“வரும்நேரம் தான் சாம்பவா..!ஆமாம் சிங்கள இளவரசன் தப்பித்து விட்டான் என்று சொன்னாயே..அவன் இப்போது எங்கே இருக்கிறான்..”என சாம்பவன் இடும்பன்காரியிடம் கேட்டான்.
“என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவன் இந்நேரம் நம் சடாசரனை சந்தித்து இருக்க வேண்டும்..இளவரசனை அழைத்து கொண்டு எந்நேரமும் சடாசரன் இங்கே பிரவேசிக்க கூடும்.நாம் அவனை அதற்காக தானே அனுப்பினோம்..”என இடும்பன் காரி கூறினான்..
இடும்பன்காரி கருந்திருமனை பார்த்து,”நீ சொல் கருந்திருமா..!நீ கொண்டு வந்த சேதி என்ன?
“இடும்பா,நீ சொன்னது போல அரண்மனையை நோட்டம் விட்டேன்.அதில் எனக்கு முக்கிய ரகசிய செய்தி கிடைத்தது.சோழர்கள் நாராயணபுரி ஏரியை பாசனத்திற்காக ஒன்றும் கட்டவில்லை.”
“பின் எதற்காக கட்டி உள்ளார்கள்..கருந்திருமா..”
“சாம்பவா..!திடீரென ஒருநாள் சோழ வீரர்கள் என்னிடம் வந்து உனக்கு படகு ஒட்ட தெரியுமா?என்று கேட்டார்கள்..நானும் தெரியும் என்று சொன்னேன்.அவர்கள் என்னை ஏரியின் நடுவில் உள்ள நிலா மண்டபம் அழைத்து செல்ல சொன்னார்கள்..நானும் படகில் அமர்ந்து காத்திருக்க, சோழ நாட்டு இளவரசி தன் பரிவாரங்களுடன் வந்து ஏறினாள். நான் அவர்களை நிலா மண்டபம் அழைத்து சென்று விட்ட பிறகு என்னை அங்கிருந்த வேறு படகில் இருந்து கரை திரும்ப சொன்னார்கள்..எனக்கு ஒரு சந்தேகம்..நிலா மண்டபத்தில் இருந்து திரும்ப கரைக்கு அழைத்து செல்ல வேண்டாமா..?என்று கேட்டேன்.ஆனால் அவர்கள் வேண்டாம் என மறுதலித்து விட்டார்கள்..இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என படகை வேகமாக கரையை நோக்கி செலுத்தி விட்டு,மீண்டும் நிலா மண்டபத்தை நோக்கி உயிரை பணயம் வைத்து நீந்தியே வந்தேன்..அப்போ தான் எனக்கு அந்த ரகசியம் தெரிந்தது..”
“என்ன ரகசியம்..!”என இருவரும் ஆவலுடன் கேட்டனர்.
கருந்திருமன் அவர்களிடம்,”சாம்பவா..அந்த நிலா மண்டபத்தில் பரமசிவன்,பிரம்மனின் ஒரு தலையை கொய்வது போல சிலையை வடித்து உள்ளனர்.அந்த பரமசிவன் சூலாயுதத்தை ஒரு வீரன் பிரம்மனின் தலையை நோக்கி குத்த கீழே ஒரு ரகசிய வழி உண்டாகியது.அதில் உள்ளே இறங்கி நடந்து சோழ நாட்டு இளவரசி அரண்மனை சென்றதை என் கண்ணால் பார்த்தேன்..”
“என்னது ஏரிக்குள் ரகசிய வழியா..!இது எப்படி சாத்தியம்..!”இடும்பன்காரி கேட்க,
“நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்..இடும்பா.. நான் சொல்வது முற்றிலும் உண்மை..”என கருந்திருமன் கூறினான்.
சாம்பவன் அவனிடம்,”அவன் சொல்வது உண்மையாக தான் இருக்கும் இடும்பா,ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் கல்லணை கட்டியவர்கள் சோழர்கள்.இதோ இப்போ கூட நம்மை பிரமிக்க வைக்கும் நிழலே தரையில் படாமல் பெரிய கோவிலை தஞ்சையில் கச்சிதமாக கட்டி உள்ளார்கள்..அவர்களிடம் சிறந்த கட்டிட கலை அறிவு உள்ளது..நாம் அரண்மனைக்குள் சென்று அவர்களை கொல்ல சிறந்த வழி ஒன்றை கண்டுபிடித்து கொண்டு வந்து உள்ளாய் கருந்திருமா..உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நாம் பட்டாபிஷேகம் செய்யும் முன்னிரவு அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்க வேண்டும்..”
“ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு சாம்பவா..அந்த ஏரியில் நாம் நீந்தி செல்ல முடியாது..நானே மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பி வந்து உள்ளேன்..”
“நீ என்ன சொல்கிறாய் கருந்திருமா..சொல்வதை புரியும்படி சொல்.”
“ஆம்..இடும்பா..!ஏரியில் முதலைகள் உள்ளன..!என் நீச்சலின் வேகம் உனக்கே தெரியும்.அவ்வளவு வேகத்தில் சென்றே ஒரு முதலை என்னை துரத்த ஆரம்பித்து விட்டது..அதன் வாயில் சிக்கும் நேரம் அங்கே இருந்த பாறையில் தாவி அமர்ந்து இரவு முழுக்க அங்கேயே கழித்தேன்.விடிந்த பிறகு மிகவும் கவனமாக நீந்தி வந்து கரை சேர்ந்தேன்.
“அப்போ அங்கே எப்படி போவது..!என்று இடும்பன் கேட்க,.
“இரவில் தான் அங்கு போக முடியும்.அதுவும் படகின் வழியே தான் அங்கே செல்ல முடியும்..”
அப்பொழுது காலடி சத்தம் கேட்க,உடனே மூன்று பேரும் தனித்தனியாக பிரிந்து சடசடவென அருகில் இருந்த மரங்களில் ஏறி,இலைகளுக்கு நடுவே தங்களை மறைத்து கொண்டனர்.
வந்திருந்த இருவரில் தங்களுக்கே உரிய சங்கேத மொழியில் கோட்டான் கூவுவது போல கூவிய உடன் மறைந்து இருந்த மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு கீழே குதித்தனர்.
“வா சடாசரா..!உன் வரவை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தோம்.ஏன் இந்த தாமதம்”என்று கேட்ட இடும்பன்காரி பக்கத்தில் ராஜ உடையுடன் மிடுக்கொடு இருந்தவனை பார்த்த உடன் இலங்கை இளவரசன் என்று புரிந்து கொண்டான்..

டேய், எப்போ டா முடிப்பிங்க
Y stopped??
Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku
கதை பாதில நிறுத்திட்டிங்க
கதை பாதில நிறுத்திட்டிங்க