அசுரன் Part 37**Stopped** 29

சடாசரன் அவர்களிடம்,”எங்கு நோக்கிலும் நம் பகைவர்கள் நிறைந்து உள்ளனர் இடும்பா..அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சிங்கள இளவரசனை இங்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி‌ விட்டது..”

இலங்கை இளவரசன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க,அதை பார்த்த இடும்பன்”என்ன இளவரசே..!சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்..”என்று கேட்டான்.

“இது என்ன இடம்”இலங்கை இளவரசன் கேட்க..

“இது நம் பகைவனின் பள்ளிப்படை வீடு.அதாவது சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் போர் புரிந்த இடம்..இங்கு தான் நம் பகைவனின் படைவீரர்கள் புதைக்கப்பட்டு உள்ளனர்.”

“இங்கே மனிதர்கள் யாரும் இல்லையா”இலங்கை இளவரசன் கேட்க

“இங்கு ஆந்தைகளும்,நரிகளையும் ,நம்மை தவிர வேறு யாரும் இங்கு வருவது இல்லை.”

“ஓ பகைவனின் படைவீட்டில் இருந்தே பகைவனை அழிக்கும் திட்டமா..”என்று இலங்கை இளவரசன் சிரித்தான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் முகம் வாடி போனது..

“ஏன் இளவரசே தங்கள் முகம் வாடி விட்டது..”

“எனக்கு இங்கே ஒரு எதிரி இருக்கிறான்.அவனை நான் அழிக்க வேண்டும்..”என அவன் கூறும் பொழுதே அவன் கண்கள் சிவந்தது.

“யார் அது இளவரசே..?”கருந்திருமன் கேட்டான்.

“கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான்.”என சொல்லி கொண்டு இலங்கை இளவரசன் பற்களை நறநறவென கடித்தான்.”ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட எங்களை சோழர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.எங்கள் கோட்டையை கைபற்றி விடுவார்கள்.ஆனால் இலங்கையில் உள்ள எங்களுக்கு மட்டுமே பரிச்சயமான அடர்த்தியான காடுகளில் நாங்கள் மறைந்து இருந்து சரியான சமயம் பார்த்து மீண்டும் எங்கள் கோட்டையை கைப்பற்றுவது தான் வழக்கமா இருந்தது.ஆனால் இந்த இளங்கோ நாங்கள் காட்டில் மறைந்து இருந்த இடத்தையும் கண்டு பிடித்து வெறும் சில வீரர்களை மட்டுமே வைத்து எங்கள் பெரும்படையை அங்கே நிர்மூலமாக்கி விட்டான்.நாங்கள் காட்டில் மறைத்து வைத்து இருந்த உங்கள் மணிமுடியையும் கைப்பற்றி விட்டான்.அவனோடு நேருக்கு நேர் சண்டையிட்ட நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.என்னை அவன் கொல்ல முயன்ற பொழுது என் தமக்கை ரோகிணி அவன் காலில் விழுந்து காப்பாற்றியது எனக்கு பெருத்த அவமானமாகி போய் விட்டது.அவனை நான் கொல்ல வேண்டும்.ஆனால் நேருக்கு நேர் அவனை போரிட்டு வெல்லும் சக்தி என்னிடம் கிடையாது.அவனை ஏதாவது குறுக்கு வழியில் தான் வெல்ல வேண்டும்.”

“அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது இளவரசே..!பட்டாபிஷேகம் அன்று உள்ளிருந்தும் நாம் நம் வேட்டையை தொடுக்கும் அதே நேரம்,வெளியில் இருந்து ராஜேந்திர சோழனிடம் தோற்ற கங்க நாட்டு அரசனும்,ராஜகூட அரசர்களும் சேர்ந்து வெளியில் இருந்து போர் தொடுக்க போகிறார்கள்..இம்முறை நம் பகைவர்களை வேரோடு அழிக்க போகிறோம்..”என இடும்பன்காரி கடகடவென சிரித்தான்.அவன் போட்ட சத்தத்தை கேட்டு அமைதியாக இருந்த அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தது.நரிகள் சிதறி ஓடின.பறவைகள் பயந்து பறக்கும் சத்தம் கேட்டது.

“இளவரசே..!நீங்கள் தப்பி வரும் பொழுது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்து இருக்கலாமே..”

“இல்லை,அவர்கள் சோழ நாட்டு அரண்மனையில் இருப்பது தான் உச்சிதம்..எதிரிகளின் பலவீனங்களை அறிந்து கொள்ள அவர்கள் அருகில் இருப்பது தான் சரியானது..
மேலும் என் தமக்கை ரோஹிணி அங்கே இளவரசன் இளங்கோவை காதல் வலையில் வீழ்த்த காத்து இருக்கிறாள்.

இடும்பன்காரி நகைத்தான்.”ஒரு இளவரசனை மயக்கும் அளவிற்கு உங்கள் தமக்கை அவ்வளவு பெரிய அழகியோ…!என இடும்பன் கேட்க,

“ஆமாம்”என சிங்கள இளவரசனான ரோஹன் வாளின் உறையில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஓவியத்தை எடுத்தான்.அதை பார்த்த இடும்பன் கண்கள் அகல விரிந்தன..

“ஆகா..!என்ன ஒரு பேரழகி…இவளை அணு அணுவாக ரசித்து ருசிக்க வேண்டுமே..என இடும்பன்காரியின் கருத்த தோள்கள் துடித்தது.

5 Comments

  1. டேய், எப்போ டா முடிப்பிங்க

  2. Y stopped??

  3. Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku

  4. kowsalya jayakumar

    கதை பாதில நிறுத்திட்டிங்க

  5. கதை பாதில நிறுத்திட்டிங்க

Comments are closed.