அதிர்ஷ்டகாரண் – Part 3 51

“முதல் முதலா ஒரு ஆண்கிட்ட நெருங்கி பழகுறப்ப அவன் செய்ற எல்லா செயலுமே பிடிக்கிறது இயல்புதான், அதனால நீ என்னை விரும்புறதும் தப்பில்லை”ன்னு அவளை சமாதனப்படுத்திவிட்டு, “ஆக இப்போதைக்கு உன்னோட ஹீரோ நாந்தான் சொல்லு”ன்னு சிரித்தேன்.

அவளும், :நீங்க சொல்றது சரிதான். நான் நெருக்கமா பேசி பழகுன முதல் ஆண் நீங்கதான்”னு சொல்லி, அதனாலயே, “இந்த ஹீரோயினிக்கு ஏத்த ஹீரோ நீங்கதான்” என்று சொல்லி “என்ன நான் சொல்றது சரிதானே?”ன்னு என்னைக் கேட்டாள்.

நானும், “அதிலென்ன சந்தேகம், நீ உண்மையிலேயே அழகு ஹீரோயினி”தான் என்று சொன்னேன்.

அதை கேட்டு சிரித்தவள், “அது சரி என்னைக் கேட்டீங்களே, இப்ப நீங்க சொல்லுங்க, உங்க மனசுல இருக்கிற கனவு தேவதை யாரு?” என்று கேட்டாள்.

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிக்க ஆரம்பித்தேன்.. அவளோ விடாமல், “நான் மனம் திறந்து உண்மையை சொன்னேன் இல்லையா? அது மாதிரி நீங்களும் சொல்லுங்க, சத்தியமா நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்று சொல்லி என் பதிலுக்காக ஆவலுடன் என் முகத்தை நோக்கினாள்.

“கீதா, உண்மையை சொல்லனும்னா… எனக்கு சகுந்தலா அம்மா மாதிரி பொண்ணுதான் மனைவியா வரனும்கிறதுதான் என் ஆசை. ஏன்னா, தன்னலம் இல்லாம எங்களுக்காக ரெண்டாந்தாரமா கழுத்தை நீட்டின அம்மாவை காலம் பூரம் கண் கலங்காம வச்சு காப்பாத்த ஒரு நல்ல குணவதிதான் எனக்கு வேணும்” என்று சொன்னேன்.

தன் சகோதரியின் நலனில் எனக்கிருந்த அக்கரை அவளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ரொம்ப தேங்ஸ் அண்னா, உண்மையிலேயே அக்கா ரெண்டாந்தாரமா போறதுன்னு முடிவு செஞ்சது எனக்கு அதிர்சியா இருந்தாலும், அவளோட தியாகத்தால எங்க குடும்பத்தில இருந்த வறுமை சுத்தமா போயிடுச்சு… இன்னிக்கு நாங்க நல்லா இருக்கிறதுக்கு அக்காவும் மாமாவும்தான் காரணம்”. “அதை நாங்கள் என்னிக்கும் மறக்க மாட்டோம்” என்றாள்.

அமைதியாக இருந்த என்னிடம் அவளே தொடர்ந்து, அதுமட்டும் இல்லாம, “என்னதான் ரெண்டாந்தாரமா வந்தாலும், அவங்களை அம்மா அம்மான்னு சுத்தி வர ரெண்டு பிள்ளைகளூம், பொண்டாட்டிய மட்டும் இல்லாம அவங்க குடும்பமும் தன்னோட குடும்பம்ன்னு நினைக்கிற மாப்பிள்ளையும் கிடைக்க உண்மையிலேயே நாங்க கொடுத்து வச்சிருக்கனும்”னு சொல்லும் போதே அவள் கண்களில் தன் சகோதரியின் தியாகத்தை நினைத்து கண்களின் ஓரத்தில் தானாகவே கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

அவளின் கண் நீர் துளிகளை, என் கைகளால் துடைத்து விட்டு, அவளை என் மீது சாய்த்து கொண்டு, “சீ… என்ன இது? எதுக்காக அழுகிறாய்? இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதால்தான் நடந்துள்ளது. ரெண்டு நல்ல குடும்பங்கள் இணைந்துள்ளன” என்று சொன்னேன்.

அவளோ, “அதெல்லாம் சரிதான் என்ன இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இன்னும் எனக்கு மகிழ்சியளிக்கும் விதத்தில் இணைதிருக்கலாம்” என்று சொன்னாள்.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்…

என் குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் அவளே தொடர்ந்து, ” இப்படி அக்கா உங்கள் வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால், நான் உங்கள் வீட்டிற்கு வர வழியிருந்திருக்குமே” என்று சொல்லி என்னை பார்க்க, நான் சற்று அதிர்ந்து போய் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு , “நீ என்ன சொல்ல வர்ர?”ன்னு கேட்டேன்.

அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், “ஆமா, அன்னைக்கு நாம எல்லோரும் ஹால்ல இருக்கிறப்ப எங்கம்மா என்ன சொன்னாங்க?.. எனக்கு என் பொண்னை அண்ணன் வீட்டுக்கு கொடுக்கனும், சகுந்தலாவுக்கு சுந்தரவிட வயசு கம்மியா இருந்திருந்தா சுந்தருக்கு கொடுத்திருப்பேன் … இப்ப வேற வழியில்லாம எங்கண்ணனுக்கு கொடுக்கிறேன்னு சொன்னாங்களே மறந்திட்டீங்களா? அன்னிக்கு வேற யாராவது உங்கப்பாவுக்கு பொண்ணு கொடுத்திருந்தா, எங்கக்கா உங்கப்பாவுக்கு ரெண்டாந்தாரமா வந்திருக்கமாட்டாங்க, நானும் உங்களுக்கு சித்தியாகிருக்க மாட்டேன். உங்களைவிட வயசு கம்மியான என்னை உங்களுக்கு கட்டி கொடுக்க எங்கம்மா மறுப்பேதும் சொல்ல மாட்டாங்களே? நான் விரும்பிற உங்களை கல்யாணம் பண்ணிக்க சந்தோசமா ஒத்துக்கிட்டு இருப்பாங்க” என்ன பண்றது? எனக்கு உங்க மாதிரி நல்ல குடும்பத்துல வாழ்க்கை பட கொடுத்து வைக்கவில்லை” என்று சொன்னாள்.