நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”ஆள் நல்லாருக்கா..! நல்ல புள்ளையாவும் இருக்கா..! கட்டிக்கோ… நீ நல்லாருப்ப…!!”

” உனக்கு புடிச்சிருக்கில்ல..?”

” ம்.. ம்ம்…!! அவ பேசறது.. பழகறது.. எல்லாமே புடிச்சிருக்கு..!!”

உமா சொன்னது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தன் காதலை அவள் அங்கீகரித்து விட்ட பூரிப்பில்.. உமாவின் கால்களைப் பிடித்து விட்டான்.

மேலும் அரைமணிநேரம் கழித்துக் கிளம்பினான் தாமு.
சரவணனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று.. அவன் வீட்டுக்குப் போனான்.

வீட்டில் சரண்யா மட்டும்தான் இருந்தாள்.
நைட்டியில் இருந்தாள்.

”உங்கண்ணன் இல்லையா..?” என்று அவளிடம் கேட்டான்.

”இருக்கான்..!” என்றாள்.

” எங்க. .?”

” அது தெரியாது..!!” என்று சிரித்தாள்.

”என்ன… நெக்கலா..?”

”ச்சும்மா….” என்றாள் கண் சிமிட்டி..!

”உங்கம்மா…?”

”இன்னும் வரல…”

” சரி… நான் வரேன்.!” என்று திரும்பினான்.

”என்ன மேட்டர்..?” என்று கேட்டாள்.

அவளைப் போலவே ”ச்சும்மா..” என்று கண் சிமிட்டினான்.

சிரித்தாள் ”அவன மட்டும்தான் பாக்க வருவீங்களோ..?”

”வேற யார பாக்க வரதாம்..?”

”ஏன்… எங்கள பாக்க வரமாட்டிங்களா..?”

”உங்கள பாத்து.. என்ன பண்றது..?”

”இது என்ன கேள்வி..? பேசலாமே ஜாலியா..?”

”ஜாலியாவா…?”

” ம்…! அப்றம் சைட்டடிக்கலாம்.. கல்லை போடலாம்..! இப்படி.. எவ்ளோ இருக்கு…?”

”சைட்டு..? கல்ல…? அவ்வளவுதானா..?”

”இதுக்கு மேல.. உனக்கு என்ன வேனும்..? கிஸ்.. ஓகேவா .?” என்று இயல்பாகச் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

”ஏய்.. என்ன சரண்.. பேசற..?”

” ம்..! வாயேன்… இப்ப நான் மட்டும் தனியாத்தான இருக்கேன்…!!” என்று கண்ணடித்தாள்.

” நீ… என்னைவே கலாய்க்கற பாத்தியா..! வேண்டாம்ப்பா.. வம்பு..!!”

”பயந்தாங்கோழி..!”என்று சிரித்து ”சரி.. ஒரு ஆட்டம் போடலாமா..?” என்று கேட்டாள்.

”என்ன ஆட்டம்..?”

”கேரம்….”

நிச்சயம்.. அவளை.. அவனால் வெல்ல முடியாது. யோசணையாகப் பார்த்தான்.

”பணம் வெச்சிருக்காயா..?” என்று கேட்டாள்.

”வேனுமா..?”

”பெட் மேட்ச் வெளையாடலாம்..! அம்பது ருபா..”

” பெட் மேட்ச்சா..?”

” ம்..! நான் உனக்கு.. தரனுமில்ல..? அதுல கழிச்சிக்கலாம்..”

” அதுக்கு நான் .. ஆடவே தேவையில்ல..”

”ஏன்..?”

”எப்படியும் நீதான்.. ஜெயிப்ப..!!”

” மோதிப்பாக்கலாம் வா..” என்றாள் ”ஒண்டிக்கு.. ஒண்டி..”

தாமு பேசாமல்.. நின்றான்.
அவன் பக்கத்தில் வந்து.. அவன் தோளில் கை வைத்தாள் சரண்யா.
”வா… மச்சான்..”

” வேண்டாம்..” என மறுத்தான்.

”ஏன்..?”

” ஜெயிக்கப்போறது என்னமோ… நீதான்..! அப்பறம் எதுக்கு வேஸ்ட்டா..? எனக்கு இப்ப வெளையாடற மூடும் இல்ல..!” என்றான்.

அவனை உற்றுப்பார்த்தாள்.
”சண்டையா..?”

புரியாமல் அவளைப் பார்த்தான்.
”என்ன…?”

”கீர்த்தனாவோட.. சண்டையா..?”

”சே ! அதெல்லாம் ஒன்னும் இல்ல ..”

”அப்றம் ஏன்.. மூடு அப்செட்டா இருக்க. .?”

”அப்செட்னு இல்ல….”

”விடு மச்சான்.. இந்த கருமம் புடிச்ச.. லவ் பண்ணாலே அப்படித்தான்..! நம்ம மூடு எப்ப.. எப்படி இருக்கும்னு நமக்கே தெரியாது..!!” என்று சிரித்தாள் ”வா.. கொஞ்ச நேரம் உக்காந்து பேசலாம்..”

”ஏன். . உனக்கும் பேச ஆள் கெடைக்கலியா…?”

” அப்படித்தான் வெச்சிக்கயேன்..! ரெண்டு ஆட்டம் போட்டம்னா… எல்லாம் சரியாகிரும் மச்சான்..! பெட் வேண்டாம்.. சும்மா வெளையாடலாம்… வா..!!”

அவனுக்கும்.. விளையாடலாம் என்றுதான் தோண்றியது.
”ம்… நீயும் விடற மாதிரி இல்ல..”

”அட.. வா.. பையா..! சும்மா.. என்னமோ..” என அவன் கையைப் பிடித்து இழுத்துப் போனாள்..!

இருவரும் உட்கார்ந்து காயினை எடுத்து அடுக்கும்போது… சரவணன் வந்து விட்டான்…!!
அவனும் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் விளையாடினார்கள்..
நிறைய அரட்டை அடித்தபடி….!!!!!

விடுமுறை நாள்…!! காலை பத்து மணிக்கு மேல் கீர்த்தனா வீட்டுக்குப் போனான் தாமு.
சாத்தியிருந்த.. கதவைத் தட்டிவிட்டு காத்து நின்றான்..!
சைலாதான் கதவைத் திறந்தாள்.!

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.