எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“……………………..”

“ஆனா.. ஆனா நேத்து அப்படி நடந்ததுக்கப்புறம்.. இனியும் என்னை நானே ஏமாத்திக்கிறதுல எந்த அர்த்தம் இல்லன்னு எனக்கு புரிஞ்சு போச்சு..!! நேத்து நீ என்னை தொட்டப்போ, என்னால தடுக்க முடியல அசோக்.. என்னை அணைச்சப்போ, வேணாம்னு சொல்ல வாய் வரல.. நீ முத்தம் தந்தப்போ, எனக்கு விலக மனசு இல்ல.. எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது..!! வெக்கத்தை விட்டு சொல்றேன் அசோக்.. உன் உதட்டால அப்படியே என்னை உறிஞ்சிக் குடிச்சிட மாட்டியான்னு இருந்தது.. உன் நெஞ்சுல சாஞ்சிருந்தப்போ.. இப்படியே சோறு தண்ணி இல்லாம கிடந்திட மாட்டோமான்னு தோணுச்சு..!!”

“……………………..”

“இனிமேலயும் இது காதல் இல்லன்னு.. என் மனசாட்சியை என்னால எப்படி ஏமாத்த முடியும் அசோக்.. சொல்லு..!!”

மீரா காதல் தவிப்புடன் கேட்டாள். அசோக் ஏனோ இப்போது மீண்டும் தன் முகத்தை சுருக்கினான். அவனுடைய முகம் ஏதோ ஒரு வலியில் துடிக்கிற மாதிரி காட்சியளித்தது. ஒருவித அவஸ்தையில் தத்தளிப்பவன் போல தடுமாறினான். கண்களை இறுக மூடியவன், தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டான்.

“எ..எனக்கு.. த..தலை சுத்துற மாதிரி இருக்குது மீரா..!!”

“ஹ்ம்ம்.. நான் சொன்னது குழப்பமா இருக்கா..??”

“இ..இல்ல.. இது நெஜமாவே..!!”

திணறலாக சொன்ன அசோக், படக்கென தலையை உதறிக்கொண்டான். இமைகளை ஒருமுறை அகலமாக விரித்து, விழித்து பார்த்தான். தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டவன், பிறகு ஒரு அவஸ்தை பெருமூச்சுடனே சொன்னான்.

“எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மீரா.. நீ சொ..சொன்னதெல்லாம்.. ஷாக்கிங்கா இருக்கு..!! ஃப்ரண்ட்ஸ்கிட்ட சவால் விட்டதெல்லாம் சும்மா.. அ..அதுக்கு முன்னாடியே நீ என் மனசுல இருந்த.. பெட் கட்டினதுக்காகலாம் நான் உன்கூட பேச ஆரம்பிக்கல.. I always wanted to have a serious relationship with you..!!”

“I know..!!”

“நானும்.. உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. உ..உன்மேல எனக்கு இவ்வளவு காதல் இருந்ததான்னு கேட்டா.. சத்தியமா இல்லைன்னுதான் சொல்லணும் மீரா.. எல்லாம் உன்கூட பழக ஆரம்பிச்சப்புறந்தான்..!! உ..உன்கூட பேச ஆரம்பிச்ச அந்த செகண்ட்ல இருந்து.. நான் எந்த அளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..?? ஆனா நீ.. ஒவ்வொரு நாளும் உன் மனசுக்குள்ளயே போராடிட்டு இருந்திருக்குற..!!”

“ம்ம்..!!” மீராவுக்கு இப்போது மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“எ..என்னை டாமினேட் பண்ணின.. டார்ச்சர் பண்ணினன்லாம் என்னன்னவோ சொல்ற.. ஆனா.. நான் எதையும் அப்படி எடுத்துக்கல மீரா..!! அதெல்லாம்தான் உன்னோட குணம்னு எடுத்துக்கிட்டேன்..!! உ..உன்னோடதான் என் லைஃப்ன்னு முடிவானப்புறம்.. உன்னோட குணத்துக்கும் மதிப்பு கொடுக்குறதுதான.. உண்மையான காதலா இருக்க முடியும்..?? நான் என் காதலுக்கு எப்போவும் உண்மையாத்தான் இருந்தேன் மீரா..!!”

“தெ..தெரியுண்டா..!!”

முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் இப்போது முணுக்கென்று வெளிப்பட்டு, மீராவின் கன்னம் நனைத்து ஓடியது. அசோக் இப்போது தனது விரல்களால் அவளுடைய கண்ணீரை துடைத்தான்.

“ஹேய்.. இன்னும் ஏன் அழற.. அதான் உன் மனசுல உள்ளதெல்லாம் சொல்லிட்டியே.. எ..என் மனசையும் நல்லா புரிஞ்சுக்கிட்டியே..?? இப்போ.. நெஜமாவே என் மேல உனக்கு காதல் வந்திடுசுல.. அது போதும் எனக்கு..!!” என்றவன் அவளது கைகள் ரெண்டையும் தனது கைகளுக்குள் வைத்து, மென்மையாக முத்தமிட்டவாறே தொடர்ந்து பேசினான்.

“எ..என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமாவே நான் நெனைக்கல மீரா..!! இதை இத்தோட மறந்துட்டு.. நாம எப்போவும் போல இருக்கலாம்.. ம்ம்..?? சரியா..??”

கேட்டுவிட்டு அசோக் மீராவை ஏறிட.. அவளோ தவிப்பில் துடிக்கிற முகத்துடனும்.. அழுத்தி கடிக்கப்பட்ட உதடுகளுடனும்.. ‘இல்லை.. அது நடக்காது..’ என்பது போல தலையை அசைத்தாள். அசோக் இப்போது சற்றே குழப்பமுற்றவனாய் மீராவை பார்க்க, அவளே வாய்திறந்து பேசினாள்.

“நா..நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது.. நாம எப்போவும் போல இருக்குறதுக்காக இல்ல அசோக்.. இனி எப்போவுமே இதை உன்கிட்ட சொல்ல முடியாதேன்னுதான்..!!”