அசுரன் Part 4 67

ஆராதனா திடுக்கிட்டு பார்த்தாள்.”உடனே எழுந்து வா எரிமலை சீக்கிரம் வெளியே போலாம்.”என்று அந்த குடுவையையும், ஓலைச்சுவடியையும் எடுத்து கொண்டு வெளியே ஓடினாள்.

வெளியே நின்று இருந்த காரை கிளப்பி கொண்டு இருவரும் பறந்தனர்.

“மன்னா,மன்னா…எங்களை விட்டு போகாதீர்கள்” என்று அரண்மனையில் இருந்து பேய்களின் அலறும் சத்தம் வந்தது.

“கவலைப்படாதீர்கள்,மன்னர் அவர் விருப்பத்துடன் தான் அவர்கள் உடன் செல்கிறார்.கூடிய விரைவில் மதிவதனியை இங்கே கூட்டி வந்து அனுபவித்து, நமக்கு சீக்கிரம் முக்தி அளிப்பார்.அதுவரை காத்து இருங்கள்”என பின்னால் இருந்து இன்னொரு பேயின் குரல் கேட்டது.

சிங்கம்புணரி கிராமம் வந்த உடன் டிரைவர் கத்தினான்.

“என்ன மேடம்,இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க..”.

“சரி,சரி வாப்பா,ரயிலுக்கு நேரமாச்சு கிளம்பலாம்”

ரயில் நிலையம் வந்த உடன்,எரிமலை பாத்ரூமுக்கு ஓடினான்.

வெளியே வந்த பிறகு,’என்ன எரிமலை பரோட்டா,சால்னா கேட்டேயே ,சாப்பிட போலாமா”என ஆராதனா கிண்டலாக கேட்க எரிமலை முறைத்தான்.

“ஏற்கனவே நீ பண்ண வேலைக்கு, பின்னாடி சால்னா மாதிரி தான் போய்ட்டு இருக்கு.ஊருக்கு வா எடிட்டர் கிட்ட சொல்லி உன்னை வச்சுக்கிறேன்”

“ம்ம் பார்க்கலாம்,பார்க்கலாம்”என்று கிண்டலாக ஆராதனா சிரித்தாள்.

ஆராதனா சீப் எடிட்டருக்கு ஃபோன் செய்தாள்.

“சார்,போன வேலை வெற்றிகரமாக முடிந்தது.ஓலைச்சுவடி,அப்புறம் ஒரு கை வேலைப்பாடு நிறைந்த ஜாடி கிடைத்தது.அதை வைத்து சூப்பரா கட்டுரை எழுதி விடலாம்”

“சரி ஆராதனா,நான் இப்போ பாண்டிச்சேரிக்கு வேலை விஷயமா வந்து இருக்கேன்.நாளை மாலை என் கெஸ்ட் ஹவுஸ் ECR இல் இருக்கு.நீ அதை எல்லாம் எடுத்து கொண்டு அங்கே வந்து விடு.”

“ஓகே சார்.”என ஆராதனா போனை வைத்தாள்.

அடுத்த நாள் மாலை சீப் எடிட்டர் ராம கோபாலன் ஆராதனா வருகைக்காக காத்து இருந்தான்.அவன் ஆசைப்பட்ட சந்தன தேகம் இன்று அணு அணுவாக சுவைக்க அவனுக்கு லக் அடிக்க போகிறது என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

ஆராதனா வீட்டை விட்டு கிளம்பும் போது மழை இல்லை.மஞ்சள் நிற ஷிஃபான் சேலையில் சாக்லெட் நிற ரவிக்கையில் தேவதை போல் ஜொலித்தாள்.தீடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானம் பொத்து கொண்டு ஊத்த தொடங்கியது.சரி இன்னும் 1 km தானே போய் விடலாம் என்று வேகமாய் ஒட்டினாலும் அவளை மழை முழுமையாக நனைத்து விட்டது.

ஆராதனா காலிங் பெல்லை அழுத்த மது அருந்தி கொண்டு இருந்த ராமகோபாலன் வந்து கதவை திறந்தான்.

பனியில் நனைந்த ரோஜாவை போல் இருந்த ஆராதனாவை பார்த்து “என்ன ஆராதனா,இப்படியா நனைஞ்சிட்டு வருவே,எங்கேயாவது ஒரமா நின்னுட்டு வரக்கூடாதா?”

இல்ல சார்,பக்கத்தில் தானே வந்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அதற்குள் சரியான மழை.

சரி சரி,உள்ளே வா.

ராம கோபாலன் உள்ளே சென்று துண்டை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான்.”போ போய் தலையை துவட்டு”என்று மேலே உள்ள ஒரு அறையை காட்டினான்.

ஆராதனா கொண்டு வந்து இருந்த ஓலைச்சுவடி,மற்றும் ஜாடியை அவன் கையில் கொடுத்தாள்.

“இது தான் சார்,அங்கே கிடைச்சது.நான் தலையை துவட்டிவிட்டு,எனக்கு அங்கே நடந்த அனுபவத்தை வந்து சொல்றேன்..”

சரி,மேலே மாடியில் அறை இருக்கு,அங்கே போய் தலை துவட்டி கொண்டு,துணியை காய போட்டு கொண்டு பொறுமையா வா.நான் அதற்குள் இந்த ஓலைச்சுவடி படித்து கொண்டு இருக்கிறேன்.