அதிர்ஷ்டகாரண் – Part 3 51

அன்று மாலைவரை எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டரும் எதுவும் சொல்லாமல் “வெயிட் பண்ணுங்க பார்க்கலாம்” என்று சொல்லியபடியே இருந்தனர். அடிக்கடி “சீக்கிரமா இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க”ன்னு சொல்லி ஏதாவது ஒரு மருந்தை வாங்கி வர என்னை ஏவிக்கொண்டே இருக்க, பணம் தண்ணீராய் செலவாகிக்கொண்டிருந்தது.

சகுந்தலா, டாக்டர்களிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், ICU விற்குள் சென்று வரும் எல்லா நர்ஸுகளையும் சினேகிதம் பிடித்து, அவர்களை விரட்டி விரட்டி தன் தாயின் நிலையை கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் ஒரு நர்ஸ், “இந்த டாக்டர், இது போன்ற ஆப்ரேஷன்ஸ் நிறைய செய்திருப்பதாகவும் இதுவரை யாருக்கும் இந்த மாதிரி வந்ததில்லை என்றும் இது கொஞ்சம் complicated case” என்று சொன்னதாக சொல்ல, எங்களுக்கு திகில் பிடிக்க ஆரம்பித்தது.

அன்று இரவு எல்லோருக்கும் தூக்கம் கண்ணை மூட வைத்தாலும், யாருக்கும் வீட்டிற்கு போக மனமில்லை. காண்டின் சாப்பாடு வயிற்றுக்கு ஒத்து வரவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அன்று முழுதும் அதையே சாப்பிட்டு ஒரு வழியாக சமாளித்தோம்.

கொஞ்ச நேரத்தில் சுரேஷால் தாக்கு பிடிக்க முடியாமல் அந்த வராண்டாவிலேயே படுத்து தூங்க ஆரம்பிக்க, நாங்கள் ஒவ்வொருவராக அவன் பக்கத்திலேயே சாய்ந்து அரைகுறையாக தூங்க ஆரம்பித்தோம்.

முதல் நாள் என் கை வரை வந்து கிடைக்காமல் போன கீதா, இன்றும் என் பக்கத்திலேயே படுத்து தூங்கினாள். ஆனால் எங்களுடன் இன்று சகுந்தலாவும் என் அப்பாவும் இருந்ததால் என் நகம் கூட அவள் மேல் படாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டேன்.

அடுத்த நாள் காலையில் செக் செய்ய வந்த சீனியர் டாக்டர், எங்களிடம் “பேஷண்டிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்படியும் இன்று மதியத்திற்குள் ஜெனரல் வார்டிற்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாம்” என்று சொல்லி எங்களுக்கு நிம்மதியை கொடுத்தார்.

மதியம் என்று சொன்னாலும் மாலை 6 மணி வாக்கில்தான் வார்டு மாற்றினார்கள்.

அத்தையும், சிலிண்டர் இல்லாமலேயே மூச்சு விட ஆரம்பித்திருந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எங்களிடம் கூறிவிட்டு, பேஷண்டை கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் எந்த நேரம் ஆனாலும் தனக்கு சொல்ல வேண்டும் என்றும் நர்ஸிடம் strict instruction கொடுக்க, அத்தையின் ரூமுக்கு VIP attention கொடுக்கப்பட்டது.

அடுத்த ரெண்டு நாள் அப்பா லீவு போட, சுரேஷும் ஸ்பெசல் கிளாஸ் கட் அடிக்க, ஹாஸ்பிடலில் அத்தை கண் திறந்து எங்களோடு பேச காத்துகிடந்தோம். நாங்கள் எல்லோரும் மாறி மாறி ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் வந்து சென்றாலும், எனக்கு சகுந்தலாவுடன் தனித்திருக்க வாய்ப்பு அமையவில்லை.

பக்கத்திலே இருந்தாலும், அடுத்தவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று தள்ளியே நின்று பேசிக்கொண்டோம். எங்களுக்குள் ஒரு இடைவெளி விழுந்திருந்தது. என்னால் அதை தாங்க முடியவில்லை. என் நிலை உணர்ந்த சகுந்தலா, “சுந்தர் உன்னை பார்க்க பாவமாயிருக்கு, எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ பிளீஸ்… இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமாய் சேர்த்து வச்சு உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று ரகசிய குரலில் என்னிடம் சொல்லி எனக்கு தெம்பு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

டாக்டர்களின் அயாராத முயற்சியின் பலனாய் அத்தைக்கு ஒராளவு குணம் ஆகி எங்களிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.