வாசமான ஜாதிமல்லி 5 12

அதனால் தான் அவன் மீண்டும் இங்கே வருளயா. அவன் அப்பா மரண படுக்கையில் இருக்கிறார் என்பதால் தான் அவன் சமாதானம் ஆகி இங்கே வந்திருக்கான், என்று மீரா மனதில் நினைத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லி இருக்கலாமே, உன் நிலைமை புரிஞ்சிருக்கும். நம் இடையே நிரந்தர உறவு இருக்க முடியாது என்று எனக்கு தெரியும். நீ சொல்லாமல் போன விதம், என்னை நீ பயன்படுத்திவிட்டு வீசி எரிந்தது போல உணர்ந்தேன்.”

“என்னை மன்னிச்சிரு மீரா நான் அப்படி யோசிக்கில. இப்படி செய்தால் தான் உனக்கு நல்லது என்று நினைத்தேன்….சரவணனுக்கு கூட. ”

“என் புருஷனுக்கும்?? எப்படி?”

“நான் உன்னிடம் ரொம்ப நெருங்கிவிட்டேன், நான் உன்னைப் பார்த்திருந்தால், உன்னை விட்டுவிட்டு அப்படியே செல்ல முடியாது என்று நான் உணர்ந்தேன். அந்த மனா வலு எனக்கு இருந்திருக்காது. என்ன வந்தாளாம் சரி என்று நான் உன்னை என்னுடன் இழுத்து ஓடிப்போயிருப்பேன். ”

“அட பாவி, நீ அப்படி செஞ்சிருப்பியா?”

“ஆமாம் மீரா நிச்சயமா. முன்பு சொன்னது போல நீ தான் என் பழகினோம். நான் இருந்த மனா குழப்பத்தில், உன்னை பார்த்திருந்தால், வரும் ஆசை யூட்டுதல் என்னால் எதிர்த்திருக்க முடியாது. நீ முடியாது என்று சொல்லி இருந்தால் கூட நான் உன்னை தூக்கி கொண்டு போயிருப்பேன்.”

“ஐயோ அப்படி செஞ்சிருப்பியா?”

“நாம சந்தித்திருந்தால் பின் விளைவுகளை பற்றி யோசிக்கும் மனநிலையில் இருந்திருக்க மாட்டோம். நினைத்து பாரு நம்ம குடும்பம் நிலை என்ன ஆகி இருக்கும்.”

ஒருவேளை நானும் சம்மதித்து என் ஆசைக்கு அடிபணிந்து அவனுடன் ஓடி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று மீரா யோசித்தாள். அது ஒரு பய நடுக்கும் அவள் உடலில் ஏற்படுத்தியது. அவள் புருஷனை அது எவ்வளவு மோசமாக பாதிச்சிருக்கும். என் கணவன் மற்றும் பிள்ளைகளை எவ்வளவு கேவலமாக கேலி செய்திருப்பார்கள். ஊர் மக்கள் கொடுக்கும் மதிப்பும் மரியாதைக்கும் தலை நிமிர்ந்து நடக்கும் அவள் கணவன் இனி எப்போதும் அவமானத்தில் தலை குனிந்து செல்ல வேண்டியதாக இருக்கும். இதற்க்கு எல்லாம் மேல, அவள் இரு இனிய குழந்தைகளை நிரந்தரமாக இழந்து இருக்கவேண்டும். அவர்கள் அன்றில் இருந்து தன்னை வெறுப்பார்கள்.

மீராவின் முக பாவத்தை பார்க்கும் போது அவள் என்ன மோசமான பிவிளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்கிறாள் என்று புரிந்தது பிரபுவுக்கு. அந்த உணர்வை மேலும் வலியுறுத்த தொடர்ந்து பேசினான். அவன் அவளை திடீரெண்டு விட்டு சென்றதற்கு அவன் சொல்லும் காரணம் மேலும் நம்பத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதுக்காக.

“நம்ம சுயநலமான செய்கையால் உன் கணவனுக்கும் குழந்தைகளும் வேதனையும், அவமானமும் கொடுக்க கூடாது என்று நினைத்தேன்,” எனக்கு சரவணனை பற்றி தான் ரொம்ப நினைவு வந்தது, நான் அவனுக்கு பெரும் தவறு இளைத்துவிட்டேன், மேலும் ஆவணமும் செய்ய என்னால் நினைக்க முடியவில்லை.”

இதுதான் பிரபுவின் விளக்கத்தின் பகடைப்புள்ளி, அவள் எப்போதும் சரவணனை அந்த நிலைக்கு ஆளாக்க நினைக்க மாட்டாள்.

பிரபு மேலும் தொடர்ந்தான், “இப்படி நான் சம்மதிக்காமல் இருக்க என் குடும்பம் அவசர அவசரமாக என் திருமணம் ஏற்பாடு செய்தார்கள். மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைத்தார்கள். என்னை ஆறு மாதத்தில் திரும்பி வர சொன்னார்கள். அப்போது எல்லோரையும் அழைத்து ஒரு இரவு விருந்து கொடுப்பதாக இருந்தது அனால் நான் தான் இதுவரை இங்கே வர மறுத்திருந்தேன்.”

பிரபு சொன்ன அனைத்தையும் ஜீரணித்து மீரா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“வந்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்படியிருந்தாலும், நீ இப்போது உன் மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிற என்று நம்புகிறேன். ”மீரா கூறினாள்.

“நான் திரும்பி வந்தது என் தந்தையும் பார்க்க என்று ஒரே காரணம் இல்லை மீரா.”

“இல்லை? வேறு என்ன?”

“மீரா ஏன் என்று உனக்குத் தெரியாது என்று என்னிடம் சொல்லாதே. இறுதிச் சடங்கின் போது என் வீட்டில் ஒரு சிறிய நேரத்துக்கு நம்ம கண்கள் பரிமாறிக்கொண்டபோது ஒன்றை என்னால் காண முடிந்தது. நீயும் என் கண்களில் அதையே பார்த்திருப்ப என்று நம்புகிறேன்.”

பிரபு அவர்களின் பரஸ்பர ஆசைகளைப் பற்றி மறைமுகமாக பேசிக் கொண்டிருந்தான்.