அசுரன் Part 37**Stopped** 29

நிகழ் காலம்

மாறனை பார்த்த உடன் ஆராதனாவுக்கு பெருமூச்சு வந்தது..

மாறன், தன் குருநாதரை அழைத்து வந்து இருந்தான்.

மூவரின் முகம் இருள் அடைந்து இருப்பதை பார்த்து,”என்ன ஆரு ஒரு மாதிரியா இருக்கே..என்ன ஆச்சு..”என கேட்டான்.

காத்தவராயன் வந்து போனதையும்,அவன் சொன்ன விசயத்தையும் ஆராதனா சொல்ல,மாறனின் முகம் கவலையில் ஆழ்ந்தது..

மாறன் அவன் குருவிடம்,”ஒருவேளை காத்தவராயன் பொய் சொல்லி இருப்பானோ”என மாறன் கேட்டான்..

குருவின் முகம் கொஞ்சம் கூட கவலை அடையவில்லை..மாறாக இன்னும் பிரகாசம் அடைந்தது..”காத்தவராயன் பொய் உரைக்கவில்லை.உண்மையை தான் சொல்லி உள்ளான்.நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று குரு சொன்னார்..

“குருவே..தாங்கள் சொல்வது ஒன்றும் புரியல..மதிவதனிக்கும்,காத்தவராயனுக்கும் உருவாகிய வாரிசு மூலம் உண்டான அவன் வம்சத்தையே அவனே அழித்துவிட்டான் என்கிறான்.அந்த வாரிசு மூலம் தானே நாம் காத்தவராயனை நிகழ் காலத்தில் கட்டுபடுத்த எண்ணி இருந்தோம்.இப்போ அவன் வம்ச வாரிசு இல்லை என்றால் நமக்கு பாதகம் தானே..இது எப்படி நன்மை ஆகும் .?

குருநாதர்,மெல்லிய புன்னகையுடன் நடந்து மதிவதனி மரத்தை தொட்டு பார்த்தார்..
“நீ பட்ட கஷ்டம் வீண் போகாது தேவி.”என சொல்லிவிட்டு அந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.

பின்பு அவர்களை பார்த்து,”இந்த அரக்கர்கள் காலங்காலமாக தங்கள் முட்டாள்தனத்தால் தப்பை செய்வார்கள்.ஆனால் அந்த தப்பு எதிராளிக்கு நன்மையாக போய் விடும்..அது அவர்கள் இயல்பு,அது போல தான் காத்தவராயன் அவனுக்கு தெரியாமலேயே ஒரு தப்பை செய்து நமக்கு நன்மையை செய்து உள்ளான்.அதை உங்களுக்கு ஒரு கதை மூலம் விளக்குகிறேன்..

“தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் வந்த காலம் அது.தேவர்களுக்கு அப்போ அமிர்தம் இன்னும் கிடைக்கவில்லை..ஆனால் அசுரர்கள் கையில் ஒரு மிகப்பெரும் பலம் இருந்தது.அது தான் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார்..அவருக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியும்.அதனால் அசுரர்கள் போரில் மடிந்தாலும் அவர் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து மீண்டும் அசுரர்களை பிழைக்க வைத்து விடுவார்.என்ன தான் தேவர்கள் பலமாக இருந்தாலும் அசுரர்கள் மீண்டும் உயிர்பெற்று வர வர தேவர்கள் பலம் குறைந்து கொண்டே வந்தது..இதனால் தேவர்களின் குரு பிரகஸ்பதி கவலை கொண்டார்.அவர் தன் மகன் கசனை அழைத்து,நீ சுக்ராச்சாரியாரிடம் சென்று சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொண்டு வரும்படி சொன்னார்..

