அதிர்ஷ்டகாரண் – Part 3 19

அடுத்த நாள் காலையில் டாக்டர் வந்ததும், நானும் அப்பாவும் அவரை தனியே சென்று சந்தித்தோம்.

பத்மா அத்தைக்கு sugarம், BPயும் அதிகமாகி கண்ட்ரோல் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் ECG நார்மல் நிலைக்கு வரும் வரை ICU விலே இருக்கட்டும் என்று சொல்ல நாங்களும் அமைதியாக சரி என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.

சகுந்தலாவும் கீதாவும் மிகவும் கவலையாக இருந்தனர். இருவருக்குமே ஆறுதல் தேவை என்பதை உணர்ந்த நாங்கள் அவர்களின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு தைரியம் சொல்ல ஆரம்பித்தோம்.

திடீரென்று கீதா சகுந்தலாவிடம் “அக்கா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்கிறதை மாலதி அக்காகிட்ட சொல்ல வேண்டாமா?”ன்னு கேட்டாள்.

அதுவரை எங்கள் யாருக்குமே மாலதியின் நினைவு வரவில்லை. திடீரென்று சகுந்தலாவின் திருமணம் நிச்சயம் ஆனதால் நீண்ட தொலைவிலிருந்த அவளால் வர முடியவில்லை என்ற கடிதம் மட்டுமே வந்தது. அவளும் இந்த ஊருக்கு வந்து ஆறு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும். வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்கு குடிகார புருஷனைக் கூட்டிக்கொண்டு வர பயந்துகொண்டு அவள் ஊரிலேயே இருப்பதாக பத்மா அத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி கேட்டிருக்கிறேன்.
கீதா கேட்ட கேள்விக்கு சகுந்தலா எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதிலிருந்து அவளுக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் ஓட ஆரம்பித்திருந்தது எனக்கு புரிந்தது.

“என்னக்கா என்ன சொல்ற?”ன்னு திரும்பவும் கீதா கேட்க, “என்ன செய்றதுன்னு தெரியலை கீதா, அவளால அவ்வளவு தூரத்தில இருந்து நினைச்சவுடனே கிளம்பி வர முடியுமான்னு தெரியலையே”ன்னு சொன்னாள்.

“பேபி, அவங்களை வரச்சொல்லனும்னா சொல்லு, இன்னைக்கே e- ticket புக் பண்ணி அவங்களை கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு செய்றேன்”னு அப்பா அவகிட்ட “எள் என்கிறதுக்கு முன்னாடியே எண்ணை”யாய் உருகி நின்னாரு.

“மாமா, அவசரப்பட வேண்டாம். எதுக்கும் இன்னிக்கு வெயிட் பண்ணி பார்போம். அம்மாவ ஜெனரல் ரூமுக்கு மாத்திட்டாங்கன்னா, அவங்ககிட்ட கேட்டுகிட்டு அப்பறம் முடிவு செய்வோம்”ன்னு சொல்லிட்டு அந்த பேச்சுக்கு சகுந்தலா முற்றுப்புள்ளி வைத்தாள்.

முடிவு சொல்ல வேண்டிய பத்மா அத்தையின் உடல் நிலையிலோ எந்த முன்னேற்றமும் இல்லை. இதோ ICU வை விட்டு வெளியே வந்திடுவார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருக்க நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, அவரை நார்மல் வார்டிற்கு கொண்டு வரவே இல்லை. ICU வின் சின்ன கண்ணாடி மூலமாக பார்க்கும் போது ஆக்ஜிசன் சிலிண்டரின் உதவியால்தன் அவரால் மூச்சுவிட முடிவது தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *