தன் வம்சம் அழிந்து விட்டது ,இதற்கு மேல் தன்னை யாரும் தடுக்க முடியாது என இறுமாப்பில் காத்தவராயன் இருப்பான்.அதனால் இனி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவன் உங்களை கண்காணிக்க மாட்டான்.அது தான் நமக்கு தேவை.காத்தவராயன் சோழர் காலத்திற்கு சென்று இலங்கை மன்னனுடன் நடந்த போரில் தன் வம்சத்தின் வாரிசை அழித்து இருக்கிறான்.நமக்கு ரெண்டு வழி உள்ளது.ஒன்று காத்தவராயன் அவன் வம்ச வாரிசை அழிக்க வரும் பொழுது அவனை தடுக்க வேண்டும்..அது போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது மிக மிக சிரமமான காரியம்.இன்னொன்று அவன் அழிக்க வரும் முன் நேரத்திற்கு சென்று நீங்கள் சமயோசிதமாக செயல்பட்டு காத்தவராயன் வம்சாவளியை தொடர செய்துவிட்டு வரவேண்டும்.அந்த விசயம் முக்கியமா காத்தவராயனுக்கு தெரிய கூடாது.உங்களில் இருவர் சோழர் காலத்திற்கு பயணம் செய்ய வேண்டும்..யார் போக போவது..” என கேட்டார்.
மாறன் உடனே,”குருவே..என்னை பொறுத்தவரை அனு மற்றும் லிகிதா செல்வது சரியென நினைக்கிறேன்..ஏனெனில் ஆராதனா கொஞ்சம் அவசரகுடுக்கை..”என்று சொல்ல ஆராதனா முகம் கோபத்தில் சிவந்தது..
அதை பார்த்த மாறன்,”ஆரூ..நான் சொல்றேன் என்று கோச்சுக்காதே..ஒவ்வொருவர் கிட்ட குறையும் இருக்கும்,நிறையும் இருக்கும்.உன்கிட்ட இருப்பது சின்ன குறை தான்.உன்கிட்ட இருக்கும் நிறை அவங்ககிட்டேயும் இல்ல..இப்போ அவங்க போக போறது எதிரியை எதிர்க்க இல்ல..நடந்த பிழையை சரிசெய்ய..காத்தவராயன் அந்த காலத்திற்கு பிரவேசிக்கும் முன்னரே இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பி விடுவார்கள்.இந்த வேலைக்கு அவர்கள் தான் தகுதி ஆனவர்கள்.ஆனால் காத்தவரானை எதிர்க்க போகும் பொழுது நீ கண்டிப்பா தேவை”என மாறன் சமாதானம் சொன்னாலும் ஆராதனா மனசு ஆறவில்லை..
குருநாதரும் மாறன் சொல்வதை ஒப்புக்கொண்டு,”இப்போ நீங்க காலம் கடந்து செல்ல போறீங்க..ஆனா,இப்போ காலச்சக்கரம் இங்கே உருவாக போறது இல்ல..அந்த காலச்சக்கரம் அமாவாசை அன்று தான் மாயமலையில் உருவாக போகிறது.அதுவரை நாம் காத்திருக்க முடியாது.காலச்சக்கரம் இல்லாமல் நீங்கள் உடலோடு பின்னோக்கி செல்ல முடியாது..உங்கள் உடலை விட்டு தான் நீங்கள் செல்ல வேண்டும்..நீங்கள் திரும்பி வரும் வரை உங்கள் மேனியை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கு மேல் நான் சொல்வதை கவனமா கேளுங்க..”என்று அவர் சொல்ல இருவரும் கவனமாக கேட்டு கொண்டனர்
“உங்கள் ஆன்மா உடலில் இருந்த பிரிந்த உடன் நீங்கள் வெட்டவெளி என்ற தளத்திற்கு சென்று விடுவீர்கள்.அங்கு நிகழ் காலம்,இறந்த காலம்,எதிர்காலம் என்று எதுவுமே கிடையாது..நீங்கள் கொஞ்சம் கூட அங்கே பதட்டபட கூடாது.அங்கு நீங்கள் பல உயர்ந்த ஆன்மாக்களை சந்திக்க நேரிடும்..அவர்களை எதுவும் தொந்தரவு செய்யாமல் நீங்கள் எந்த காலத்திற்கு செல்ல வேண்டுமோ அதை மட்டும் தியானியுங்கள்.அது போதும்.. உடனே அந்த காலத்திற்கு சென்று விடுவீர்கள்..தியானம் செய்யும் ஆன்மா தான் காலம் கடந்து செல்லும். “என்று அவர் சொல்ல இருவரும் கேட்டு கொண்டனர்.
“சாமி,எங்களுக்கு ஒரு சந்தேகம்,இருக்கும் குறைந்த நேரத்தில் நாங்க எப்படி காத்தவராயன் வம்சாவளியை கண்டுபிடிப்பது..”என அனு கேட்டாள்.
“அது மிகவும் சுலபம் பெண்களே..!கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான் காத்தவராயன் வம்சாவளி.இலங்கை,மற்றும் கங்கை வரை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கினான்.அங்கு தான் முடிசூட்டும் விழாவுக்கு முன்பு இலங்கை மன்னன் சதி செய்து நடத்தும் ஒரு போரில் காத்தவராயன் ஆவி இளங்கோவை கொன்றான்.நீங்கள் அந்த நிகழ்வு நடக்கும் இரு தினங்களுக்கு முன்பு அங்கே சென்று உங்கள் காரியத்தை கச்சிதமாக செய்து விட்டு வாருங்கள் .”
“உத்தரவு சாமி”என இருவரும் கோரசாக சொன்னார்கள்.
வாழ்வில் தங்களுக்கு ஏற்பட போகும் ஒரு புதிய அனுபவத்திற்கு ஆவலுடன் தயாராக இருந்தனர்.
மாறனின் குரு,சில மூலிகைகளை அரைத்து குளிகையாக மாற்றி கொண்டு வந்து இருந்தார்.அதை இருவரிடம் கொடுத்து வாயில் போட்டுக்க சொல்ல,அவர்கள் அப்படியே போட்டு கொண்டு அங்கேயே காலை நீட்டி,கண்ணை மூடி படுத்து கொண்டனர்.

டேய், எப்போ டா முடிப்பிங்க
Y stopped??
Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku
கதை பாதில நிறுத்திட்டிங்க
கதை பாதில நிறுத்திட்டிங்க