அசுரன் Part 37**Stopped** 29

“இது நம்ம தமிழ்நாடு தானா..!என அனு கேட்டாள்..

“ம்..!சோழர்கள் காலத்தில் சோழநாடு தான்டி உலகத்திலேயே பணக்கார நாடு”என்று லிகிதா சொன்னாள்..

மன்னர் காலம்

பொங்கி பெருகி ஒடும் காவிரி கரையில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா பறந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின..ஆனால் அதன் இயற்கை அழகை ரசிக்க முடிந்ததே தவிர,அதன் குளிர்ச்சியை உணரமுடியவில்லை..அதை உணர பஞ்சபூத கலவையான உடல் தேவை என்று அவர்களுக்கு தெரிந்தது.வயல் வெளிகளில் ஓரம் அங்கங்கே நெல் குவியல்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தன..யானைகளை கட்டி நெல்லை போர் அடித்து கொண்டு இருந்தார்கள்.. சோழ நாடு சோறு உடைத்து என்ற கூற்று முழுக்க முழுக்க உண்மை என்று அவர்களுக்கு புரிந்தது.ஆனால் அப்படி இருந்த சோழ நாடு இப்போ இருக்கும் நிலைமையை ஒப்பிட்டு பார்த்து உள்ளுக்குள்ளே அவர்களுக்குள் ஏக்கமும் எட்டி பார்த்தது..

அப்போ நம் முன்னோர்கள் சொன்னது எல்லாம் நிஜம் தான் என்று உணர்ந்தார்கள்.ஊருக்கு நான்கைந்து மைதானங்கள் கட்டி வைக்கப்பட்டு அதில் பல வாலிப இளைஞர்கள் வேல் எறிதல், வாள் பயிற்சி,மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

வயதில் சின்ன பெண்கள் தெருக்களில் ஒருபக்கம் பல்லாங்குழி ஆடி கொண்டும்,நொண்டி ஆடுதல்,இன்னும் பல கேளிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்..வயதுக்கு வந்த பெண்கள் தங்களுக்கு உரிய கட்டிளங்காளைகளை தேர்வு செய்து பார்வையால் வசியம் செய்து கொண்டு இருந்தனர்.

எல்லா ஆண்மகன்களுமே பார்ப்பதற்கு நன்கு திடகாத்திரமாக இருந்தனர்..இப்போ இருப்பது போல வயிற்றில் தொந்தி,உடல் பருமன்,தலை வழுக்கை இது போன்று எதுவுமே காணப்படவில்லை..
அறுபது வயது கிழவன் கூட மிக திடகாத்திரமாக சர்வ சாதாரணமாக மிக எடையுள்ள பொருட்களை தூக்கி சென்று கொண்டு இருந்தான்..

“இதில் எங்கேடி இளங்கோவை கண்டுபிடிப்பது” என அனு புலம்பினாள்..

“ஏதோ கொடும்பாளூர் இளவரசன் என்று சொன்னாங்க அனு,இளவரசனை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தால் இங்கே அனைவரும் ராஜ குமாரர்கள் போல தெரியுதே..நாம் வந்த காரியம் எளிதான காரியம் என்று நினைத்தேன்,ஆனா மிகவும் கஷ்டமான காரியம் போல இருக்கு..”என லிகிதாவும் புலம்பினாள்..

“லிக்கி..!ஊரு முழுக்க குதுகாலமா இருக்கு..ஏதோ விசேஷமாக இருக்கு என நினைக்கிறேன்..”அனு சொல்ல,

“ஆமா”என்று லிகிதாவும் ஆமோதித்தாள்.

இருவரும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்,மக்கள் பேசுவதையும் உற்று கேட்க,அங்கு கூடிய விரைவில் இலங்கையில் இருந்து கொண்டு வந்த பாண்டியனின் மணிமுடி மூலம் ராஜேந்திர சோழன் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய போவதை அறிந்தனர்.

“ஏண்டி லிக்கி,இவ்வளவு தானிய வளம் இருந்தும் பிற்காலத்தில் நம் தமிழ்நாட்டில் மட்டும் தாது பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பசி,பட்டினியால் வாடி எப்படி இறந்தனர்..?”என அனு சரியாக கேட்டாள்.

“தாது பஞ்சம் ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அனு..!ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் இறந்த பொழுது கூட அப்பொழுது நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஒருத்தனும் இங்கே பசியால் இறக்கவில்லை..இத்தனைக்கும் அன்று அவன் உலகம் முழுக்க ஆண்டு கொண்டு இருந்தான்.அவன் நினைச்சு இருந்தா இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தோ,இல்ல வேறு நாடுகளில் இருந்தோ எளிதாக பசி,பஞ்சத்தை போக்கி இருக்க முடியும்.ஆனா அவன் அப்படி பண்ணல.நம் முன்னோர்களை எல்லாம் செத்து தொலையட்டும் என்று தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
இப்போ இருக்கிற சோமாலியா ஒரு காலத்தில் வளம் மிக்க நாடாக இருந்தது.ஆனா இந்த மேற்குலக நாடுகள் கிட்ட சிக்கி கொண்டு அந்நாட்டு மக்கள் இப்போ பசி, பட்டினியால் வாடுறாங்க.அதுக்காக ஆங்கிலேயர்கள் நமக்கு நல்லதே செய்யலயா என்று கேட்டால், செயிஞ்சு இருக்காங்க என்று சொல்வேன்..ஆனா அவங்க செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்..அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தரும் நன்மைகளை மட்டுமே செய்வார்கள்..”என்று லிகிதா சொல்ல அனுவுக்கு நன்றாக புரிந்தது.

“யப்பா..உனக்கு நிறைய விசயம் தெரியுது லிக்கி”என அனு வியந்தாள்.

‘ம்…எனக்கு வரலாறை தேடி படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் அனு..”என லிகிதா சொன்னாள்.

5 Comments

  1. டேய், எப்போ டா முடிப்பிங்க

  2. Y stopped??

  3. Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku

  4. kowsalya jayakumar

    கதை பாதில நிறுத்திட்டிங்க

  5. கதை பாதில நிறுத்திட்டிங்க

Comments are closed.