அதிர்ஷ்டகாரண் – Part 3 51

நான், “எனக்கு எந்த கவலையும் இல்லை அங்கிள்” என்றேன்.

“ஏன் அப்படி சொல்ற? உங்கம்மா இறந்தது உனக்கு கவலை இல்லையா? இல்லை உங்கப்பா வயசு பையன் நீ வீட்டுல இருக்கிறப்பவே, அழகான பொண்ணா பார்த்து ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டு எஞ்சாய் பண்றாரே அது உனக்கு கவலை இல்லையா?” என்றான்

“அம்மா இறந்தது கவலைதான். ஆனா அதையே நினைச்சுக்கிட்டு இருந்தா சரியாகிடுமா? நான் என்னோட கவனத்தை படிப்புல காட்டி அத மறக்க ஆரம்பிச்சுட்டேன். அதுலையும் சகுந்தலா எங்களுக்கு அம்மாவா வந்ததால எங்களுக்கு அந்த குறையே இல்லாம போச்சு” என்றேன்.

“மாப்பிள இதெல்லாம் நான் நம்ப மாட்டேன். நாளைக்கே சகுந்தலாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருச்சுன்னா, அவ உங்களையும் உங்க அப்பாவையும் பிரிச்சுருவா ஜாக்கிரதை. எனக்கு அவங்க பேமிலையைப் பத்தி நல்லாவே தெரியும்” என்றான்.

எனக்கு அவன் சகுந்தலாவையும், பத்மா அத்தை குடும்பத்தை பற்றியும் கேவலமாக பேசுவது வெறுப்பை தர, இதற்கு மேலும் இவனுக்கு பதில் தர கூடாது என்று எண்ணி “uncle கீழே போகலாமா? எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க” என்று சொல்லி, அவன் பதிலுக்குகூட காத்திருக்காமல், முன்னே நடக்க ஆரம்பிக்க அவனும் என் பின்னால் வந்தான்.
என் பின்னே வந்தவன், நேரே கிச்சனுக்கு சென்று, சகுந்தலாவின் கையை குலுக்கி “உங்க வீடு சூப்பரா இருக்கு” என்று பாராட்டு தெரிவித்தான். அவளும் “தேங்க்ஸ் மாமா” என்று சொன்னவள், “சஹானா வந்ததும் வீடே நிரஞ்ச மாதிரி இருக்கு” என்று சொல்லி. “எங்கே சஹானா குட்டி?” என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு அவனையும் கூட்டிக்கொண்டு வந்தாள்.

சஹானாவும் மெது மெதுவாக தயக்கம் நீங்கி, அனைவருடனும் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். எங்கள் அனைவரின் பார்வையும் அவள் மீதே இருக்கிறது என்பதாலேயே, மாலதி அந்த ரைம்ஸ் சொல்லு, இந்த கதை சொல்லு என்று கொடுத்த எல்லா இன்ஸ்ட்ரக்சனுக்கும் குஷியாக செயல்பட்டாள்.

வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு பாத்து பாத்து விருந்து ரெடி பண்ணியிருந்தாங்க. சாப்பிட்டு முடிந்து பேச ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ஒன்பது மணிக்கே தூங்கிவிடும் சஹானா பனிரெண்டு மணிவரைக்கும் எங்களுக்கு ஈடு கொடுத்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக பத்மா அத்தை தன் பொண்ணுங்களோட அவங்க வீட்டுக்கு கிளம்ப ரெடியானாங்க. ஆனா அப்பாவும் சகுந்தலாவும் வேண்டாம் ரொம்ப லேட்டாயிடுச்சு, சின்ன குழந்தையை தூக்கிக்கிட்டு நைட்டுல போக வேண்டாம் என்று தடுத்து, காலைல போகலாம் என்று சொல்லி அவர்களை எங்கள் வீட்டிலேயே தங்க வைத்தனர்.

பத்மா அத்தை, கீதா, பாஸ்கர், மாலதி தன் குழந்தையுடன் எங்களின் கெஸ்ட் ரூமில் படுத்துக்கொள்ள, நாங்கள் எங்கள் ரூமில் படுக்க செல்லும் போது விடியற்காலை ஒரு மணி!

திடீரென்று விழிப்பு வர எழுந்து பாத்ரூம் போய் வரலாம் என்று எழுந்தேன்.

அப்போது ஹாலில் யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் சத்தம் கேட்க, மெதுவாக என் ரூம் ஜன்னலின் மேல் இருந்த கர்டனை விலக்கி ஹாலில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர்சிக்குள்ளாக்கியது….
ஹாலில் எரிந்து கொண்டிருந்த ‘நைட் லேம்ப்’ வெளிச்சத்தில், அங்கிருந்த பெரிய சோபாவை, பாஸ்கரும் மாலதியும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து என் ரூம் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது.