அதிர்ஷ்டகாரண் – Part 3 51

“ஆமாம் கீதா, உங்க மாமா சொல்றதும் சரிதான்… பேச ஆரம்பிச்சானா ஓயவே மாட்டா” என்று தன் குழந்தைக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தபடியே மாலதியும் தன் குழந்தையை கைகளில் இடுக்கிக் கொண்டு கணவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
“ஆமாம் கீதா, உங்க மாமா சொல்றதும் சரிதான்… பேச ஆரம்பிச்சானா ஓயவே மாட்டா” என்று தன் குழந்தைக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தபடியே மாலதியும் தன் குழந்தையை கைகளில் இடுக்கிக் கொண்டு கணவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

ஸ்டேசன் விட்டு வெளியே வந்ததும், “ஏதாவது சாப்பிடலாமா?” என்று கேட்டதற்கு, “இல்லை வீட்டிற்கு போய் விடலாம்” என்று பாஸ்கர் சொல்ல, வீட்டிற்கு புறப்பட்டோம். காரின் முன் பக்கம் என் அருகில் பாஸ்கர் உட்கார, அக்காவும் தங்கையும் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டார்கள்.

சஹானாவின் டெலிவரி முடிந்து சென்ற மாலதி, தற்போது கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து வருவதால், அக்காவுக்கும் தங்கைக்கும் பேசிக்கொள்ள இடைப்பட்ட காலத்தில் நடந்த ஏராளானமான விசயங்கள் இருந்ததால், அவர்கள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார்கள். வண்டி ஸ்டார்ட் செய்த கொஞ்ச நேரத்திலேயே, வாயை திறந்து கொண்டு மெல்ல குறட்டை விட்டு பாஸ்கர் தூங்க ஆரம்பித்து விட்டான்.

வீட்டிற்கு நாங்கள் செல்லும் போது வாசலிலேயே எங்களை வரவேற்க அனைவரும் தயாராக இருக்க, பாஸ்கருக்கும் மாலதிக்கும் சந்தோசத்தில் வாயெல்லாம் பல்.

கீழே இறங்கியதும் சகுந்தலாவையும், கீதாவை கட்டி அணைத்தது போல் அணைக்க பாஸ்கர் முயற்சி செய்தான் ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மாலதி, தன் குழந்தையுடன் சகுந்தலாவிற்கும் கணவனுக்கு இடையே புக அவனால் எதுவும் செய்ய முடியாமல், “எப்படி இருக்க சகுந்தலா?” என்று வாய் வார்த்தையுடன் நின்று கொண்டான்.

ஆனாலும் உள்ளே நுழைந்ததும், முதல் வேலையாக அவளின் தோளில் கை போட்டு ,”சகுந்தலா, உங்க வீடு சூப்பர்!” என்று சொன்னான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அப்பா என்னிடம், “மாலதி நம்ம வீட்டு பெண்ணு. அவளுக்கு நம்ம வீடு அத்துப்படி. ஆனா பாஸ்கர் இங்க வர்ரது இதுதான் முதல் தடவை, அதனால நீ அவருக்கு நம்ம வீட்டை சுத்தி காட்டு”ன்னு சொல்ல, நானும் வேறு வழியில்லாம அவனை கூட்டிக்கிட்டு வீட்டை சுற்றி காட்டினேன்.

