எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. ‘Aptech Computer Education’ என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. ‘டப்.. டப்.. டப்..’ என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!!

“நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!” சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான்.

“ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!” என்று அவனை விரட்டினான்.

முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான்.

“இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!” கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.

“வையி.. அப்புறம் பேசலாம்..!!” அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது.

“ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!”

கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே..

“நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??” என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான்.

“திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி..”

“…………..”

“ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!”

“…………..”

“என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??”

“…………..”