சோழ நாட்டில் பல்வேறு சிற்றரசர்கள் இருந்தனர்.. பழுவேட்டையரர்,கொடும்பாளூர், வாணர் குலம்,மலையமான்,சம்புவரையர் இப்படி பல சிற்றரசர்கள் இருந்தனர்.அதில் சுந்தர சோழன் காலர் காலத்தில் மிக செல்வாக்கு மற்றும் முக்கிய பதவிகளை பெற்று இருந்த பழுவேட்டரையர் குலம் கொஞ்ச கொஞ்சமாக செல்வாக்கு இழந்து கொடும்பாளூர் குலத்தின் கையில் அதிகாரம் போய் சேர்ந்தது.. ராஜராஜ சோழன் திருமணம் செய்தது கொடும்பாளூர் இளவரசியான வானதியை தான்.சொல்லவே தேவை இல்லை இப்போ அரசனாக வீற்று இருக்கும் ராஜேந்திர சோழனின் அன்னை வானதி தான்.ராஜேந்திர சோழனுக்கு இரு புதல்விகள்.ஒருவர் அருள்மொழி நங்கை,இன்னொருவர் அம்மங்கா தேவி..
அக்காலத்தில் மன்னர்கள் எப்பொழுதும் ஒன்று போரிட்டு இன்னொரு நாட்டை வெற்றி கொள்வர்.அல்லது பொண்ணு கொடுத்து அல்லது பொண்ணு எடுத்து நாட்டை நட்பாக்கி கொண்டு எல்லைகளை விரிவுபடுத்தி கொள்வர்.அப்படி தான் ராஜ ராஜ சோழனும் தனக்கு பிறந்த மகளை வேங்கி நாட்டுக்கு கொடுத்து நட்பாக்கி கொண்டார்.இப்போ ராஜேந்திர சோழனும் அவ்வழியே வேங்கி நாட்டின் இளவரசான நரேந்திரனுக்கு தம் மகளை கல்யாணம் செய்து கொடுத்து நட்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என விரும்பி இருந்தான்.ஆனால் அவள் மகளான அருள்மொழி நங்கை அதற்கு மாறான எதிர்மறை விருப்பம் கொண்டு இருந்தாள்.அவளுக்கு தம் பாட்டியின் குலத்தில் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பம்.
கங்கை வரை சென்று போரிட்டு வென்று அங்கிருந்து பெரிய பெரிய பானைகளில் கங்கை நீரை யானைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.இந்த நீரை கொண்டு தான் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய போவதாக மக்கள் பேசி கொண்டு இருந்தனர்.
காசி வரை சென்று வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையே ராஜேந்திர சோழன் உருவாக்கி இருந்தான்.அந்த நகருக்காக காவிரி நீரை திருப்பி ஒரு பெரிய ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கி இருக்க,அந்த ஆற்றின் ஓரத்தில் அழகான பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்..அவர்கள் மேனியின் வனப்பை பார்த்தாலே அரண்மனை பெண்கள் என்று எளிதாக அடையாளம் தெரிந்தது.எல்லோரும் ஒருவரையொருவர் நீரை அள்ளி தெளித்து விளையாடி கொண்டு இருந்தனர்.
ஊர் முழுக்க சுற்றி விட்டு சோர்ந்து போய்,ஆற்றோரம் இருந்த ஆலமரத்தில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வந்து சேர்ந்தது..ஆற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
அதில் இருந்த ஒரு பெண், தன் எஜமானியை பார்த்து,”தேவி, தாங்கள் மணம் முடித்து வேங்கி நாட்டுக்கு சென்று விட்டால் இந்த ஏழை பெண்களை எல்லாம் ஞாபகம் வைத்து இருப்பீர்களா..”என கேட்டாள்..
அந்த முக லட்சணம் பொருந்திய எஜமானி தன் தோழியை பார்த்து,”ம்,கேளடி என் வாய் துடுக்கு சங்கா..நான் திருமணம் செய்து கொண்டு வெளியே போக போவது இல்லை.எனக்கு பிடித்த இந்த சோழ நாட்டில் தான் தங்க போகிறேன்..”என கூறினாள்.
பதிலுக்கு அவள் பணிப்பெண்ணோ,”அது எப்படி சரியாகும் தேவி…திருமணமானால் பெண்கள், தன் கணவர் வீட்டுக்கு அல்லவா செல்வது தானே மரபு.
