எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“அ..அது.. அது வந்து.. க்ளோஸ்தாங்க.. ஆனா அட்ரஸ் சொல்லிக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்லன்னு வச்சுக்கங்களேன்..!! ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்.. தண்ணி கூட அடிச்சிருக்கோம்.. ஆ..ஆனா இந்த அட்ரஸ் மட்டும் எப்படியோ ஷேர் பண்ணிக்காமலே விட்டுட்டோம்..!! இப்போ அர்ஜன்ட்டா அவங்கள மீட் பண்ற மாதிரி ஒரு சிச்சுவேஷன் ஆகிப்போச்சு.. அதான்..!! ப்ளீஸ்ங்க.. கொஞ்சம் ஹெல்ப்புங்க..!!”

வேணுவின் உளறலில் அந்தப்பெண் கன்வின்ஸ் ஆகாவிட்டாலும்.. அவனுடைய குரலில் தொனித்த அந்த கெஞ்சல்.. அவளை மனம் இரங்க செய்தது..!! தனது கம்ப்யூட்டரை இயக்கியவள்.. மானிட்டரை பார்த்துக்கொண்டே வேணுவிடம் கேட்டாள்..!!

“கோர்ஸ் எப்போ முடிச்சாங்கன்னு சொன்னீங்க..??”

“லாஸ்ட் மன்த்..!!”

“என்ன கோர்ஸ்..??”

“மாயா..!!”

“அவங்க பேரு..??”

“மீரா..!!” வேணு கூலாக சொல்ல,

“மீராவா..??” அவள் திடீரென அதிர்ந்தாள்.

“ஆமாங்க..!!” என்ற வேணு அசோக்கிடம் திரும்பி,

“அப்பா பேரு என்ன மச்சி..??” என்று கேட்டான்.

“சந்தானம்..!!” என்று அசோக் சொன்னதும், வேணு இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி,

“ஆங்.. எஸ்.மீரா’ன்னு போட்டு தேடிப்பாருங்க..!!” என்றான். அவளோ வேணுவை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

“பொண்ணா..????” என இறுக்கமாக கேட்டாள்.

“ஆ..ஆமாம்..!! அப்புறம்.. மீரான்னா.. பொண்ணுதான..??” வேணு அப்பாவியாக இளிக்க, அவள் இப்போது மானிட்டரை படக்கென ஆஃப் செய்தாள்.

“இல்லைங்க.. பொண்ணுங்க அட்ரஸ்லாம் தர்றது இல்ல..!!”

“ஹலோ ஹலோ.. ப்ளீஸ்ங்க..!!” வேணுவுடன் சேர்ந்து இப்போது கிஷோரும் அந்தப்பெண்ணிடம் கெஞ்சினான்.

“ப்ச்..!! நோ.. ஐ கான்ட்..!! உங்க நாலு பேரையும் பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு.. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா.. யார் பதில் சொல்றது..?? அட்ரஸ்லாம் தர முடியாது.. எடத்த காலி பண்ணுங்க..!!”

“அப்படிலாம் சொல்லாதிங்க மேடம்.. நீங்கதான் எங்களுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்..!! எந்தப் பிரச்சனையும் வராது மேடம்.. எங்களை பாத்தா பிரச்னை பண்றவங்க மாதிரியா தெரியுது..?? நாங்க ரொம்ப அப்பாவிங்க மேடம்..!! ப்ளீஸ்.. கொஞ்சம் மனசு வைங்க..!!”

“ஷ்ஷ்ஷ்.. நான்தான் முடியாதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கெஞ்சிட்டு இருக்கீங்க..?? கெளம்புங்க..!!”

“ஹையோ.. ரொம்ப முக்கியமான விஷயம் மேடம்.. அவங்க அட்ரஸ் எப்படியாவது எங்களுக்கு வேணும்.. எங்க நெலமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்..!!”

“என் நெலமையை நீங்க மொதல்ல புரிஞ்சுக்கங்க..!!”

“ப்ளீஸ் மேடம்..!! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! நீங்க மனசு வச்சா கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்..!!”

அசோக்கை தவிர மற்ற மூன்று பேருமே, இப்போது அந்தப்பெண்ணை கெஞ்சினர். வெட்கமில்லாமல் அவர்கள் கெஞ்சுவதை சகிக்க முடியாமல், அவளும் இப்போது சற்றே இறங்கி வந்து..

“சரி.. அப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றீங்களா..??”

“என்ன..??”

“எங்க மேனேஜரை பார்த்து பெர்மிஷன் கேளுங்க..!! அவர் சொன்னா.. நான் உங்களுக்கு அட்ரஸ் தர்றேன்..!!”

“ஓகே..!! அப்போ.. உங்க மேனஜரை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மன்ட் கொடுங்க..!!”

“அவர் 9’o clock-தான் வருவாரு.. அதுவரைக்கும் கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க..!!” அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே சோபாவை கைகாட்டினாள்.