அவனும் அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு சீடனாக சேர்ந்தான்..இதை அரக்கர்கள் எதிர்த்தாலும்,சீடனாக வந்து கல்வியை யாசகம் கேட்பவனிடம் மறுக்க கூடாது என்பது நியதி.அதனால் அசுரகுரு,என்ன தான் எதிரியின் மகனாக இருந்தாலும் சுக்ராச்சாரியார் தன் இனத்தின் எதிர்ப்பை மீறி அவனை சேர்த்து கொண்டார்.அவனுக்கு சகல வித்தைகளையும் சொல்லி கொடுத்தார்.சஞ்சீவினி மந்திரத்தை தவிர..காரணம் அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்தால் எங்கே தன் இனத்திற்கே அழிவு வந்து விடுமோ என்று அவர் கருதினார்.நேரம் வரும் வரை கசன் பொறுமையாக இருந்தான்.ஆண்டுகள் பல கடந்தன.ஆனால் அந்த பொறுமை அரக்கர்களுக்கு இல்லை.அதனால் கசனை கொல்ல தீர்மானித்தனர்..அவனை கொன்று முதலைகளுக்கு உணவாக போட்டனர்.விதி விளையாடியது..கசனின் அழகை கண்டு சுக்ராச்சாரியார் மகள் தேவயானி மையல் கொண்டாள்..அவனை அரக்கர்கள் கொன்றதை அறிந்து தன் தந்தையிடம் அவனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.சுக்ராச்சாரியாரும் தன் செல்ல மகளின் விருப்பத்திற்கு இணங்க அவனை உயிர்ப்பித்து கொடுத்தார்.இதே போல பல சமயங்களில் அரக்கர்கள் கசனை கொன்றாலும் சுக்ராச்சாரியர் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டே இருந்தார்.அதனால் அரக்கர்கள் இம்முறை வேறு திட்டம் போட்டனர்.அவனை கொன்று அப்படியே விட்டு விடாமல் கசனின் எலும்புகளை நொறுக்கியும்,அவன் மாமிசத்தையும்,இரண்டையும் மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கே குடிக்க கொடுத்து விட்டனர்.மீண்டும் கசனை தேடி கிடைக்காமல் தேவயானி தன் தந்தையிடம் வந்து முறையிட சுக்ராச்சாரியார் தியானம் செய்து பார்க்கும் பொழுது தான் அவன் தன் வயிற்றில் இருக்கிறான் என்று புரிந்தது..இப்பொழுது அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றில் உள்ள கசன் உயிர்பெற்று வயிற்றை கிழித்து கொண்டு வருவான்.அப்போ தான் இறந்து விடுவோம் என்று அவருக்கு தெரிந்தது..அப்போ தன்னை உயிர்ப்பிக்க யாராவது வேண்டுமே என்று நினைத்தார்.
அதனால் தன் மகளுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுக்க,அவள் மண்டையில் அம்மந்திரம் ஏறவில்லை..தப்பு தப்பாக உச்சரித்தாள்.
அதனால் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுப்பது தான் ஒரே வழி என்று அசுரகுரு தெரிந்து கொண்டார்..அவனை மீண்டும் தன் வயிற்றில் உயிர்ப்பித்து,”கசனே, நான் உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி தருகிறேன்..நீ என் வயிற்றை கிழித்து வெளியே வந்த பிறகு என்னை உயிர்ப்பிக்க செய்.”என்று சொல்லி அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கொடுத்தார்.அவனும் அவ்வாறே செய்தான்.எந்த மந்திரத்தை கசன் தெரிந்துகொள்ள கூடாது என அரக்கர்கள் மீண்டும் மீண்டும் அவனை கொன்றனரோ..!கடைசியில் அவர்கள் செய்த முட்டாள்தனத்தாலேயே அவன் தெரிந்து கொண்டான்.அரக்கர்கள் அவனை கொல்லாது இருந்திருந்தால் தன் இனத்தின் நலனுக்காக கண்டிப்பா சுக்ராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்து இருக்க மாட்டார்.அதே போன்ற தவறை தான் காத்தவராயன் செய்து உள்ளான்.

5 Comments

  1. டேய், எப்போ டா முடிப்பிங்க

  2. Y stopped??

  3. Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku

  4. kowsalya jayakumar

    கதை பாதில நிறுத்திட்டிங்க

  5. கதை பாதில நிறுத்திட்டிங்க

Comments are closed.