தாங்கள் மணம் முடித்தால் வேங்கி நாட்டுக்கு அல்லவா செல்ல நேரிடும்..வேங்கி நாட்டு இளவரசன் இங்கு தங்க சம்மதிக்க மாட்டாரே..”என வினவினாள்..
அதை கேட்டு அவள் எஜமானி சிரித்தாள்..”நான் வேங்கி நாட்டு இளவரசனை திருமணம் செய்தால் தானே இங்கு இருந்து செல்ல நேரிடும்.ஆனால் நான் தான் நரேந்திரனை திருமணம் செய்ய போவது இல்லையே..”
அந்த பணிப்பெண்ணும் விடாமல்,”தேவி..!இன்னும் ரெண்டு நாளில் தங்கள் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்ய போகிறார்கள்..பட்டாபிஷேகம் முடிந்த உடனே அடுத்து உங்கள் திருமணம் என்று தான் அரண்மனையில் பேச்சு..மாமன்னர் ராஜேந்திர சோழன் பேச்சுக்கு யாராவது ஒருவர் எதிர் பேச்சு இவ்வையகத்தில் பேச முடியுமா..?அவர் எடுக்கும் முடிவை தான் யாராவது தடுக்க முடியுமா..!அதுவும் உங்கள் திருமணம் ராஜாங்க ரீதியானது.போயும் போயும் பெண்ணான உங்களால் இதை தடுக்க முடியுமா”என பரிகாசம் செய்தாள்..
“சிரிப்பை நிறுத்துடி,என் சில்வண்டு..எங்கள் வம்சத்தில் செம்பியன்மாதேவி முதல் என் பாட்டியார் குந்தவை பிராட்டி வரை எப்பவுமே ராஜாங்க ரீதியில் முடிவு எடுத்து உள்ளார்கள்..பெண்கள் பேச்சுக்கு எப்பவுமே சோழர் வம்சத்தில் மரியாதை அளிப்பர்.அந்த வம்சத்தில் வந்த அருள்மொழி நங்கை நான்..என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே உள்ளது.”
இவர்கள் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருக்கும் பொழுது ஒரு முதலை இவர்களை நெருங்கி விட்டு இருந்தது.சற்று தாமதமாக தான் கூட்டத்தில் இருந்த பெண் கவனித்து”முதலை..முதலை என்று கூவி கொண்டு ஓட்டமும் நடையுமாக கரையை நோக்கி பாய்ந்தாள்.மற்றவர்களும் கரையை நோக்கி ஓட,அருள்மொழியின் கால்கள் கல் இடுக்கில் சிக்கி கொண்டது..என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தள்ளாட,முதலை தன் அகல வாயை திறந்து கொண்டு விழுங்க வந்தது.அவ்வளவு தான் கைலாச பதவி தான்”ஈசனே என்னை காப்பாற்று” என்று அவள் கத்திய வேளையில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு ஈட்டி சரியாக முதலையின் வாய்க்குள் பாய்ந்தது..அடுத்த நொடி மின்னல் போல் ஆற்றுக்குள் பாய்ந்த அவன் அருள்மொழியை மீட்டு கரையில் கொண்டு சேர்க்கவும்,அங்கு கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ வாழ்க..என்ற கோஷம் எழுந்தது..
“ஈட்டியை குறிபார்த்து எய்தி,ஒரே நொடியில் எதிரியின் கணக்கை முடிப்பதில் வல்லவரான இளங்கோவின் ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வையகத்தில் உண்டோ..”என கரகோஷம் எழுந்தது.
இந்த கோஷத்தை கேட்ட உடனே,அனு மற்றும் லிகிதா துள்ளி எழுந்து பார்த்தனர்..ஆலமரத்தின் கிளைகளுக்கு நடுவே பார்க்க நடுநாயகமாய் அவனின் உருவம் தெரிந்தது.
ஆறடி குறையாமல் உயரம்,திடகாத்திரமான தோள்கள்,வலிமைமிக்க கரங்கள்,கட்டுடல் மேனி,லட்சணமான முகம் அதை பார்த்து ஆவியான அனுவின் ஆன்மாவுக்கே அவன் மேல் ஆசை வந்தது..
