எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“தேங்க்ஸ் அங்கிள்..!!”

அழகுப்புன்னகையுடன் சொன்னவாறே, அதை வாங்கிக்கொண்டான் சூர்யா. அவனை வந்து தூக்கிக்கொண்ட அவனது அம்மாவும், அசோக்கை பார்த்து,

“தேங்க்ஸ்ங்க..!!” என்று புன்னகைத்தாள்.

“இட்ஸ் ஓகே..!!”

சொன்ன அசோக் சூர்யாவின் கன்னத்தை பிடித்து அன்பாக திருகிவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்..!! வேணு வரும்வரை காத்திருக்கலாம் என்று எண்ணியவன்.. டேபிள்களுக்கு இடையில் புகுந்து நடந்தான்..!! மெல்ல நடைபோட்டு.. அந்த டேபிளை வந்தடைந்தான்.. மீரா எப்போதும் அமர்கிற அதே டேபிள்..!! அந்த டேபிளை பார்த்ததுமே.. அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை படருவதை.. அசோக்கால் உணர முடிந்தது..!! மீரா வழக்கமாக அமருகிற அந்த இருக்கையை.. ஒரு கையால் மென்மையாக வருடினான்..!! பிறகு மனதுக்குள் ஏதோ ஒரு ஆசை உருவாக.. அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்..!!

அவனுக்கு சற்று தூரத்தில்.. சூர்யாவும், அவன் அம்மாவும் அமர்ந்திருந்தனர்..!! அவள் அசோக்கை பார்த்து ஒருமுறை புன்னகைத்துவிட்டு.. தோசையை பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்..!! சூர்யா இவனை பார்த்து ‘ஹாய்’ என்று கையசைத்துவிட்டு.. பலூனை தரையில் தட்டி தட்டி விளையாட ஆரம்பித்தான்..!! அசோக்கும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. மீராவின் நினைவில் மூழ்க ஆரம்பித்தான்..!! இதே ஃபுட்கோர்ட்டில்.. அவனுக்கும் அவளுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் எல்லாம்.. அவனுடைய மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டிருக்க.. நெஞ்சு பாரமாகிக் கொண்டே போனது..!!

அப்போதுதான்.. எங்கிருந்தோ பறந்து வந்த அந்த காகிதம்.. அசோக்கின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது..!! அசோக் தனது கன்னத்தை தடவி.. அந்த காகிதத்தை கையில் எடுத்தான்..!! அது வெறும் காகிதம் அல்ல.. பிஸ்ஸாவின் மேல் தூவப்படுத்துகிற.. மிளக்காய்த்துகளை உள்ளடக்கியிருக்கும் காகித கவர்..!! இப்போது காலியாகிப்போய்.. எங்கிருந்தோ பறந்து வந்திருந்தது..!!

அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!!

“Mirchi..!!!!”

அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!!

“உன் பேர் என்ன..??”

“ம்ம்ம்… மிர்ச்சி..!!”

“ம்ம்ம்… மிர்ச்சி..!!”

“ம்ம்ம்… மிர்ச்சி..!!”

அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள்.

அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! ‘ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??’ என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!!

அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்..

“Learn ‘MAYA’ at Aptech Computer Education..!!”

“இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“ஓ..!! என்ன கோர்ஸ்..??”

“ம்ம்.. மாயா…!!!!”

மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!!