எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“9’o clock-ஆ..?? அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா..?? என்ன மேடம் நீங்க..?? நீங்களே அந்த கம்ப்யூட்டர்ல அடிச்சு பாத்து..”

“ஹலோ..!! என்னால அவ்வளவுதான் பண்ண முடியும்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இஷ்டம் இருந்தா, வெயிட் பண்ணி மேனேஜரை பாருங்க.. இல்லனா எடத்த காலி பண்ணுங்க..!! எனக்கு வேலை நெறைய இருக்கு.. வெட்டியா பேசிட்டு இருக்க நேரம் இல்ல..!!”

கறாராக சொன்ன அவள் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து, இவர்கள் மேலிருந்த கடுப்பை கீ போர்டிடம் காட்ட ஆரம்பித்தாள். அசோக்கும் நண்பர்களும் வேறு வழியில்லாமல், மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்கள். அவ்வாறு அமர்ந்ததுமே.. கிஷோர் அசோக்கை பார்த்து..

“டேய் மச்சி.. அந்த மேனேஜர் வர்றதுக்குள்ள.. நீ போய் சாப்பிட்டுட்டு வந்துடு..!!” என்றான் கரிசனமாக.

“இல்லடா.. அந்த ஆள் வரட்டும்..!! அட்ரஸ் வாங்கிட்டே கெளம்பிடலாம்..!!”

“ப்ச்..!! அறிவில்லாம பேசாத.. நாங்களாவது பரவால.. நீ நைட்டும் சாப்பிடல..!! அட்லீஸ்ட் அவளை தேடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாம்..?? போ.. போய் சாப்பிட்டு வா.. போ..!! நாங்க இங்க வெயிட் பண்ணி.. அந்த ஆள் வர்றானான்னு பாக்குறோம்..!! சரியா..??” என்று கடுமையாக சொன்ன கிஷோர், வேணுவிடம் திரும்பி..

“டேய்.. கூட்டிட்டு போடா..!!” என்றான்.

“வாடா மச்சி.. போலாம்..!!”

என்றவாறு வேணுவும் அசோக்கின் புஜத்தை இறுகப் பற்றினான். அடுத்த இரண்டாவது நிமிடம்.. அசோக்கும் வேணுவும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்..!!

“நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! சும்மா.. செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா.. நம்மட்ட இருந்து எஸ்கேப் ஆயிட முடியுமா..?? உன்கூட நூறு நாள் பழகிருக்கா மச்சி.. எவ்ளோ பேசிருப்பா.. என்னன்னலாம் சொல்லிருப்பா.. ஈஸியா புடிச்சுடலாம் மச்சி..!! நீ டென்ஷன் ஆவாத..!!”

வேணு சொன்ன ஆறுதல் அசோக்குக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் அவனுடைய புத்தியில் தீ கொளுத்தி போட்டது. மீராவுடன் அவன் பழகிய அந்த நூறு நாட்களில், அவள் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை எல்லாம், மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே வந்தான்..!!

ஃபுட் கோர்ட் வந்து சேர்ந்தது..!! வாசலுக்கு முன்பாக வேணு காரை நிறுத்த.. அசோக் இறங்கிக்கொண்டான்..!!

“நீ உள்ள போய் வெயிட் பண்ணு மச்சி.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..!!”

சொன்ன வேணு, ஃபுட் கோர்ட்டின் கீழ்த்தளம் நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான். அசோக் படியேறி ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததுமே.. அவன் காலடியை வந்து மோதியது அந்த பலூன்..!! இரத்த நிறத்தில்.. இதய வடிவத்தில்.. அழகான, மென்மையான.. அந்த பலூன்..!! அந்த பலூனுக்கு பின்னாடியே.. நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.. பலூனை பிடிக்கிற உத்வேகத்துடன் வேகமாக ஓடிவந்தான்..!! அவனுக்கு பின்னால்.. அவனுடைய அம்மா..

“டேய் சூர்யா.. சூர்யாஆஆஆ..!! ஓடாத.. நில்லு..!! நில்லுன்றேன்ல..?? டேய்..!!!!!”

என்று கத்தியவாறே, ஒருவித பதைபதைப்புடன் ஓடிவந்தாள். அசோக் குனிந்து அந்த பலூனை எடுத்தான். அந்த சிறுவனிடம் நீட்டினான்.