மன்னர் காலம்
படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு இளங்கோவை தூக்கி தோளில் வைத்து கொண்டாட,அருள்மொழியால் இளங்கோவை நெருங்க முடியவில்லை..வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அவள் நாணத்தால் எப்படியும் அவனிடம் சென்று பேசி இருக்க போவது இல்லை. கண்களால் பேச போவதற்கு எத்தனை பேர் நடுவில் இருந்தால் என்ன..?இருவரும் மௌனமாக காதல் பாஷை பேசி கொண்டு இருக்க,தேவி என்று அழைக்கும் குரல் சங்காவிடம் இருந்து வந்தது..
“தேவி,நமக்கான வாகனம் வந்து விட்டது.வாருங்கள் அரண்மனை திரும்பலாம்” என்று சங்கா அழைக்க,அருள்மொழி அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஏக்கத்துடன் சென்றாள்.
அவள் ஏக்கத்தை இளங்கோவும் புரிந்து கொண்டான்.இதுவரை இளங்கோ ஒருமுறை கூட அருள்மொழியிடம் பேசியதே இல்லை.அவள் மேல் அவனுக்கும் காதல் தான்.செப்பு சிலை போல் இருக்கும் அவளை பார்த்து யாருக்கு தான் காதல் வராது.ஆனால் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவளை தவிர்த்து சென்று விடுவான்.காரணம் அவள் எட்டா உயரத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தது.அருள்மொழியை வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கு திருமணம் செய்ய தான் ராஜேந்திர சோழனுக்கு விருப்பம் என்பது ஊரறிந்த விசயம்..அது இளங்கோவிற்கு மட்டும் தெரியாமல் இருக்காதா..!மேலும் இளங்கோ சிற்றரசரின் மகன்.ஆனால் நரேந்திரனோ வேங்கி நாடு என்னும் பேரரசின் இளவரசன்.அதை நினைத்து தன் நிலையை எண்ணி அவன் ஒதுங்கியே நின்றான்.இருவருக்கும் உள்ள காதலை அனு,மற்றும் லிகிதா கவனித்து விட்டனர்.தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொண்டனர்.
அன்னப்பறவை வடிவில் இருந்த பிரமாண்டமான படகு நீரில் மிதந்து வர,அதில் அரண்மனை பெண்டிர்கள் ஏறினர். கொஞ்சம் கொஞ்சமாக இளங்கோ பார்வையில் இருந்து படகு மறைந்து போனது.
அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பள்ளிப்படை என்ற சுடுகாட்டில் மூன்று பேர் சந்தித்து உரையாடி கொண்டு இருந்தனர்..
“வா இடும்பன்காரி கொண்டு வந்த நற்செய்தி என்ன..?சாம்பவன் என்பவன் கேட்டான்..
இடும்பன்காரி சற்று தடிமனாக இருந்தான். “கோபத்தில் என் கண்கள் சிவக்கிறது சாம்பவா..இந்திரன் நம் வம்சத்திற்கு அளித்த மணிமுடியை எடுத்து அந்த ராஜேந்திர சோழன் அவன் மகனுக்கு முடிசூட்ட போகிறனாம்..”
சாம்பவன் அதிர்ந்து,”என்ன..! சோழர்களிடம் அந்த மணிமுடி கிடைக்கக்கூடாது என்பதற்காக தானே நாம் அதை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தோம்..அதையும் மீறி எப்படி அவர்களிடம் மணிமுடி கிடைத்தது..”
இடும்பன்காரி கோபம் குறையாமல் “எப்படியோ இலங்கையில் இருந்து போராடி கொண்டு வந்து விட்டார்கள் நம் எதிரிகள்..போதாக்குறைக்கு இலங்கையை வென்று சிங்கள மன்னன் மகிந்தனையும்,அவர் குடும்பத்தாரையும் கைது செய்து அழைத்து வந்து உள்ளார்கள்.அப்படி அழைத்து வரும் பொழுது மகிந்தனின் மகன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டான். சடாசரன் எங்கே..?இன்னும் வரவில்லையா..!என இடும்பன்காரி கேட்க,

டேய், எப்போ டா முடிப்பிங்க
Y stopped??
Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku
கதை பாதில நிறுத்திட்டிங்க
கதை பாதில நிறுத்திட்டிங்க