கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

“நீ பிரச்சனையை எப்படி பாக்கறே? அதுதான் ரொம்ப முக்கியம். பிரச்சனையை நீ பாக்கற கோணத்துலதான் அது சுலபமாவோ, இல்லே கஷ்டமாவோ மாறுது.”

“என்னடா சொல்றே?”

“செல்வா … சரியான பொண்ணு கிடைச்சு, ஸ்மூத்தா கல்யாணம் நடக்கறதுங்கறது ஒரு பிரச்சனைதான்… நான் இல்லேன்னு சொல்லலை…” சீனு, சிகரெட்டை தன் உதட்டில் பொருத்தி ஒரு முறை நீளமாக இழுத்தான். பின் நிதானமாக புகையை வெளியில் ஊதினான். சமயம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்தது. அவன் பின்மாலையில் குடித்திருந்த மதுவின் ஆதிக்கம் அவனை விட்டு முழுதுமாக நீங்கிவிட்டிருந்தது. நண்பர்கள் இருவரும் எப்போதும் போல் வெகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

சீனுவுக்கு குண்டு குண்டான கருப்பான கண்கள். அவனுடைய பார்வை எப்போதும் ஒரு இலக்கில் நிற்காமல் எட்டு திசையிலும் சுழன்று, சுழன்று வந்தாலும், எதிரில் இருப்பவன் கண்களைப் பார்த்தே, அவன் மனதில் ஓடும் எண்ணங்களை படித்துவிடும் ஆற்றல் இயற்கையாகவே அவனுக்கு இருந்தது. பெரும்பாலான சமயங்களில் அவனுடைய அபிப்பிராயமும் ஏறக்குறைய சரியானதாகவே இருந்திருக்கிறது. இந்த சீனுவிடம் மட்டும், பிரச்சனை எதுவானாலும், அதுக்கு ஒரு ரெடிமேட் தீர்வு இருக்கே, இதை நினைத்து செல்வா எப்போதும் தன்னுள் வியந்து போவதுண்டு.

“ம்ம்ம் …அதனாலத்தான் நீ கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தியா?” செல்வா சீனுவின் வாயிலிருந்து வெளிவந்த புகை வளையங்களை வெறித்துக்கொண்டிருந்தான்.

“நம்ம வேலாயுதத்தையே எடுத்துக்கோ.. கோமதி நல்லப் பொண்ணு! … முகத்தை பாரு … அமைதியா, களையா ஏத்தி வெச்ச குத்து விளக்கு மாதிரி இருக்கா! … என்ன கொஞ்சம் ஒல்லியா ஒடிசலா இருக்கா… ஒரு குழந்தை பொறந்தா அவளும் எல்லோரையும் மாதிரி ஊதி போயிடுவா; ஆனா அவன் எவளுக்கு மாரு பெரிசா இருக்கோ அவளைத்தான் கட்டிக்குவேன்னு, ஊரெல்லாம் ஃபிகர் உஷார் பண்றேன்னு திரிஞ்சிக்கிட்டு கிடந்தான்…”

“இது எல்லா ஆம்பளை பசங்களுக்கும் இருக்கற ஒரு ஞாயமான ஆசைதானேடா ..?” செல்வாவின் உதடுகளில் புன்னகை எட்டிப்பார்த்தது.

“மனசுக்கு எப்பவும் திருப்தியே கிடையாதுடா …?”

“ம்ம்ம் …”

“நீ ஆஸ்பத்திரியில கெடந்தே பாரு … இன்சிடெண்டலி, அப்ப அவனும் நாலு நாள் ஜூரத்துல சோறு தண்ணியில்லாம அவன் ரூம்ல கெடந்திருக்கான் … நானும் உன் கூட ஸ்லைட்லி பிஸியா? அவனுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ண முடியலை; அவன் வீட்டுக்காரனும் தன் பொண்ணைப் பாக்க ஊருக்குப் போயிருந்திருக்கான் … ஊர்ல அண்ணன் அண்ணியோட சண்டை – தனியா கிடந்து முதல் ரெண்டு நாள் அல்லாடியிருக்கான்…”

“ம்ம்ம்..”

“விஷயம் தெரிஞ்சு கோமதி அவன் ரூமுக்கு ஓடி … வாந்தி எடுத்துட்டு விழுந்து கெடந்தவனை டாக்டர் கிட்ட காட்டி, மருந்து வாங்கி குடுத்து … ரூமெல்லாம் சுத்தமா கழுவி … அவன் லுங்கியை தோச்சிப்போட்டு, ஆத்தாளுக்கு தெரியாம, தன் வூட்டுலேருந்து, வாய்க்கு ருசியா மொளகு ரசம் வெச்சி, சோறு ஆக்கியாந்து போட்டிருக்கா …”

“ரியலி … வெரி நைஸ் … அவ்வள நல்லப் பொண்ணா அவ…?”

“வாழ்க்கையில தன் பொண்டாட்டியா வரப் போறவளுக்கு, கிண்ணுன்னு உடம்பு முக்கியமா? இல்லே குணம் முக்கியாமான்னு இப்ப நம்ம வேலுக்கு புரிஞ்சு போச்சு….”