நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”கண்டிப்பா போயே.. ஆகனுமா..?”

”நீதான சொன்ன..! என்னை உன் வீட்டுக்கு..?”

”ம்..! ஆனா நான் வரச்சொன்னது எப்ப..? டைம் பாரு.! ஏழு மணிக்கு மேலாச்சு..! நான் சொல்றப்ப அஞ்சரை மணி…!!”

”ஏய்.. நீயே பாத்த இல்ல..? எங்கக்காளுக்கு ஒடம்பு சரியில்ல.. அதான் லேட்டாகிருச்சு..! அதுக்குள்ளாற நீயே வந்துட்ட..!!”

”சரி.. பரவால்ல..! இப்ப நான் கடைக்கு போகனும்..!” என்றாள்.

”ம்.. சரி.. நட..” என்றான்.

”நீயுமா..?”

” கடைக்கா..?”

” ம்..ம்ம்…!!”

” ஏய்.. வெளையாடாத..”

” அட.. நெஜமாத்தான் கீர்த்தி..”

சிரித்து ”சரி..சரி..! வா..! எனக்கும் பேச்சுத்துணை ஆச்சு..!!” என்றாள்.

”நான் ஒன்னும் உனக்காக வல்ல…”

” அப்றம் யாருக்காக.. வர்றியாம்..?”

”வீட்ல சாப்பாடு செய்யல..! கடைலதான் டிபன்..! அதான்.. நம்ம மாமனார் கடைலயே கட்டிக்கலாம்னு…” என்றான்.

”ஓ..!! அப்படியா..? வா.. உங்க மாமனார்கிட்டயே சொல்றேன் வா..!!”

” சொல்லிக்க..! எனக்கென்ன பயம்..? உன் தோலைத்தான் உரிக்கப்போறாரு..?”

ஜாலியாகப் பேசிக்கொண்டே இருவரும் மெதுவாக நடந்தார்கள்.
வழியில் சரவணன் எதிரே வந்தான்.
”டிபன் வாங்கிட்டு வரன்டா..” என்று அவனிடம் சொல்லிவிட்டு கீர்த்தனாவுடன் நடந்தான்..!

கீர்த்தனா மெல்லச் சொன்னாள்.
”உங்கக்கா ரொம்ப நல்லா பழகறாங்க..”

”புடிச்சிருக்கா.?” என முதன்முறையாகக் கேட்டான்.

” ம்…ம்ம்..!!” புன்சிரிப்புடன் தலையாட்டினாள் ”உனக்கு அக்கான்னா.. பயமா..?”

”பயமில்லே..” சமாளித்தான் ”எனக்கு எல்லாமே.. அவதான்..! அந்த மரியாதை..! அவள விட்டா.. வேற யாரு இருக்கா..?”

சட்டென”ஏன்.. நான் இல்ல..?” என்றாள்.

”ஏய்..! நீ வேற கீர்த்தி..! அவ.. என்னை வளத்தி.. ஆளாக்கினவ.. அந்த இதுல நான் சொன்னேன்..!!”

”உங்கக்கா நல்லவங்கதான்..” என்றவள் சிறிது இடைவெளி விட்டு கேட்டாள் ”ஆனா.. ஏன் தாமு இப்படி இருக்கனும்..?”

அவளைப் பார்த்தான் ”எப்படி..?”

6

”இல்ல.. கேரக்டர்தான்..!!”

அவள் எதைக்குறிப்பிடுகிறாள் என்பது புரிந்தது. உமாதான் ஊரரிந்த பெண் ஆயிற்றே…? அவனுக்குததான்.. அவள் அக்கா..! ஆனால் ஊருக்கு..? பொது சொத்துதானே….? அதை நினைத்த போது… சட்டென அவன் மனசு சுணங்கியது….!!!!!!!

ஹோட்டலை நெருங்கும்போது.. மெதுவாகக் கேட்டாள் கீர்த்தனா.
”நான் ஏதாவது.. தப்பா பேசிட்டனா.. தாமு..?”

” சே… சே..!!” என்றான்.

” உன்ன சங்கட்டப்படுத்தனும்னு.. கேக்கல..”

”பரவால்ல விடு..”

”ஸாரி..!!”

”ஏய்.. விடு..”

‘கீர்த்தனா ‘ டிபன் ஸ்டாலில் சைலா.. கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.
பக்கத்தில் அவளது அப்பா.. இருக்க…
”ஹாய்ண்ணா…” என்றாள்.

”ஹாய்.. சைலு..!!” என்று சிரித்தான்.

”என்னது.. எங்க ஹோட்டல் பக்கம்லாம் வந்துருக்கீங்க..?”

”உங்க ஓட்டல.. வெலைக்கு வாங்கலாம்னுதான்..!!” என்றான்.

”அதெல்லாம்.. உங்களால முடியாது..!”என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவளோடு.. சிறிது நேரம் பேசினான். அவனது மனச்சுணக்கம்.. அவனை விட்டு நீங்கியது..!
அரைமணி நேரம் கழித்து.. அவன் பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்ப… கீர்த்தனாவும்.. சைலாவும் அவனுடனேயே கிளம்பி வந்தார்கள்..!!
அவள்களோடு ஜாலியாகப் பேசிச் சிரித்து.. அவள்களை.. அனுப்பி விட்டு..அவன் வீடு போனதும்.. உமா கேட்டாள்.
” எங்கடா போய் தொலஞ்ச.. பரதேசி..? இவ்வளவு நேரம்..?”

” இப்ப.. எதுக்கு இப்படி கத்தற..?”என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான்.

முகத்தில் கோபம் கொப்பளிக்க.. அவனை முறைத்துப் பார்த்தாள்.
”என்ன வாங்கினே..?”

” புரோட்டா… தோசை ரெண்டுமே இருக்கு.. எது வேனுமோ… எடுத்து திண்ணு…” என்று பார்சல் கவரைக் கொண்டு போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு.. டிவியைப் போட்டுக்கொண்டு.. உட்கார்ந்தான்..தாமு.

பொட்டலங்களை எடுத்து பிரித்துப் பார்த்து… தோசையை மட்டும் சாப்பிடத்தொடங்கினாள்.
” நீ.. திங்கலையா..?” என்று அவனைக் கேட்டாள்.

” மொதல்ல… நீ திண்ணுட்டு.. படு..” என்றான்.

.உமாவால் முழுவதுமாகச் சாப்பிட முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டே சாப்பிட்டாள்.! சாப்பிட்டவுடன்.. கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டாள்..!

அவளைப் பார்த்தான்.
” போதுமா..?”

”ம்… ஸ்ஸ்.. பயங்கரமா குளுருதுடா..” என்றாள்.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.