நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”ம்..” என்றாள்.

” நான் இருக்கனுமா..?”

அவள் பதில் சொல்லவில்லை.

சிறிது இடைவெளி விட்டு..
”நான் என்ன பண்றது..?” என்று கேட்டான்.

”என்னமோ பண்ணு..” என ஈனஸ்வரத்தில் முனகினாள்.

”தனியா.. ஆஸ்பத்ரி போய்க்குவியா..?”

” ம்…ம்ம்.!!”

”அப்ப நான்.. வேலைக்கு போகட்டுமா…?”

”ம்.. ம்ம்..!!”

”கஞ்சி வெக்கட்டுமா..?”

”ம்.. ம்ம்…!!”

எழுந்து ஒரு பாத்திரத்தில் கஞ்சி வைததான். அவனும் அவசரமாகப் பல் தேய்த்து.. குளித்துவிட்டுக் கிளம்பினான்.

”கஞ்சி வெச்சிருக்கேன்… அப்றமா.. ஆஸ்பத்ரி போய்ட்டு வா…” என்றான்.

”ம்… ம்ம்..!!” என முனகினாள்.

” பணம் வேனுமா..?”

6

” இருக்கு…”

”நா.. போய்ட்டு வரேன்…”

அவள் ”ம்..” சொல்ல…

கிளம்பினான் தாமு…..!!!!!!!

மத்யாணம் லஞ்ச் டைமில்.. கையில் டிபன் பாக்ஸுடன்.. தாமுவிடம் வந்து கேட்டாள். கீர்த்தனா..!
”லஞ்ச் கொண்டு வரலையா..?”

”இல்லே…” என்றான்.

”என்னோடத சாப்பிட்டுக்கோ.. இந்தா..” என அவளது டிபன் பாக்சைக் கொடுத்தாள்.

”உனக்கு..?” என அவளைக் கேட்டான்.

”இன்னொரு டிபன் இருக்கு..! எனக்குத்தெரியும்.. இன்னிக்கு நீ லஞ்ச் கொண்டு வந்துருக்க மாட்டேன்னு..! உங்கக்காவுக்கு இன்னும் நல்லாகலையா..?” என அககறையோடு கேட்டாள்.

”ம்கூம்..” தலையை ஆட்டினான்.

”உங்க மச்சான்.. வந்துட்டாரா..?”

” இல்லே…”

” அடப்பாவி… கூட யாருமே.. இல்லயா..?” என அவள் கேட்டதும் அவனுக்கே.. ஒரு மாதிரி.. மனசு கஷ்டமாகி விட்டது..!
”நீயாவது கூட இருந்துருக்கலாமில்ல.. பாவம்..” என்றாள்.

”அந்தளவுக்கு.. ஒன்னும் சீரியஸ் இல்லே..” என்று சமாளித்தான்.

”சரி… நீ சாப்பிடு..” என்று விட்டு பெண்கள் பகுதிக்குப் போனாள் கீர்த்தனா.

வேலை முடிந்து.. அவன் வீடு போனபோதும்.. படுக்கையில்தான் இருந்தாள் உமா.
அவளை ஒட்டி உட்கார்ந்து.. அவள் நெற்றியைத்தொட்டுப் பார்த்துவிட்டு கேட்டான்.
”ஆஸ்பத்ரி போனியா..?”

”ம்..” என்றாள் உமா.

”எத்தனை ஊசி..?”

” ரெண்டு பக்க டிக்கிலயும்.. ஒரொரு ஊசி..” என லேசாக சிரித்தாள்.
அவள் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது..! தலைமுடி கலைந்து முகம் வாடியிருந்தது..! அவளது உதடுகள் கூட.. லேசாக வறண்டிருந்தது..!

”இன்னும் காச்சல் இருக்கா..?”

”காச்சல் இல்ல..! ஆனா.. கை.. காலெல்லாம் பயங்கர அசதி..!!”

” மாத்திரை சாப்பிட்டியா..?”

” ம்..ம்ம்..”

