எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“காரைக்குடி – செட்டிநாடு உணவகம்..!!”

“ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!”

ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!!

“பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!” – மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள்.

அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!!

“என் அப்பா பேரு சந்தானம்..!!”

“ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??”

“ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!”

யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!!

“உன்னோட ஃபேவரிட் மூவி எது..??”

“ம்ம்… டைட்டானிக்..!!

அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!!

“ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??”

“ம்ம்… சோனியா..!!”

டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!!

அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!

“ஹலோ ஹனிபனி..!!” என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!!

“வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!” என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார்.

அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி..

“என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!”

“என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!” என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! ‘எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?’ என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!!

இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! ‘அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??’ அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்..