மதிவதனி மாயமலை காட்டில் இருந்து நாட்டுக்குள் நுழைந்தாலும் பெரிதாக வித்தியாசம் உணர முடியவில்லை.மரங்களின் அடர்த்தி குறைந்து வீடுகள் மட்டும் ஆங்காங்கே தென்பட்டன.
அங்குள்ள மக்கள் இன்னும் கருப்பாக திடகாத்திரமாக இருந்தார்கள்.அது மாயமலை அவர்களுக்கு இயற்கையாக வழங்கிய கொடை.தேனும்,தினை மாவும் தின்று வளர்ந்த உடம்பு.
அங்கு இருந்த ஆண்கள் அவள் செழித்து இருக்கும் அங்கங்களை பார்த்து ஜொள்ளு விடுவதை பார்த்து காத்தவராயன் கர்ஜித்தான்.
டேய் இவள் என் சொத்து,எவனாவது இவளை பார்த்து ஜொள்ளு விட்டால் உடனே மரண தண்டனை தான் என்று கத்த ஆண்கள் எல்லோரும் அவரவர் குடிலுக்குள் புகுந்து கொண்டனர்.
மதிவதனி மாயமலையின் கோட்டை பிரமாண்டத்தை பார்த்து வியந்தாள்.
ஆகா எவ்வளவு உயரமான மதில் சுவர்.ஆயிரம் யானைகள் வந்து முட்டினாலும் இந்த மதில் சுவரை தகர்ப்பது கடினம் போல என்று நினைத்தாள்.
கோட்டையை தாங்கி நிற்கும் மதில் தூண்கள் வானை சென்று தொடுகின்றதே.
மாயமலையில் உருவாகும் இந்த மாயாறு கோட்டையை சுற்றி பாதுகாப்பாக ஓடியது.அதில் அங்கங்கே கரையோரம் கொடிய முதலைகள் வாய் விரித்து காத்து கிடந்தன.
படை எடுத்து வந்து இருந்தாலும் இந்த கோட்டையை பிடித்து இருக்க முடியுமா?என்று மதிவதனி சந்தேகித்தாள்.
ஊஹூம் கண்டிப்பாக வென்று இருக்க முடியாது.கோட்டையில் இருந்து இவர்கள் வெளி வந்து போரிட்டால் மட்டுமே வெல்வதற்கு வாய்ப்பு இருந்தது என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது.
இந்த ஆற்றை கடந்து எப்படி கோட்டைக்குள் செல்வது? என ஒரு நொடி நினைத்தாள்.
மதிவதனியின் எண்ண ஓட்டத்தை காத்தவராயன் புரிந்து கொண்டான்.
“என்ன மதிவதனி,இன்னும் என்னை கொல்வது எப்படி என சிந்தித்து கொண்டு இருக்கிறாயா?”
“ஆம்,நான் இங்கு இருந்து வெளியேற வேண்டும் என்றால் உன்னை கொல்வதை தவிர எனக்கு வழி இல்லை.”
“ஹாஹாஹா” என்று கடகடவென சிரித்தான்.
இப்பொழுதும் சொல்கிறேன்,என்னை கொல்ல ஆயுதம் இன்னும் இந்த உலகில் இல்லை.
காத்தவராயன் தன் இடுப்பில் இருந்த பிறை போன்ற வாத்தியத்தை எடுத்து வாயில் வைத்து ஊதினான்.
உடனே கோட்டை கதவுகள் திறந்தது. கோட்டைக்கும் அவர்கள் நின்று இருந்த இடத்திற்கும் இடையே ஒரு ஆறு ஓடி கொண்டு இருந்தது.கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய மரப்பாலம் கொஞ்ச கொஞ்சமாக மேலே இருந்து கீழே இறங்கியது.அதில் வீரர்களும்,அதை தொடர்ந்து பல்லக்கும் பின்னே வந்தது.
மதிவதனியை அரண்மனைக்குள் அழைத்து செல்ல பல்லக்கு வந்தது.
காத்தவராயன் குதிரையில் ஏறிகொண்டு”மதி நீ பல்லக்கில் வந்து விடு”என்று கூறினான்.
ஆனால் மதிவதனி உடனே மறுத்தாள்.ஏனெனில் இந்த மாய மலையின் கோட்டை ரகசியங்களை குதிரையில் சென்றால் மட்டுமே நோட்டம் விட முடியும் என நினைத்தாள்.
எனக்கு பல்லக்கு வேண்டாம்,நான் ஒரு போர் மங்கை.எனக்கு குதிரை தான் வேண்டும்.
காத்தவராயன் ஒரு வீரனை பார்த்து கண் அசைக்க அவன் தன் குதிரையில் கீழே குதித்தான்.மதிவதனி உடனே அதில் தாவி ஏறி கொண்டாள்.
காத்தவராயன் குதிரை முன் செல்ல,அதை தொடர்ந்து மதிவதனி குதிரை பின் தொடர்ந்து சென்றது.வீரர்கள் பாதுகாப்பாக மதிவதனி பின்னால் வந்தனர்.
அனைவரும் உள்ளே சென்ற உடன் பாலம் மேலே ஏற்றப்பட்டு கதவு அடைக்கப்பட்டது.
மதிவதனி கோட்டை உள்ளே நுழைந்த உடன் கண்டது சந்தை தான்.அந்த நாட்டின் மக்கள் விளைந்த பொருட்களை விற்று கொண்டு இருந்தனர்.பன்றி,மான்,முயல் போன்றவைகளின் மாமிச கடைகள் அதிகமாக இருந்தன.
அரண்மனை வாயிலை நுழைந்த பிறகு ஒரு பெரிய திடல்,அதில் போர் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.மறுபக்கம் யானைகளை அதன் பாகன்கள் படைக்கு தயார் படுத்தி கொண்டு இருந்தனர்.யானைகளின் பிளிறல் சத்தம் காதை அடைக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தன.
எப்படி இவனை கொன்று தப்பிப்பது என்று ஒரு வழியும் மதிவதனிக்கு புலப்படவில்லை.
