கொஞ்ச கொஞ்சமாக உள்ளுக்குள் ஒவ்வொரு உறுப்பாய் அடங்கி கொண்டு வருவதை உணர்ந்தனர்..கை,கால்கள் மருத்து போனது போல ஆனது.உடலுக்குள் உள்ளே ஆன்மா இதயத்திற்கு கீழே வந்து ஒடுங்கியது போல இருவரும் உணர்ந்தனர்.அடுத்து அவர்கள் ஆன்மா ஒரு முடிவில்லாத இருட்டில் பயணம் செய்தது போல தெரிந்தது..அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒரு பளீரென்ற வெளிச்சத்தை கண்டனர்..ஆனால் அந்த வெளிச்சம் கண்ணை உறுத்தவில்லை.அவர்கள் உடலை அவர்களே பார்த்தார்கள்.காற்றில் மிதப்பது போல உணர்ந்தார்கள்.அதே நேரம் லேசாக மழை தூர ஆரம்பித்தது.ஆனால் அவர்கள் நனையாதது கண்டு ஆச்சரியம் ஆனார்கள்.
“என்ன ஆச்சரியமா பார்க்கறீங்க..!ஆன்மா பஞ்சபூத சக்திகளுக்கு அப்பாற்பட்டது..நீரில் நனையாது.நெருப்பில் எரியாது.தரையில் படாது.பேசுவது கேட்காது.எதுவும் ருசிக்காது”என குருநாதர் பேசாமலே பார்வையில் சொன்னது அவர்களுக்கு புரிந்தது.அவர்கள் குருவை வணங்கி முடித்த உடனேயே அடுத்த நொடி அவர்களின் ஆன்மாவை எங்கேயோ இழுத்து செல்லப்பட்டது போல உணர்ந்தார்கள்.
“மாறா..இவங்க ரெண்டு பேர் உடலை உடனே மழையில் நனையாமல் மடத்தின் உள்ளே பத்திரப்படுத்து..மணிக்கு ஒருமுறை நான் கொடுத்த மூலிகையை இவர்கள் உள்ளங்காலில் தேய்க்க மறக்காதே.இருவர் உடலும் எக்காரணம் கொண்டும் உஷ்ணம் குறைந்து சில்லிட கூடாது.”என குருநாதர் எச்சரித்து சொல்ல,அவன் ஆராதனாவை உதவிக்கு அழைத்தான்.ஆனால் அவன் மேல் உள்ள கோபத்தினால்
ஆராதனா முறைத்து கொண்டு கொண்டு,அங்கே சற்று தள்ளி உட்கார்ந்து கொள்ள,காமினி உதவிக்கு வந்தாள்.
இருவரும் சேர்ந்து அனு,மற்றும் லிகிதா உடலை பத்திரப்படுத்தினர்.
நிகழ்காலம்
தன்னிடம் லிகிதா ஏதோ மறைக்கிறாள் என்று பிரியங்காவிற்கு புரிந்தது.தன் அப்பாவை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் லிகிதாவின் ஞாபகத்தில் தன் வெஸ்பாவை ஒட்டி வந்துகொண்டு இருந்தாள்.கருமேகங்கள் சூழ்ந்து வந்ததை அவள் கவனிக்கவே இல்லை.வானம் இடி இடிக்க,பிரியங்கா வானத்தை அண்ணாந்து பார்க்க,மழைத்துளி ஒன்று கண்களுக்கு கீழ் விழுந்து கன்னத்தில் வழிந்து ஓடியது..உடனே அடுத்து சடசடவென மழை பொத்துக்கொண்டு பொழிய பிரியங்கா வண்டியை வேகமாக முறுக்கினாள். மழையில் ஒதுங்குவதற்காக மெயின் ரோட்டில் இருந்து விலகி கிளைச்சாலைக்கு வண்டியை திருப்பினாள்.அவளோட கெட்ட நேரம் சாலை மிகவும் சேறும் சகதியுமாக இருந்தது.
“ச்சே..!இன்னிக்கு கார் எடுத்து வந்து இருக்கலாமோ என்று ஒரு நிமிஷம் மனசில் அவளுக்கு தோன்றியது.
சகதியில் ஸ்கூட்டர் டயர் சிக்கி கொண்டது.பிரியங்கா செய்வது அறியாமல் வேகமாக ஆக்ஸிலேட்டரை திருக,சறுக்கி கீழே விழுந்தாள்.சாலையின் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து விட்டாலும் பெரிதாக அடிபடவில்லை.புற்கள் அடர்த்தியாக நன்றாக வளர்ந்து இருந்ததால் காயம் ஒன்றும் உண்டாகவில்லை.அவள் உள்ளே விழுந்த உடன் சொல்லி வைத்தாற் போல மழை நின்று விட்டது..புற்கள் நன்றாக அடி உயரம் வரை வளர்ந்து இருந்தது.
காற்றில் ஆடிய புற்கள் அவள் மேனியில் உரசி சிலிர்ப்பை உண்டாக்கியது..கீழே உருண்டு விழுந்த காரணமாக சுடிதார் மேலேறி அவள் செக்க சிவந்த இடுப்பு வெளியே தெரிந்தது. புல்லில் இருந்து சொட்டிய மழைநீர் அவள் அழகிய மிருதுவான இடுப்பில் பட்டு தெறித்தது.
ஒரு புல் தானாக வளைந்து அவள் இடுப்பை தடவியது.காற்றில் புல் அசைகிறது என பிரியங்கா ஆடையை மட்டும் கீழே இறக்கி விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.இன்னொரு புல் மீண்டும் வளைந்து அவள் ரோஸ் நிற இதழ்களை வருடியது.
“அது எப்படி ஒரு புல் மட்டும் தானாக வளைந்து தொடும்..மர்மமாக இருக்கிறதே..காற்று அடித்தால் எல்லா புற்களும் தானே அசையனும்.இது மட்டும் தனியா,அதுவும் தன்னை நோக்கி வளையுது “என பிரியங்கா குழம்பினாள்.
அவள் பயத்தை இன்னும் அதிகரிப்பது போல மற்றொரு புல் அவள் முகத்திற்கு நேராக வளைந்து வந்து அழகான வெண்சங்கு நீள் கழுத்தை வருடியது..

டேய், எப்போ டா முடிப்பிங்க
Y stopped??
Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku
கதை பாதில நிறுத்திட்டிங்க
கதை பாதில நிறுத்திட்டிங்க