜண்டு பாம்.. ஒன்னு வாங்கிக்க..”

தாமு முறைத்தவாறு வெளியே போனான். அவன் கடைக்குப் போய் வந்தபோது.. போர்வைக்குள் சுருண்டிருந்தாள் உமா.
அவளிடம் எதுவும் பேசாமல்.. அடுப்பில் பாலை ஊற்றி வைத்தான்..!
அவனது போன் ஒலித்தது.
எடுத்தான்.
கீர்த்தனாதான் கூப்பிட்டாள்.
எடுத்து… ” ஹாய்..” என்றான்.

”என்னடா பண்ற.. இன்னும்..?” என்று கேட்டாள்.

”ஏய்..! எங்கக்காளுக்கு கொஞ்சம் ஒடம்பு செரியில்ல.. கீர்த்தி..! அதான் காபி வெச்சிட்டிருக்கேன்..!!”

”ஓ..! உங்கக்கா இருக்காங்களா..?” அவள் குரல் அடக்கமாக ஒலித்தது.

”ம்… ம்ம்..! படுத்துருக்கா…!!”

”அப்ப.. நீ வரதுக்கு லேட்டாகுமா..?”

” ம்… ம்ம்..!!”

”சரி..! சீக்கிரம் வா..!!” என்று விட்டு வைத்து விட்டாள்.

காபி வைத்து விட்டு உமாவை எழுப்பினான் தாமு.
”எந்திரி… காபி ஆகிருச்சு..”

5

மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.
காபியை அவளிடம் கொடுத்து விட்டு பிஸ்கெட் கவரை உடைத்தான். அவளிடம் கொடுத்தான்.
”ம்.. நனச்சு திண்ணு..”

காபி குடித்தவாறு தாமு கேட்டான்.
”சாப்பிட.. என்ன பண்றது..?”

” கடைல வாங்கிக்கலாம்…” என்றாள்.

அவன் டிவியைப் பார்த்தவாறு காபி குடித்தான்.

உமா ”கீர்த்தனா.. ஓட்டல்ல நல்லாருக்குமில்ல..?” என்று லேசாக சிரித்துக் கொண்டு கேட்டாள்.

அவளைப் பார்த்து.. ”ம்…” என்று தலையாட்டினான்.

” சும்மாவே… தருவாங்கள்ள.?”

” நெனப்புதான்..” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே… கீர்த்தனா வந்தாள்.

”வாப்பா…” என்றாள் உமா.

கீர்த்தனா ”எப்படிக்கா இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

”கொஞ்சம்.. சிரமத்துலதான்..!!” என்று மெலிதாகப் புன்னகைத்தாள் உமா ”உக்காருப்பா..! அந்த சேர எடுத்து போடுடா.. தம்பு.. உக்காரட்டும்…!!”

சேரை எடுத்து அவளிடம் போட்டான் தாமு.
”உக்காரு..”

கீர்த்தனா உட்கார்ந்தாள். தாமுவைப் பார்ப்பதை… கவனமாகத் தவிர்த்தாள். உமாவின் முன்பாக.. அவர்களது காதலை மறைத்து நட்பாகவே காட்ட விரும்பினாள்.

”கீர்த்தனாக்கு.. காபி குடுடா..” என்றாள் உமா.

அவசரமாக மறுத்தாள் கீர்த்தனா.
”இல்லக்கா.. வேண்டாம்..! வீட்ல குடிச்சிட்டுதான் வரேன்..!!”

”வேலைக்கு போயிருந்தியாப்பா…?” உமா.

”ஆமாக்கா..! என்னாச்சுக்கா ஒடம்புக்கு..?”

”லேசான காச்சல்ப்பா…”

நீண்ட நேரம் இருந்தாள் கீர்த்தனா..!
அவள் விடைபெற்றுக் கிளம்ப.. தாமுவும் அவளுடனே கிளம்பினான்..!

”நீ.. எங்க வர்றே..?” கீர்த்தனா குழப்பத்துடன் கேட்டாள்.

”ஏன்.. வரக்கூடாதா..?” என்று அவளைத் திருப்பிக் கேட்டான்.

சிரித்தாள் ”வா.. வா..!!”

”எங்க போலாம்..?”

” எங்க போகனும்..?”

”சைலா என்ன பண்றா..?”

”கடைல இருப்பா..”

மெதுவாக சொன்னான் ”அப்ப.. உன் வீட்டுக்கு போலாம்..”

அவனைப் பார்த்தாள்.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.