அசுரன் Part 37**Stopped** 29

முனிவர் இவர்களிடம்”இவர் தான் காக புஜண்டர்.இவர் பல யுகங்களின் அழிவை பார்த்தவர்.பல அவதாரங்களையும் பார்த்தவர் இவரே..நடக்கும் யுகத்தின் அழிவின் போது தான் இவர் கண் விழிப்பார்.அதனால் அவரை எழுப்ப வேண்டாம்..”

“அப்போ தாங்கள் யார்”லிகிதா கேட்டாள்..

“என் பெயர் வைதும்பன்..உங்களை இங்கே அனுப்பிய சோமனின் குரு..”

“ஓ..மாறனின் குரு தான் சோமன்”என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

“ஐயா,அப்போ இது தான் சொர்க்கலோகமா..”என்று அனு கேட்டாள்..

“சொர்க்கலோகம்,நரகலோகம் என்று எதுவும் இல்லை பெண்களே..எல்லாமே உங்கள் பூமியில் தான் உள்ளது..”

“என்னது எங்கள் பூமியிலா..!”இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஆமாம் பெண்களே..”என்று அவர் ஓரிடம் அவர்களை கூட்டி சென்றார்.

அங்கு ஒரு பெரிய கதவு இருந்தது..

முனிவர் அந்த இடத்திற்கு கூட்டி சென்று”இந்த கதவு தான் கடவுள் ஆன்மாக்களை உய்விக்கும் இடம்..அதாவது நீங்கள் பூமியில் செய்த பாவ,புண்ணியத்தை பொறுத்து ,மீண்டும் நீங்கள் பிறப்பு எடுக்க இறைவன் கருணை கூர்ந்து மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார்.புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பும்,பாவம் செய்தவனுக்கு கஷ்டத்தை அனுபவிக்கும் பிறப்பும் கிடைக்கும்..புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பு கிடைக்குது அல்லவா அது சொர்க்கம், இழிபிறவி கிடைக்குது அல்லவா அது நரகம்..அதை தான் நான் சொர்க்கம்,நரகம் ரெண்டும் பூமியில் உள்ளது என்று சொன்னேன்.பூமி தான் நம் கர்மாக்களை நீக்கும் இடம்.அதனால் அதை கர்மபூமி என்று சொல்கிறார்கள்..”

“அப்போ நாங்கள் வழிபடும் சிவன்,சக்தி,பிரம்மா, விஷ்ணு,விநாயகர்,முருகர் எல்லாம் பொய்யா..”என்று லிகிதா கேட்டாள்..

“எதுவுமே பொய் இல்லை பெண்ணே.அவை எல்லாம் இறைவனின் சொருபங்களே..நம்மை உய்விக்கும் பொருட்டு சோதி மயமான இறைவன் இறங்கி வந்த படிநிலைகள் அவை.”

“அப்போ நீங்கள் வசிக்கும் இந்த உலகின் ஆன்மாக்கள் யார் முனிவரே..”அனு கேட்க,

“இங்கு வசிக்கும் ஆன்மாக்கள் யாவும் கர்மவினையை அனுபவித்து முடித்த ஆன்மாக்கள் பெண்களே..உங்களை பற்றி,இறைவனை பற்றி நீங்கள் உணரும் பொழுது உலகின் மீது பற்று போய்விடும்.பிறகு இங்கே வந்து விடுவீர்கள்..”

“கர்மபலன் தீர்ந்து இங்கே வந்து விட்டால் நாங்கள் இங்கிருந்து மீண்டும் பூமிக்கு போக தேவை இராது தானே முனிவரே..”என மீண்டும் அனு தன் சந்தேகத்தை கேட்டாள்.

“அப்படி அல்ல பெண்ணே..!நீங்கள் இந்த திவ்ய உலகில் இருக்கும் பொழுது காமத்தின் பேரில் நீங்கள் இச்சை கொள்கிரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்.இங்கு அது முடியாது.நீங்கள் ஆசைப்பட்டதை அனுபவிக்க பிறப்பு எடுத்து பூமிக்கு தான் செல்ல வேண்டும்.ஆசைகள் அற்ற நிலையில் தான் இங்கு நீங்கள் இருக்க முடியும்..”

“ஓ,இதை தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னாரா..”என அனு சொன்னாள்..

“சரியாக சொன்னாய் பெண்ணே..ஒரு சில சமயம் இங்கு இருக்கும் உயர்ந்த ஆன்மாக்களை பூமியில் உள்ள மக்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு இறைவன் பிறப்பு எடுக்க சொல்வார்.அப்படி உய்விக்க உற்றவர்கள் தான் வள்ளலார்,புத்தர்,ரமணர்,நபி,ஏசு போன்றோர்..”என்று அவர் விளக்கம் கூற இருவரும் தெளிவு அடைந்தார்கள்.

“சரி பெண்களே..!நீங்கள் வந்த காரியத்தையே மறந்து விட்டீர்கள்..நீங்கள் இப்போ சோழர்கள் வாழ்ந்த காலத்திற்கு செல்ல வேண்டும்..காலம் உங்களுக்கு சில கடமைகளை கொடுத்து உள்ளது.நீங்களும் வள்ளலார் போன்று உய்விக்க உற்றவர்கள் தான்.எதற்காக என்றால் காத்தவராயனிடம் இருந்து இந்த பூமியை காப்பாற்ற..அவனை அழித்து இவ்வுலகில் சேர்க்கவும் தான் நீங்கள் பிறப்பு எடுத்து உள்ளீர்கள்.மீண்டும் நீங்கள் வாழும் காலத்திற்கு செல்லும் பொழுது இந்த வழியே தான் செல்ல வேண்டும்..அப்பொழுது மீண்டும் சந்திப்போம்” என விடை கொடுத்தார்.

அனுவும்,லிகிதாவும் உட்கார்ந்து தியானிக்க அடுத்த கணமே அவர்கள் சோழ நாட்டில் பிரவேசித்தார்கள்

அவர்கள் சோழ நாட்டில் கண்ட காட்சி அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கியது..

பொங்கி பெருகி பாய்ந்து ஒடும் காவிரி,அந்த காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் நீரோடைகள்.சுற்றிலும் வயல்வெளிகள் பச்சை ஆடை போலவும்,அதன் நடுவே ஓடிய ஓடைகள், வெள்ளி சரிகை கோர்த்தது போலவும் இருந்தது.. மண் சாலைகளே பார்க்க அவ்வளவு பிரமாண்டமாய் இருந்தது..

5 Comments

  1. டேய், எப்போ டா முடிப்பிங்க

  2. Y stopped??

  3. Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku

  4. kowsalya jayakumar

    கதை பாதில நிறுத்திட்டிங்க

  5. கதை பாதில நிறுத்திட்டிங்க

Comments are closed.