இந்த வீட்டின் உரிமையாளர் 2 193

ரோஷன் ஹாலில் இருக்கும் போதே நான் என் டூ டே சூட்கேஸ் எடுத்து வேண்டிய துணி மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். அப்போது ரோஷன் மொபைல் அடிப்பது கேட்டது அது அவன் நண்பர்கள் யாராவது அழைத்து இருப்பார்கள் என்று பெரிதுப்படுத்தவில்லை. அவன் பேசி முடித்து நித்தியா நவீன் தான் கால் செய்தான் அவனுக்கு உங்க அப்பா கால் செய்து என்ன பிரெச்சனை ஏன் நித்தியா வீட்டிற்கு தனியா வருவதில் குறியா இருக்கார்னு விலாவாரியா விசாரித்து இருக்கிறார். அவன் எங்களுக்குள் சின்ன சண்டை அவளவுதான் நித்தி வீட்டிலே தான் இருக்கா என்னிடம் கூட பேசினா சும்மா நாடகம் போடறா நான் பார்த்து கொள்கிறேன் நீங்க பயப்பட வேண்டாம்னு சொல்லி இருக்கிறான். சொல்லிய கையோடு இப்போ என்னை அழைத்து விஷயத்தை சொல்லி இப்போ என்னாலே வேலையை விட்டு கிளம்ப முடியாது நீ கொஞ்சம் வீடு வரை சென்று என்ன பொசிஷன் பாரேன் என்றான். நான் எப்படி சொல்லுவேன் ஏற்கனவே அங்கே தான் இருக்கேன்னு எனக்கும் நீங்க விளையாடுகிறீர்கள் என்று நினைத்தால் இப்படி துணி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்கீங்க கொஞ்சம் அமைதியாய் இருங்க மாலையில் வந்ததும் மூவரும் பேசி ஒரு சமாதானத்திற்கு வருவோம் என்றான். ஆனால் அப்பா நவீனிடம் பேசி இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததும் இனி பின் வாங்குவது இல்லை என்றே முடிவு செய்தேன்.

ரோஷன் நீ என்ன சொன்னாலும் நான் கன்வின்ஸ் ஆகா போறது இல்லை நான் கிளம்பறேன் என்று மீண்டும் அதே பல்லவியை பாட ரோஷன் என் உறுதியை புரிந்து கொண்டு சரி நீ ஏன் தனியா போகணும் நான் வேணும்னா கம்பனி தரேன் கார் இருக்கு எங்கே போகணும் சொல்லு என்று கேட்க அவன் சொன்னது எனக்கு ஒரு பிடி நூலாக தெரிந்தது,. சரி நீ என்ன சொல்லுவே நவீன் கேட்டா என்று கேட்க ரோஷன் ஐயோ அவனுக்கு ரெண்டு நாளைக்கு தேவையான பணத்தை குடுத்து விட்டா அவன் கண்டிப்பாக என்னை ரெண்டு நாளைக்கு தேட மாட்டான் என்றான். அவனுக்கு சந்தேகம் வராதா இப்போ போய் நித்தியா இல்லை வீடு பூட்டி இருக்கு இந்தா நான் வெளியே போறேன் உனக்கு செலவுக்கு பணம் என்று குடுத்தா அவர் யோசிக்க மாட்டாரா என்று கேட்டேன். ரோஷன் நான் பணம் எப்போதும் நேராக அவன் கையில் குடுப்பது இல்லை அவன் கணக்கில் தான் மாற்றுவேன் அப்படி செய்யும் போது பின்னாடி எங்களுக்குள்ளே கணக்கு பிரெச்சனை வராது என்றான்