கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 5

“இன்னைக்கு நீ என்னை ரொம்பவே வெறுப்பேத்தறடா …உன்னை நான் தெரியாத்தனமா நாய்ன்னு சொல்லிட்டேண்டா… அதுக்காக என்னை ஏண்டா இப்படி வறுத்து எடுக்கறே?” செல்வா குமைந்தான்.

“பின்னே என்னடா … அந்த சம்பத்துக்கு உன் சுகன்யா மேல ஏதோ வெறுப்பு; சமயம் பாத்து அவன் உன்னை உசுப்பேத்தி; நீ சுகன்யா கிட்ட அதை ஒளறி; அது மூலமா உங்க கல்யாணத்துல குழப்பம் பண்ண அவன் முயற்சி பண்ணியிருக்கான்; இத்தை நீ புரிஞ்சுக்காம என் மேல கோவப்படறே..”

“ம்ம்ம்”

“நீ கருப்பா … சிவப்பாடா …?”

“என்னடா சொல்றே”

“கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“நான் மா நிறம் தான்…”

“சுகன்யா, செவப்பு தோலோட என்னை மாதிரி இருக்கறவன் பின்னாடி போகாம, உன்னை ஏண்டா செலக்ட் பண்ணா?”

“ம்ம்ம்.. இந்த ஆங்கிள்ல்ல நான் எப்பவும் யோசிக்கலடா..”

“அந்த சம்பத்துக்கு தான் கருப்பா இருக்கோம்ன்னு ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கலாம். நாலு நிமிஷம் பேசினவன் … நாலு தரம் தன் உடம்பு நிறத்தைப்பத்தி உங்கிட்ட பேசியிருக்கான்… சுகன்யா அவனை தொட்டு கை குலுக்கலை… அவன் கிட்ட சரியா பேசலைன்னு அவன் காண்டா இருக்கும் போது நீ போன் பண்ணே? சரியா?”

“ஆமாம்..”

“எட்டு வருஷமா சுகன்யாவும், அந்த சம்பத்துங்கற சொறி நாயை காதலிச்சிருந்தா… அவன் கையை குலுக்கறதுக்கு அவ தயங்குவாளா? … அதுவும் அவன் அவளுக்கு அத்தைப் பிள்ளை.. உன் மண்டையில நான் சொல்றது ஏறுதா?”

“பாயிண்ட்டு மாப்ளே!” செல்வாவுக்கு சிறிது மனதில் தெம்பு வந்தது.

“எட்டு வருஷமா சுகன்யாவை காதலிக்கறவன், அவளைக் காலையிலப் பாத்தப்ப
“க்ளாட் டு மீட் யூ”ன்னு சொல்லுவானா? செல்வா நல்லா யோசனைப் பண்ணி பாருடா..”

“ம்ம்ம்”

“என் யூகம் என்னன்னா அவன் சுகன்யாவை ரொம்ப நாள் கழிச்சி பாக்கறான்… இல்லே முதல் தரமா பாக்கறான். இல்லேன்னா சுகன்யாவுக்கு அவனுக்கும் பழக்கமேயில்லை..”

“It is quite possible…” செல்வாவுக்கு உற்சாகம் அதிகமாகியது. அவன் சீனுவை நெருங்கி உட்க்கார்ந்து கொண்டான். என்னா இருந்தாலும் நம்ம மாப்பிள்ளை கிட்ட போனா பிரச்சனையை எப்படியாவது சிக்கு எடுத்துடுவான். செல்வா உற்சாகமானான்.

“அதுக்கப்புறம் சம்பத் என்னா சொன்னான் உன் கிட்ட?
“கடைசியா ஒரே ஒரு வார்த்தை … உன் தோலு என்னா செவப்பா? இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?’ — உன்னைக் கேட்டானா இல்லையா?

“ஆமாண்டா …”

“அப்படின்னா என்னடா அர்த்தம்? ஏற்கனவே சம்பத்துக்கு சுகன்யாவை கட்டிக்கொடுக்க அவங்க வீட்டுல இஷ்டமில்லே? சம்பத்து வீட்டு ப்ரப்போசலை சுந்தரி மறுத்திருக்காங்க; அதுதானேடா இதுக்கு அர்த்தம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *