“திருநெல்வேலி”என்றான் எரிமலை.
திருநெல்வேலியில் என்ன ஸ்பெஷல் எரிமலை.?
என்ன அல்வா தான்?.
ம்ம் கரெக்ட்,அந்த இருட்டு கடை அல்வா பற்றிய ரகசியத்தை தான் போய் விசாரித்து அதை பற்றிய ஒரு ஆர்டிக்கிள் எழுத சொல்லி இருக்கார் எடிட்டர்.அப்படியே சுடசுட திருநெல்வேலி அல்வா சாப்பிட இலவசமா நமக்கு கிடைக்கும்.
என்னது சுடசுட அல்வாவா…!எரிமலை வாயில் ஜொள்ளு வடிந்தது.
“ஆமாம்,சாப்பிட மட்டும் இல்ல.பார்சலும் கிலோ கணக்கில் கட்டி தருவாங்க.பின்ன பிரஸ் என்றால் சும்மாவா”ஆராதனா ஆசை காட்டினாள்.
மேலும்”ஆனா உனக்கு கொடுத்து வைக்கல எரிமலை.சரி நான் உனக்கு பதில் நம்ம சுடலை முத்துவை கூட்டிட்டு போறேன்.என ஆராதனா திரும்பி நடந்தாள்.
“ஆரும்மா…”என்று எரிமலை அழைத்தான்.
என்ன தீடீரென்று மரியாதை எல்லாம் பலமா இருக்கு?என திரும்பி கேட்டாள்.
“அது எப்பவுமே உன் மேல மரியாதை இருக்கு ஆரும்மா,நான் தான் அதை வெளிப்படுத்தி கொள்வது இல்லை.என்னை உன்கூட திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போயேன் பிளீஸ்”என கெஞ்சினான்.
“அப்போ அந்த ஆன்மிக அஞ்சல் ஆளவந்தார் கூட போறேன் என்று சொன்னே..”
“அந்த ஆளு கூட போனால் பொங்கல்,புளியோதரை மட்டும் தான் கிடைக்கும்.நான் உன் கூட வரேன்.”
சரி அப்ப சாயங்காலம் எக்மோர் வந்திடு.நெல்லை எக்ஸ்பிரஸ் A1 கோச்.
“அப்புறம் ஆரும்மா,இன்னொரு முக்கியமான விசயம்.திருநெல்வேலியில் பரோட்டா,சால்னா சூப்பரா இருக்கும்.அதை மட்டும் மறக்காமல் எனக்கு வாங்கி கொடு.”
“நான் வாங்கி கொடுத்தாலும்,சாப்பிடும் நிலையில் நீ இருப்பியா என்று பார்க்கலாம்”என்று ஆராதனா முணுமுணுத்தாள்.
பாதி வார்த்தைகள் மட்டும் எரிமலை காதில் விழ,”என்னது?”என எரிமலை பதறினான்.
“ஒன்னும் இல்லை எரிமலை,நீ போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு நான் வாங்கி தரேன்” என்று சொன்னேன்.
அப்ப ஓகே என்று எரிமலை தன் 32 பல்லும் தெரிய இளித்தான்.
வாடா வா,நான் கூட்டிட்டு போக போற இடத்துக்கு போன அப்புறம் பயத்தில் உனக்கு வாந்தி,பேதி புடிங்கிக்க போகுது.அப்புறம் ஏது பரோட்டா,சால்னா என்று சிரித்து கொண்டே ஆராதனா வெளியேறினாள்.
காலை 7 மணி நெல்லை எக்ஸ்பிரஸில் இருந்து ஆராதனா,எரிமலை உதிர்ந்தார்கள்.
ஆராதனா உடனே ஒரு நம்பருக்கு கால் செய்தாள்.
மறுமுனையில் ,”நான் பார்க்கிங் ஏரியாவில் தான் நின்று கொண்டு இருக்கேன்.நீங்க வாங்க மேடம்”
எரிமலை நீ காஃபி சாப்பிட்டு பார்க்கிங் ஏரியா வந்து விடு.நான் அங்கே வெயிட் பண்றேன்.
ஓகே ஆரும்மா.
வெளியே நின்று கொண்டு இருந்தவனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
மேடம், நீங்க வேற பார்க்க ரோஜாப்பூ கலரில் சும்மா தகதக வென்று மின்றீங்க.நீங்க போக போகிற இடம் ஒரு காமுகன் பேயா சுத்துற இடம்.கண்டிப்பாக உங்களை பார்த்தா விட மாட்டான் .அது உங்களுக்கு நல்லது இல்ல.
இதை கேட்ட ஆராதனா சிரித்தாள்.
இங்கே பாருப்பா,எனக்கு தெரிந்து யாராவது கடத்தல்காரர்கள் தான் கடத்திய பொருட்களை அங்கே பதுக்கி வைத்து இருப்பார்கள்.அதை பாதுகாக்க பேய்,பிசாசு என்று புருடா கட்டி விட்டு இருப்பார்கள்.எனக்கு இந்த பேய்,பூதம் மேல் எல்லாம் துளி கூட நம்பிக்கை கிடையாது.அங்கு நடக்கும் தப்பை வெளி கொண்டு வர வேண்டியது தான் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரின் வேலை.
சொன்னா கேட்க மாட்டேன்றீங்க,உங்களுக்கு டிரைவிங் தெரியுமா?
ம்,தெரியுமே.
அப்ப ஒன்னு பண்ணுங்க மேடம்,நான் அடிவாரம் வரை உள்ள சிங்கம்புணரி கிராமம் வரை தான் வருவேன்.நீங்க மலை மேல் உள்ள கோட்டைக்கு வண்டியை தனியா ஓட்டிட்டு போங்க.
