இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தவன் உடனடியாக அம்மாவுக்கு போன் போட்டான்..
கிஷோர்: ம்மா என்ன பண்ற?
அம்சவேணி: Washington White House க்கு வெள்ளை அடிச்சுட்டு இருக்கேன் டா.
கிஷோர்: பையன் சந்தோசமான விசயத்த ஷேர் பண்ணலாம் ன்னு போன் பண்ணா நீ நக்கல் பண்ற. சரி போ நான் போன் வைக்கிறேன்..
அம்சவேணி: டேய் இந்த மத்திய நேரத்துல நான் என்னடா பண்ண போறேன்.. சாப்பிட்டுட்டு டிவி பாக்குறேன்.. சரி அது என்னப்பா சந்தோஷமான விஷயம்.. சொல்லு..
அம்சவேணிக்கு அருகில் இருந்த கிஷோரின் அப்பா நாகராஜன் “என்னடி கிஷோர் என்ன சொல்றான்?”
அம்சவேணி: (போனை காதில் வைத்தவாறே நாகராஜனிடம்) எதோ சந்தோசமான விஷயம் சொல்ல போறேன் ன்னு சொன்னான்..
நாகராஜனுக்கு சற்று ஆர்வம் தொற்றி கொள்ள “அப்டியா!!! சரி சரி சொல்லட்டும். அப்டியே போன் ஸ்பீக்கர் போடு”
அம்சவேணி: டேய் கிஷோர், அப்பாவும் கேக்கணுமாம்.. நான் ஸ்பீக்கர் போடறேன்.. நீ சொல்லு..
“அய்யயோ அப்பா பக்கத்துல தான் இருக்காரா!!” என திகைத்த கிஷோர் இப்போதைக்கு அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து “ம்மா.. இங்க நான் ரோடு க்ராஸ் பண்ண போறேன்.. டிராபிக் வேற அதிகமா இருக்கு. இப்போ என்னால பேச முடியல. நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்”
கிஷோர் தன் அப்பாவுக்கு தெரியாமல் தன்னிடம் எதையோ பகிர்ந்து கொள்ள விரும்புவதை உணர்ந்த அம்சவேணி “சரி டா. நீ ரோடு பாத்து மெதுவா க்ராஸ் பண்ணுப்பா”
Nice waiting for another part