கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

பக்கத்திலிருந்த செல்லை எடுத்து சங்கர் மணியைப் பார்த்தான். டிஜிட்டல் 04:07:13 என மின்னியது. இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் உடம்புக்கு விழிப்பு வந்துட்டுதே? ஒரு வாரமாச்சு. உடம்பும், மனசும் வேணி… வேணின்னு… கட்டுக்கு அடங்காமா பேயா அலையுதுங்க; வேணியை எழுப்பலாமா? மனசிருந்தா கட்டிக்கிட்டு கொஞ்சுவா … சமயத்துல மிரளுவா … அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவுல வீண் எரிச்சல்தான் மிச்சம். அசந்து தூங்கும் தன் கண்மணியாளை எழுப்ப அவன் மனம் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை.

வெளியில ஹால்லே அப்பா தூங்கிகிட்டு இருக்கார். இவரு தன் ரூமுல படுக்காம இங்க ஏன் சோஃபாவுல முடங்கி கெடக்கறாரு? இந்த நேரத்துல எழுந்து காமன் டாய்லெட்டுக்கு போனா, அவரோட தூக்கமும் கெட்டு போகும். அட்டாச்டு பாத்ரூமை அவன் பொதுவாக உபயோகிப்பதில்லை. வேணியின் ஏக போக ஆளுகையில் அது இருந்தது.

வெஸ்டர்ன் டாய்லெட் அவனுக்கு ஏனோ சுத்தமாக ஒத்து வருவதில்லே. அதை உபயோகிப்பதில் அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம். டூர்ல போனாலும், இண்டியன் டாய்லெட்டைத்தான் அவன் தேடுவான். கூட வர ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட அவனைச் சிரிச்சு சிரிச்சு கேலி பண்ணுவானுங்க. நான் என்ன பண்ண? மனசுக்கு ஒவ்வலேன்னா, வயிறு கூட சீக்கிரத்துல தளர மாட்டேங்குது. இதைத்தான் பதிலாக அவன் சொல்லுவான்.

ஆபத்துக்கு பாவமில்லே!. ஓசை எழுப்பாமல் அட்டாச்டு பாத்ரூமுக்குள் சென்றவன் கீசரை ஆன் செய்தான். நிதானமாக தன் வயிற்றை தளர்த்திக்கொண்டான். பல்லைத் துலக்கி, சுடு நீரீல் வாயை நன்கு கொப்புளித்து, சோப்பு போட்டு முகம் கழுவி வெளியே வந்தான். அவன் உடலும் மனமும் தந்த புத்துணர்ச்சியுடன் மெல்ல விசிலடித்தவாறு படுக்கையறைக்குள் நுழைந்தான். குப்புறப் படுத்திருந்த திரட்சியான வேணியின் பின்புறம் அவனை வா வா என அழைத்தன.

கம்பெனி இன்ஸ்பெக்ஷனுக்கு போன சமயத்தில், ஒரு மாலையில், தங்கியிருந்த இடத்துக்குப் அருகாமையிலிருந்த, தியான மையத்துக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சங்கர் போயிருந்தான். சுத்தமான வெள்ளையுடை அணிந்திருந்த பெரியவர் ஒருவர், சப்பனமிட்டு தரையில் உட்க்கார்ந்து, முகத்தில் மாறாத புன்னகையுடன், சரளமான ஆங்கிலத்தில், மென்மையான குரலில், பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர்களே, இருபத்து நான்கு மணி நேரத்தில், ஒரு இருபது நிமிஷம், எளிதான உடல்பயிற்சிகளுக்குன்னு சமயத்தை ஒதுக்குங்க. அதோடு ஒரு இருபது நிமிஷம் தியானத்துக்குன்னு ஒதுக்குங்க. தியானங்கறது, மனசுக்கான பயிற்சி. உங்க உடலை அதிகமாக வருத்தாதீங்க. முறையில்லாத விருப்பங்களை மனசுக்குள்ள குவிச்சுக்கிட்டு, மனசோட சண்டைப் போடாதீங்க. மனசுக்கும் வலிக்கும். நாளடைவில மனசு வருந்தி, இறுகிவிடும். இதைத்தான் நீங்க மன உளைச்சல்ன்னு சொல்றீங்க. அதிகமாக இறுகிய மனம், நீங்கள் தினசரி வேலைகளை செய்யக்கூட முடியாத நிலைமையில் உங்களைத் தள்ளிவிடும்.

தொடர்ந்து தியானத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துல பழுகுங்க. முறையான எளிய பயிற்சிகளால், உங்கள் மனதை இலகுவாக்க முடியும். ஒரு மாசத்துல உங்க உடம்பும், மனசும் எப்படி தளருதுன்னு வந்து சொல்லுங்க. மனம் இலகுவாக இருந்தால், நீங்கள் செய்யற எந்த காரியத்தையும் சுலபமாக செய்ய முடியும். ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், யார் வேண்டுமானாலும் தியானத்தைப் பழகலாம்.

ஆரம்பத்துல தியானத்தை, உங்கள் மதத்தோடு, உங்கள் மதக்கொள்கைகளோடு, உங்களின் இறை நம்பிக்கையோடு, உலகத்தை நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கற தனிப்பட்ட உணர்வுகளோடு, சிறிதும் சம்பந்தப்படுத்தாதீங்க. வெறுமனே கண்ணை மூடி, அலையற மனசை அதும் போக்குல விடுங்க. நிச்சயமாக உங்கள் உடல் தளரும். மன இறுக்கம் குறையும். மனசுல
“நிஜமான ஓய்வு” என்பது என்னன்னு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அதற்குப்பிறகு தியானம் உங்களை விட்டாலும், நீங்கள் அதை விடமாட்டீர்கள்.