எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 53

மும்தாஜுடன் முன்பே இருந்த அறிமுகத்துடன்.. இப்போது வகுப்புக்கு வந்த இந்த பத்து நாட்களில்.. அவளுடனான அசோக்கின் நெருக்கம் நிறையவே அதிகரித்திருந்தது..!! மாலை நேரத்தில் வகுப்பு முடிந்தவுடன்.. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த சிறிய பூங்காவில்.. விளையாடுகிற குழந்தைகளையும், வாக்கிங் செல்கிற நோயாளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே.. சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிப் போனது..!! ஆரம்பத்தில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டவர்கள்.. பிறகு பர்சனல் விஷயங்களைக்கூட பகிர்ந்து கொண்டனர்கள்..!!

“இந்த புக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்..!! உங்களுக்கு படிக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. எனக்காக கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. சரியா..??”

மும்தாஜ் நீட்டிய புத்தகத்தை வாங்கிகொண்டான் அசோக்.. பக்கங்கள் நிறைந்த தடிமனான புத்தகம்..!! புன்னகை படிந்திட்ட உதட்டுடன்.. புத்தகத் தலைப்பின் மீது பார்வையை வீசியவனுக்கு.. ஒரு புதுவித ஆச்சரியம்..!!

“தட்டுங்கள் திறக்கப்படும்..!!”

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கிய புத்தகம் என்பது.. அந்த தலைப்பை பார்த்ததுமே புரிந்து போனது..!! அட்டையை புரட்டி பொருளடக்க பட்டியல் பார்த்து.. அந்த சந்தேகத்தை உறுதியும் செய்துகொண்டான் அசோக்..!! அப்படியே மும்தாஜை ஏறிட்டு.. மெலிதான ஒரு புன்முறுவலுடன் சொன்னான்..!!

“க்ரேட்..!!!”

“எ..என்ன.. என்ன க்ரேட்..??”

“இல்ல.. ஒரு முஸ்லிம் பொண்ணு.. ஒரு ஹிந்து பையனுக்கு.. கிறிஸ்டியன் புக் படிக்க தர்றீங்களே.. அதை சொன்னேன்..!!”

“ஹஹ.. இதுல என்ன இருக்கு..?? நான் எல்லா மத கொள்கைகளையும் படிப்பேன்.. எனக்கு எல்லா மதங்கள் மேலயும் நம்பிக்கை உண்டு..!!”

“ஓ..!! எனக்கு எந்த மதத்துலயும் நம்பிக்கை இல்லை..!!”

“ம்ம்.. தெரியும்..!! இந்த புக் படிச்சு பாருங்க.. அந்த நம்பிக்கை வர சான்ஸ் இருக்கு..!! மனுஷங்க பண்ற தப்புக்கு மதங்கள் என்ன பண்ணும்னு தோணும்..??”

“அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புக்ல..??”

“ம்ம்ம்ம்ம்.. எப்படின்னு சொல்ல தெரியல..!! ஜீசஸோட வாழ்க்கை சரிதம்.. அவரோட எண்ணங்கள்.. போதனைகள்.. எல்லாம் படிக்கிறப்போ.. மனசு அப்படியே ப்யூர் ஆகிப்போய்.. ஒருமாதிரி லேசான ஃபீல் கெடைக்கும்..!! புத்தில ஏதாவது குழப்பம் இருந்தா.. அது உடனே சரியாகிடும்..!! படிச்சு பாருங்க.. உங்களுக்கும் புரியும்..!!”

“ஹ்ஹ.. ஓகே.. ட்ரை பண்றேன்..!!”

ஆர்வம் இல்லை என்றாலும்.. மும்தாஜின் மனதை நோகடிக்க விரும்பாதவனாய்.. அந்த புத்தகத்தை தனது பேகுக்குள் திணித்துக் கொண்டான் அசோக்..!! ஒரு சில வினாடிகள் எதையோ யோசித்தவன்.. பிறகு தானும் அவளுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன்..

“நா..நான்.. நெறைய ஹாரர் மூவி கலக்க்ஷன்லாம் வச்சிருக்கேங்க.. உங்களுக்கு எதாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. பார்ப்பிங்களா..??” என்று அப்பாவியாக கேட்டான்.

“ஹாரர் மூவினா.. பேய்ப்படமா..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“அய்யோ.. நமக்கு அதுலாம் ஆகாதுங்க.. உவ்வே..!!” – மும்தாஜிடம் ஒரு முகச்சுளிப்பு.

“இ..இல்லைங்க.. இ..இது நீங்க நெனைக்கிற மாதிரி பேய் இல்ல.. வேற மாதிரி இருக்கும்..!!”

“வாட்..?? வேற மாதிரி பேயா..??”

“ம்ம்.. எல்லாம் ஜப்பானீஸ் ஹாரர் மூவிஸ்..!!”

“ஓ.. என்ன வித்தியாசம்..??”

“இந்த ஹாலிவுட் பேயிங்கதான் அசிங்கமா அருவருப்பா இருக்குங்க.. பாத்தாலே பயமா இருக்கும்..!! ஜப்பான் பேயிங்கள்லாம் அப்படி இல்ல.. நல்லா பவுடர், கண்மை, லிப்ஸ்டிக்லாம் போட்டுக்கிட்டு.. அழகா, செமக்யூட்டா இருக்குங்க..” அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டே போக,

“ஹாஹாஹாஹாஹாஹா..!!” மும்தாஜுக்கு சிரிப்பை நிறுத்த வெகுநேரம் ஆனது.

நெடுநாட்களுக்கு அப்புறம் மும்தாஜ் மனம் விட்டு சிரித்ததற்கு மறுநாள்..!!

வடபழனி முனுசாமி சாலையில்.. வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் அசோக்.. பைக்கின் பின்சீட்டில் மும்தாஜ்..!! இரண்டு கால்களையும் ஒருபக்கமாக போட்டு அமர்ந்திருந்தாள்.. அசோக்குடைய முதுகை உரசிவிடக்கூடாது என.. மிகவும் பிரயத்தனப்பட்டு உடலை ஒடுக்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய அவஸ்தையை புரிந்துகொண்ட அசோக்.. தன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்..!! இப்படி ஒரு பிரயாணத்துக்கு காரணமே மும்தாஜ்தான்..!!

“எ..என்னாச்சுன்னு தெரில அசோக்.. வ..வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது..!! எ..என்னை கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ண முடியுமா..??”

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please 🙏

Comments are closed.