சகல வசதிகளோடும் இருந்த எங்க வீட்டை அணு அணுவாக ரசித்து பார்த்த பாஸ்கர், “பரவாயில்லை, சகுந்தலா அதிர்ஷ்டகாரிதான்… நாளைக்கே நீயும் உன் தம்பியும் கல்யாணம் கட்டிக்கிட்டு, பொண்டாட்டிங்க கூட டவுனுக்கு போய் செட்டில் ஆகிட்டீங்கன்னா, இந்த கிராமத்துக்கு எங்க வரப்போறீங்க?? காலம் பூரம் சகுந்தலா இந்த வீட்டுல மாகாராணியாட்டம் இருக்கலாம்”ன்னு அவன் சொன்னது எனக்கு எரிச்சலா உண்டாக்கிச்சு. ஆனாலும் அதுக்கு பதில் எதுவும் சொல்லாம பேசாம இருந்தேன்.
“Uncle, இருட்டி போச்சு! அதனால இப்ப தோட்டத்துக்கு போக வேண்டாம், காலைல போய் பார்ப்போம்” என்று சொன்னதும், “சரி” என்று ஒத்துக்கொண்டவன், என்னிடம் மெதுவாக “மாப்பிள, இங்க நல்ல தண்ணி கிடைக்குமா?”ன்னு கேட்டான்.

அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தாலும், ஒன்னும் தெரியாத மாதிரி நானும் என் முகத்தை வைத்துக்கொண்டு,” பக்கத்துலயே ஆறு ஓடுறதால இங்க இருக்கிறது எல்லாமே நல்ல தண்ணீதான் அங்கிள்”ன்னு சொன்னேன்.

அவனோ, “சரியான பச்சபுள்ளை மாப்பிள நீயி, நல்ல தண்ணினா… ஊதல் கேள்விப்பட்டதில்லை? சரக்கு மாப்பிள்ளை சரக்கு ….. சாராயம் ன்னு சொல்லுவாங்க” என்று என்னை பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தான்.

“எங்க ஊர்ல ரம், ஒயின்னு பார்ல போய் குடிக்கிறது பர்ஸுக்கும் கெடுதல், உடம்புக்கும் கெடுதல். ஆனா இந்த மாதிரி கிராமத்தில குடிக்கிற சாராயம் உடம்புக்கு கெடுதல் பண்ணாது. அதனால நான் இங்க வர்ரப்ப எல்லாம் அத மட்டும்தான் குடிப்பேன்” என்று சொன்னவன், “போன தடவை வந்தப்ப தமிழ் நாட்டில சாராயம் காய்ச்ச தடை இருந்துச்சு! இப்ப எப்படி? இன்னும் அதே நிலமைதானா?” என்று என்னிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, “எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாது அங்கிள்” என்று சொன்னேன்.

அவனே தொடர்ந்து, “நானும் வரும் போது டிரைனில் விசாரித்தேன், கவர்மெண்ட்டே wine shop திறந்து விட்டதால யாரும் சாராயம் காய்ச்ச முடியாதுன்னு சொன்னாங்க… பார்க்கலாம் எங்கையாவது பட்ட சாராயம் கிடைக்கும்” என்றவன், “மாப்பிள ஒன்னும் கவலப்படாத, இந்த தடவை நான் ஊருக்கு போறதுக்குள்ள உனக்கும் அதெல்லாம் சொல்லி கொடுத்துட்டு போறேன்” என்று சொல்லி சிரித்தான்.

“இல்லை அங்கிள், எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”னு அவசரமாக சொல்லி மறுத்தேன். அதற்கு ” எதுவுமே ஆரம்பத்தில் வேண்டாம் போலத்தான் இருக்கும், ஆனா ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டா, நம்மோட எல்லா கவலைகளும் பறந்து போகும். அந்த சுகத்துக்கு முன்னாடி வேற எதுவுமே தேவைப்படாது. நானெல்லாம் என்ன பிறக்குறப்பவே குடிகாரனாவா பிறந்தேன்? எல்லாம் நம்மல விட பெரியவங்க குடிக்கிறப்போ கூட இருக்கிற நம்மளையும் குடின்னு சொல்ல, அவங்க பேச்ச தட்டக்கூடாதுன்னு ஆரம்பிச்சதுதான்” என்று சொல்லி, மறைமுகமாக பெரியவன் நான் சொல்றேன், தட்டாதே என்று பேச ஆரம்பித்தான்.