எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“சொ..சொல்றேன்..!!”

அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!! அன்னைக்கு ஒருநாள்.. ஃபுட்கோர்ட்ல ஒருத்தனை செருப்பால அடிக்க போனேனே.. ஞாபகம் இருக்கா..?? அதுக்கு முன்னாடி.. எத்தனை பேரை நெஜமாவே செருப்பால அடிச்சிருக்கேன் தெரியுமா..?? ஹ்ஹ.. என் லைஃப்ல.. நெறைய மோசமான ஆம்பளைங்களை பார்த்து பார்த்து.. எல்லா ஆம்பளைங்க மேலயுமே வெறுப்பு..!! என் வாழ்க்கைல எந்த ஆம்பளைக்கும் எடம் இல்லைன்ற முடிவோடதான் நான் இருந்தேன்..!!”

“ஓ..!! ஆம்பளைங்க மேலேயே வெறுப்புனா.. அ..அப்புறம் எதுக்கு என்கிட்ட..”

“பேசுன முதல் நாளே ஐ லவ் யூ சொன்னேன்னுதான கேக்குற..??”

“ம்ம்..!!”

“அதுதான் விதி..!! இல்லனா.. என்னோட திமிர்னு கூட சொல்லலாம்..!!”

“பு..புரியல..!!”

“புரியிற மாதிரியே சொல்றேன்..!! கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லிட்டு இருந்தேன்ல.. அந்த டேபிள் பத்தி..!!’

“ம்ம்..!!” அசோக் மீராவை ஒரு குழப்பப்பார்வை பார்த்தான்.

“நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்ட முதல் நாள்.. ஐ மீன்.. நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்ன அன்னைக்கு.. ஃபுட்கோர்ட்டுக்கு நான் வந்தப்போ.. அந்த டேபிள் காலியா இல்ல அசோக்.. இட் வாஸ் ஆக்குபைட்..!!”

சொல்லிவிட்டு மீரா அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனுக்கு இப்போது ஏதோ புரிவது மாதிரி இருந்தது. அவனுடைய முகத்தில் மெலிதாக ஒரு திகைப்பு பரவ ஆரம்பிக்க, மீரா தொடர்ந்து பேசினாள்.

“சாப்பாடு வாங்காம.. காலியா கெடந்த இன்னொரு டேபிள்ள உக்காந்திருந்தேன்..!! கொஞ்ச நேரம் கழிச்சு.. எனக்கு பின் பக்கமா.. நான் உக்காந்திருந்ததுக்கு பக்கத்து டேபிள்ள.. நீங்க நாலு பேரும் வந்து உக்காந்திங்க..!!” இப்போது அசோக்குக்கு முழுதுமே புரிந்து போனது.

“மீ..மீரா.. அது.. அ..அன்னைக்கு..” என்று தடுமாறினான்.

“என்னை நீங்க கவனிக்கல.. ஆனா நீங்க பேசினதை எல்லாம் நான் கவனிச்சுட்டு இருந்தேன்..!! அதுக்கு முதல்நாள்.. ‘என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்’னு நீ உன் ஃப்ரண்ட்ஸ்ட்ட சவால் விட்டது.. அப்புறம் நான் இன்னொருத்தனை அடிச்சதும், நீ பேசாம திரும்ப வந்துட்டது.. எல்லாம் பேசிக்கிட்டிங்க..!!”

“ஆ..ஆமாம்..!!”

“நீங்க பேசிக்கிட்டதை கேட்டப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா அசோக்..?? ‘பெட் கட்டியாடா வெளையாடுறீங்க.. பொண்ணுகன்னா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிட்டமாடா..??’ன்னு.. உங்க சட்டையை புடிச்சு, அப்படியே பளார் பளார்னு விடலாம் போல இருந்தது..!!”

“மீ..மீரா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம்..”

“இரு அசோக்.. நான் சொல்லி முடிச்சுடுறேன்..!! ம்ம்ம்… அப்போத்தான் நீ அப்படி சொன்ன.. ‘அவ இன்னைக்கு வரட்டும்.. அவட்ட பேசி.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்’னு கெத்தா சொன்ன..!! அதைக் கேட்டப்புறந்தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை.. திமிர் புடிச்ச யோசனை..!! ‘என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்னா சவால் விடுற..? வா.. நான் உனக்கு பைத்தியம் புடிக்க வச்சு காட்டுறேன்’னு..!! மனசுல ஒரு ப்ளானோட.. சாப்பாடு வாங்க எழுந்து போனேன்..!! சாப்பாடு வாங்கிட்டு வர்றப்போ.. நீங்க என்னை பாத்து சீக்ரட்டா ஏதோ பேசிட்டு இருந்தீங்க.. அது கூட நல்லா ஞாபகம் இருக்கு.. ‘வாடா மவனே.. வந்து பேசு.. வா..’ன்னு ஓரக்கண்ணால உன்னை பாத்து முறைச்சுக்கிட்டேதான் போனேன்..!!”

மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகம் இப்போது வெளிறிப் போயிருந்தது. அவனுடைய தலை வேறு லேசாக கிறுகிறுப்பது மாதிரியான உணர்வு. கண்களை இரண்டு மூன்று முறை, இறுக்க மூடி மூடி திறந்து கொண்டான். தலையை லேசாக உதறியவாறே தடுமாற்றமாக சொன்னான்.

“நீ.. நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டினதுக்காக நான் உன்கூட..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மீரா இடைமறித்து,

“தெரியும் அசோக்.. நீ சொல்லனும்னு தேவை இல்ல..!! இத்தனை நாளா உன்கூட பழகிருக்கேன்.. இப்போ உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்.. அதைக்கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது..?? என் மேல வச்சிருந்த காதல்ல.. நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தேன்னு.. என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது..!! ஆனா.. அதை நான் புரிஞ்சுக்குறதுக்கு கொஞ்ச நாள் ஆச்சு..!! ஆரம்பத்துல உன்னை பத்தி நான் என்ன நெனச்சிருந்தேன் தெரியுமா..?? பணத்திமிர் எடுத்த.. ஆம்பளைன்ற கர்வம் புடிச்ச.. ஒரு ‘Spoiled Brat’-னுதான் நெனச்சிருந்தேன்..!! ஹ்ஹ.. நாம பேச ஆரம்பிச்சப்போ உன்னோட இன்டென்ஷன் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. என்னோட இன்டென்ஷன் என்னன்னு உனக்கு தெரியுமா..??”