அசுரன் Part 4 67

பாழடைந்த கோட்டையை பார்த்து எரிமலை பயத்தில் கத்தினான்.

“ஏய் ஆராதனா உண்மையை சொல்லு, எதுக்கு இங்கே கூட்டி வந்து இருக்கே.”

ஆராதனா உண்மையை சொல்ல,எரிமலை கதிகலங்கி விட்டான்.

“அடிப்பாவி என்னை இப்படி வம்படியா வந்து மாட்டி விட்டுட்டீயே,பேய் என்றால் இருந்த இடத்திலேயே ஒன்னுக்கு விட்டு விடுவேன்.ஒழுங்கா என்னை கீழே கொண்டு போய் விட்டு விடு.

அப்பொழுது ஒரு பயங்கர சத்தம் கேட்டது.அதை கேட்டு இருவரின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

ஆராதனாவின் மினுமினுக்கும் தேகத்தின் அழகை பார்த்து ஆவிக்கும் ஆசை வந்தது. காற்றின் வேட்டை ஆரம்பம்

நிகழ் காலத்தில்

உறுமல் சத்தத்தை கேட்டு ஆராதனா,எரிமலை நடுநடுங்கி போனார்கள்.சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க அங்கே ஒரு ஓநாய் நெருப்பு கக்கும் கண்களோடு இவர்கள் மீது பாய வெறித்து பார்த்து கொண்டு இருந்தது.

“என்னடி நாய் கண் செக்க செவென்று இருக்குது.அது ஏன் இப்படி நம்மள முறைச்சு பார்க்குது ?எரிமலை கை கால் தந்தி அடிக்க கேட்டான்.

“டேய் இது நாய் இல்லடா,அது ஓநாய்…!அதனோட டின்னருக்கு நம்மை வேட்டையாட பார்க்குது.”

“அய்யயோ இப்ப என்ன பண்றது?எரிமலை கேட்டான்

“வேற வழியே இல்ல,என்னை பின் தொடர்ந்து ஓடி வா” என ஆராதனா ஓட தொடங்கினாள்.

“அடிப்பாவி, என்னையும் கூட்டிட்டு போ”என எரிமலையும் அவளை தொடர்ந்து ஓடினான்.

இருவரையும் ஓநாய் துரத்தியது.

ஆராதனா அரண்மனை வாசலை நோக்கி ஓடினாள்.

“அடிப்பாவி நில்லுடி,நானும் வரேன்.என்னை விட்டு ஓடி போகாதே.இந்த ஓநாய் வேற என் கவட்டையை கவ்வ வருதுடி.”எரிமலை கத்தினான்.

அரண்மனையை ஒட்டி இருந்த ஆலமர விழுதை ,ஓடி கொண்டு இருந்த ஆராதனா பிடித்து தாவ,அடுத்த கணம் ஆராதனா அரண்மனை ஜன்னல் வழியே பாய்ந்து மின்னல் போல உள்ளே மறைந்தாள்.

எரிமலை இதை பார்த்து ஒருகணம் விக்கித்து நின்றான்.

“அய்யயோ எங்கடி போய்ட்ட,வழக்கம் போல என்னை மாட்டிவிட்டுட்டு அதுக்குள்ள மாயமாய் மறைந்து விட்டாளே.”எரிமலை கத்தினான்.

இன்னொரு விழுதை எரிமலை பிடித்து தொங்க,பின்னாடி ஓடி வந்த ஓநாய்,அவன் பேண்டை கவ்வியது.

எரிமலை ஆலமர விழுதை பிடித்து ஊஞ்சலாடி கொண்டு இருக்க,ஓநாய் அவன் பேன்டை பிடித்து ஆடி கொண்டு இருந்தது.

“அய்யோ,இப்படி ஓநாயோடு அந்தரத்தில் தொங்க விட்டு ஓடி போய்ட்டாளே..!இப்ப நான் என்ன பண்ணுவேன்.”என்று எரிமலை புலம்பினான்.

ஏய் “ச்சு ச்சு….”என விரட்டினாலும் அவன் பாச்சா ஒன்றும் பலிக்கவில்லை.

அப்பொழுது எதையோ பார்த்த ஓநாய் அவன் பிடியை நழுவ விட்டு கீழே விழுந்தது.

தீடீரென அரண்மனையின் வாசல் கதவை பார்த்து தரையில் விழுந்து மண்டி போட்டது.பம்மும் குரலில் “ம்ம்ம்ம்ம்ம்மம்” என்று ஒலி எழுப்பி பயந்து பின் வாங்கி பின்னங்கால் தெறிக்க ஓடி மறைந்தது.

“அப்பாடா” என எரிமலை பெருமூச்சு விட்டான்.

சுவர் கோழிகளின் இரையும் சப்தம் அந்த நிசப்தமான இரவை இன்னும் எரிமலையை பயமுறுத்தியது.

அவனும் தலைதெறிக்க அரண்மனைக்குள் ஓடினான்.

அரண்மனை உள்ளே பயந்து கொண்டே” ஆரும்மா, ஆரும்மா நீ எங்கே இருக்கே”என்று மெதுவாக அழைத்து கொண்டே சென்றான். எங்கேயும் அவள் இருக்கும் சுவடே தெரியவில்லை.

அரண்மனை உள்ளே ஒரே ஒட்டடையும்,தூசியும்,தும்பலுமாக இருந்தது.அவன் நடந்த காலடி சத்தமே அவனை பயமுறுத்தியது.அவன் அழைத்த சத்தமே அரண்மனை சுவர்களில் மோதி எதிரொலித்து விகாரமாய் கேட்டது.

“யாருப்பா இங்கே நான் பேசுறதை இங்கே திரும்ப பேசறது?”என்று வியர்வை ஒழுக எரிமலை கேட்டான்.பயத்தில் அவன் உடம்பு முழுக்க வியர்வையால் தொப்பலாக நனைந்து இருந்தது.

“இந்த சண்டாளி வேற எங்கே போய் தொலைந்தாளோ என்று தெரியலயே..!” என்று புலம்பினான்.