”கஞ்சி குடிச்சியா..?”

” ம்..ம்ம்..!”

”இப்ப.. டீ..ஏதாவது..?”

”வேணாண்டா… வாயெல்லாம்..கசக்குது.! வாய்ல எதுவுமே வெக்க முடியறதில்ல..!” என்றாள்.

”அப்ப…சரியாகிரும்..!!” என்றான்.

சிறிது நேரத்தில் கீர்த்தனா தன் தங்கையுடன் வந்தாள். அவள் கையில்.. பிரெட்டும்… பிஸ்கெட்டும் இருந்தது..!
அவள்களைப் பார்த்ததும் உமா எழுந்து உட்கார்ந்தாள்.

”வாப்பா…” என்று வரவேற்றாள்.

”இப்ப எப்படிக்கா இருக்கு..?” கீர்த்தனா கேட்டாள்.

”தேவலப்பா.. உக்காருங்க ரெண்டு பேரும்..”

”தாமு சொன்னான்.. நைட் ரொம்ப காச்சல்னு.. ஆஸ்பத்ரி போனீங்களா..?”

” ம்..! போனம்பா..! நைட்டெல்லாம்.. செரியான குளிர் காச்சல்..! என்னால சேந்து… இவனுக்கும் சரியா.. தூக்கமில்ல..!!” என்றாள் உமா.

”இருக்கறதுதான்க்கா..! தாமு கவனிக்கலேன்னா வேற யாரு கவனிப்பாங்க… உங்கள..? இந்த நேரம் பாத்து.. உங்க ஹஸ்பெண்டும் ஊர்ல இல்ல..” என்றாள்.

கீர்த்தனா சுடியிலும்.. சைலா லெக்கின்ஸிலும் இருந்தார்கள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. தாமுவிடம் கேட்டாள் கீர்த்தனா.
”சாப்பிட.. இன்னிக்கு என்ன பண்ணப்போறே..?”

”கடைலதான்..!”என்று சிரித்தான்.

”நாங்க இப்ப கடைக்குத்தான் போறோம்..”

” நானும் வரேன்..” என்றான்.

” நீ.. வரவேண்டாம்..! இங்கயே இரு.. நானே கொண்டு வரேன்..!” என்றாள் கீர்த்தனா.

”உனக்கு எதுக்குப்பா.. சிரமம்..?” என்று குறுக்கிட்டுக்கேட்டாள் உமா.

”அய்யோ.. எனக்கெல்லாம் ஒரு சிரமமும் இல்லேக்கா..! தாமு இங்கருந்தா.. உங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்..!” என்று சிரித்து விட்டு எழுந்தாள்.

” பரவால்ல..! நீ கடைல இரு.. நானே வந்து வாங்கிக்கறேன்..!!” என்றான் தாமு.

அரைமனதாக”ம்..ம்ம் சரி..வா…” என்றாள்.

அக்கா.. தங்கை இருவரும் விடைபெற்றுப் போன பின் கேட்டாள் உமா..!
”நானே கேக்கலாம்னு நெனச்சேன்.. எப்படிடா போகுது.?”

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

”லவ்வு…?”

சட்டென ஒரு சங்கோஜம் வந்தது. ”அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்றான் டிவியைப் பார்த்துக் கொண்டு.

”எங்கே… என்னைப் பாத்து சொலலு..” என்றாள்.

அவளைப் பார்த்தான். ”ஒன்னும் இல்ல..!”

”என் கண்ணைப் பாத்து சொல்லு..?”என்று முகத்தின் முன் விரலைக்காட்டி.. விக்ரம் ஸ்டைலில் கேட்டாள் உமா.

சிரித்துவிட்டான் ”போ..!!”

” எப்படி போகுது…இப்ப..?” என்று கேட்டாள்.

”அதான்.. நீயே பாக்ற இல்ல..?”

”எனக்கு ஓகேடா..! கல்யாணம் பண்ணிக்குவியா..?”

”ஏன்..?”

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.