கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“மவனே … செல்வா … சுகன்யாவை நீ சந்தேகப்பட்ட விஷயத்தை என்னைத் தவிர வேற யாருகிட்டவாவது சொன்னியா?” சீனு தன் நார்மல் மூடுக்கு வந்துவிட்டான்.

“இல்லடா மாப்ளே! நீ தானேடா என் நண்பேன் … என் அட்வைசர் … என் பிலாசஃபர், என் கைட் எல்லாமே நீதானேடா … சாயந்திரம் மீனா கிட்ட சொல்லலாமான்னு நினைச்சேன்.. ஆனா சுகன்யா இப்ப மீனாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட், அவ கிட்ட சொல்லியிருந்தா நீ சொன்ன மாதிரி மீனாவே என்னை செருப்பால அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பா…”

“டேய் உன் வாழ்கையிலேயே நீ இதுவரைக்கும் ரெண்டு காரியம்தான் உருப்படியா பண்ணியிருக்கே!” சீனு சிரித்தான்.

“என்னடா மாப்ளே?”

“ஒண்ணு சுகன்யாவை நீ தைரியமா டாவு அடிச்சது; ரெண்டாவது நீ இன்னைக்கு அவளை சந்தேகப்பட்ட விஷயத்தை அவகிட்டவே சொல்லாம பொத்திக்கிட்டு இருந்தது …” சீனு இப்போது ஹா …ஹோ… வென உரக்க சிரித்தான்.

“டேய் .. டேய் …அடங்குடா கொஞ்சம் .. கொஞ்சம் கேப் கிடைச்சா … நீ உள்ளே நுழைஞ்சிடுவியே?”

“செல்வா … நீ சுகன்யாவை நிஜமாவே காதலிக்கறீயா?”

“என்னடா மாப்பிளே அப்படி கேட்டுட்டே?” செல்வா தன் முகம் சுருங்கி சிணுங்கினான்.

“உன் ஆபீசுல எத்தனை நாய் அவ பின்னால மூச்சு எறைக்க எறைக்க சுத்துச்சுங்க…அவ எவனையாவது திரும்பிப் பாத்தாளா?”

“இல்லே …”

“அவ உன் பின்னாலதானே வந்தா?”

“ம்ம்ம்..”

” நீ நெனவு இல்லாமே கிடந்தே ஹாஸ்பெட்டல்ல; அன்னைக்கு சுகன்யா உனக்காக பட்ட பாட்டை நீ பாத்து இருக்கணும்டா; அம்மா அவசரப்பட்டு என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துட்டு நீ போயிடுன்னாங்க; அவ உங்க அம்மா சந்தோஷமா இருக்கணும்ன்னு, டக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாம எழுந்து போய் மரத்தடியில உக்காந்துக்கிட்டு மூஞ்சை மூடிக்கிட்டு அழுதாடா; அதைப் பாத்த என் கண்ணுல தண்ணி வந்திடுச்சிடா அன்னைக்கு; உன் அப்பா அன்னைக்கே சொன்னாரு; இவதான் என் மருமவன்னு; மச்சான் காதல்லே நம்பிக்கை ரொம்ப முக்கியம்டா.. அவ உன் மேல தன் உயிரையே வெச்சிருக்காடா… அவளைப் போய் நீ சந்தேகப்பட்டுட்டியே?”

“மாப்ளே … தப்புத்தாண்டா … அதுக்காக என்னை நீ குத்திக்கிழிக்காதேடா… ஃப்ளீஸ்..” செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான்.

“ஆனா நான் சம்பத்தை ஒரு நாள் இல்ல ஒரு நாள் தேடிப்புடிச்சி நன்றி சொல்லத்தான் போறேண்டா?”

“ஏண்டா…”

“இன்னைக்கு அவன் உனக்கு சூடா அடியில ராடு வுட்டான்; அதனாலத்தான் நீ பொலம்பிக்கிட்டே என்னை உன் வூட்டுக்கு கூப்பிட்டே..”

“ம்ம்ம் ..
“ அவன் என்ன சொல்ல வருகிறான் என்று செல்வாவுக்கு நன்றாக புரிந்தது ஆனால் அதை அவன் சீனுவின் வாயால் கேட்க்க விரும்பினான்.

“நானும் உன் வூட்டுக்கு என் கட்டிங்கை பாதியில நிறுத்திட்டு வந்தேன்; ஆனா இங்கே அந்த எழுமலையான் புண்ணியத்துல எனக்கு தங்கமா ஒரு வாழ்க்கைத் துணை கிடைச்சிருக்கு; அந்த துணையால என் கட்டிங் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துடுத்து…” சீனு நன்றியுடன் செல்வாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
“சீனு …, ஆரம்பத்துலேருந்தே என் கல்யாண மேட்டர்ல ஒரு பிரச்சனைக்கு பின்னாடி இன்னொன்னுன்னு வர்றதை நெனைச்சா,
“ச்சீ” ன்னு ஆகிப் போயிடுச்சிடா” செல்வா சலித்துக்கொண்டவன் தன் இடது கையிலிருந்த பிளாஸ்டரினுள் ஆள்காட்டி விரலை நுழைத்து சொறிந்து கொண்டான்.