நிகழ்காலம்
காத்தவராயனுக்கும் ,அவளுக்கும் உண்டான தொடர்பை அறிய முடியாமல்,லிகிதா தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள்.கனவில் கண்ட காட்சி திரும்ப திரும்ப நினைவில் வர,மனம் குழம்பிய குட்டை போல இருந்தது..எப்பவெல்லாம் மனம் இந்த மாதிரி தளர்ந்து விழுகிறதோ,அப்பொழுது எல்லாம் அவள் கையில் எடுக்கும் ஆயுதம் பரதம் தான்.பரத நாட்டிய ஆடையை உடுத்தினாள்,காலில் சலங்கை பூட்டினாள்.ஆட ஆரம்பித்தாள்.தன்னந்தனியாக தாளமின்றி,ராகமின்றி ஒரு நடனம் அரங்கேறியது.ஆனால் அவள் மனதுக்குள் ஒரு ராகம் உருவாக அதன் தாளத்திற்கு ஏற்ப அவள் நடன அசைவுகள் வெளிப்பட்டன..
காத்தவராயன்,கஜாவை அந்த வீட்டின் ஒதுக்குபுறமாக இருந்த ஜெனரேட்டர் அறைக்கு கூட்டி சென்றான்.அந்த அறை காம்பவுண்ட் சுவரை ஒட்டி இருந்தது..அதே போல் காம்பவுண்ட் சுவருக்கு அந்த பக்கம் அதே போல் இன்னொரு ஜெனரேட்டர் அறை இருந்தது..ஜெனரேட்டர் அறையில் இருந்த ஒரு பெரிய ட்ரம்மை காத்தவராயன் நகர்த்த சொல்ல அங்கே கீழே ஒரு வட்ட வடிவ பலகை இருந்தது..அந்த வட்ட வடிவ பலகையை எடுக்க உள்ளே சுரங்க வழி படிக்கட்டுகள் தென்பட்டது.மொபைல் டார்ச் அடித்து கொண்டே கஜா கீழே இறங்க,நான்கு படிக்கட்டுகள் தாண்டிய உடனே சமதள தரை வந்து விட்டது.குனிந்து தான் செல்லும் அளவுக்கு தான் உயரம் இருக்க,கஜா தன் பருத்த உடலை குனிந்து செல்ல சிரமப்பட வேண்டி இருந்தது.அவன் தொப்பை தடுக்க,தலையை அடிக்கடி மேலே முட்டி கொள்ள வேண்டி இருந்தது..
“அய்யோ காத்தவராயா…என்னால முடியல..இதுக்கு நான் தெருவை சுத்தியே வந்து இருப்பேனே..”என பினாத்தினான்.
காத்தவராயன் அவனை திட்டினான்.”அட மாமிச மலையே..!பேசாமல் வா..சும்மா வருமா சுகுமாரி..!உனக்கு கிடைக்க போவது 50 கிலோ எடையுள்ள தேனில் ஊறிய ரசகுல்லா…அதை சுவைக்க வேண்டுமென்றால் இந்த கஷ்டம் கூட படவில்லை என்றால் எப்படி..?நான் ஒருத்தியை அடைய அந்த காலத்தில் என்னவெல்லாம் பாடுபட்டேன் தெரியுமா..!அதில் இது ஒரு சதவீதம் கூட கிடையாது..அமைதியாக பின்னாடி தொடர்ந்து வா..”என பறந்து கொண்டு இருந்த காத்தவராயன் ஆவி சொன்னது..
மேல்மூச்சு வாங்க கஜா சுரங்க பாதையின் இன்னொரு முனைக்கு வந்தான்..மேலே வந்து மூடியை திறக்க,வெளிகாற்று முகத்தில் மோதியது..மேலே வந்த கஜா இடுப்பில் கைவைத்து கொண்டு “அப்பாடா..”என பெருமூச்சு வாங்கினான்..
இருவரும் லிகிதா இருந்த வீட்டுக்குள் நுழைய,அங்கே லிகிதா நடனம் ஆடி கொண்டு இருப்பதை பார்த்தார்கள்.
லிகிதாவின் நடன அசைவுகளை கஜா ரசித்து பார்க்க,காத்தவராயனோ அதிர்ந்து பார்த்தான்..
“இந்த நடனம்…இந்த நடனம் ஆத்மமாலிகா ராகத்திற்கு ஆடப்படும் நடனம் அல்லவா..இதை அறிந்தவர் பரமன் மட்டுமே.என்னை அவரால் அன்றி யாரும் அழிக்க முடியாது என்றல்லவா நான் இறுமாந்து இருந்தேன்..இது ஆத்ம சக்தியை வெளிகொண்டு வரும் நடனம் அல்லவா..இந்த ஆத்ம சக்தி வெளிப்பட்டால் என் கதை கந்தல் ஆகி விடுமே…இந்த நடனம் மதிவதனிக்கு கூட தெரியாதே…!அதனால் தானே அவளால் என் சரீரத்தை அழிக்க முடியவில்லை..என்னை அழிக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள தானே மதிவதனி பரமனை குறித்து தவம் செய்தாள்.அப்படி இந்த ரகசியம் அவள் தெரிந்து கொண்டு இருந்தாலும் மதிவதனியின் மறுபிறப்பு பிரியங்கா தானே..அவளுக்கு தானே இந்த ரகசியம் தெரிந்து இருக்கும் என நினைத்தேன்.அவளுடன் உடலுறவு கொண்ட பிறகு உருவாகும் சிசுவை கைப்பற்றி அழித்து விட்டு அவளையும் கொன்று விட்டால் என்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்தேனே..!இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை.மதிவதனியின் மறுபிறவி பிரியங்காவா..!இல்லை இந்த லிகிதாவா..! இவளா…அவளா” என குழம்பினான்..”காத்தவராயா… உஷார்…உஷார்..
விதி ஏதோ உன்னிடம் சதிவேலை செய்கிறது.நீ உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது..”என தனக்கு தானே சொல்லி கொண்டான்.
“இவளை இப்போதே அழித்து விடலாமா..!”என காத்தவராயன் ஒருகணம் நினைத்தான்..
“அய்யோ அதுவும் பண்ண முடியாதே..!நான் யாரிடமெல்லாம் உடலுறவு கொண்டேனோ அவர்கள் வயிற்றில் வளரும் சிசு எனக்கு தேவை ஆச்சே..எந்த உடல் மூலம் அந்த சிசு உருவானதோ அந்த உடலுக்கே சொந்தகாரனை வைத்து தான் நான் பலி கொடுக்க வேண்டும்.பிறகு அந்த உடலுக்கு சொந்தக்காரன் அந்த உயிரின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவர்களை நான் பலி கொடுத்து தானே என் உடலை நான் பெற முடியும்..என் உடலை பெறவே எனக்கு இத்தனை சிக்கலை வைத்து இருக்கிறதே..இந்த விதி..!கடவுளே..ஏன் இப்படி சோதிக்கிறே..!இப்போ இவளை என்னால் அழிக்க கூட முடியாத படி விதி என் கையை கட்டி போட்டு உள்ளதே..!”என காத்தவராயன் புலம்பினான்..
