எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 57

(மேலே சாலமன் சொன்னதுதான் நமக்கும்.. அதாவது.. எழுதுகிற எனக்கும், படிக்கிற உங்களுக்கும்..!! அசோக் அவளுடைய உண்மையான பெயரை தெரிந்துகொள்ளும் வரை.. நமக்கு அவள் மீராதான்..!! சாலமன் சொன்னதை ஏற்றுக்கொள்வது நல்ல பிள்ளைக்கு அழகு.. அதை விட்டுவிட்டு.. மேலே கனகராஜன் சொன்னது போல.. என்னை கிண்டல் பண்ணுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது.. சரியா..??)

தனது சத்தத்துக்கு பயனில்லை என்று தெரிந்ததும், இங்கே ஸ்ரீனிவாச பிரசாத் சலிப்பானார். இனி வாய்பிளந்து உறங்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தார். தூக்க கலக்கத்துடனே நடந்து, அந்த அறையை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தார். பைப் திறந்து முகத்தில் நீர் வாரி இறைத்துக் கொண்டார். ஹேங்கரில் தொங்கிய டர்க்கி டவலை எடுத்து.. முகத்தை அழுந்த துடைத்தவாறே.. மீண்டும் முன்னறையை நோக்கி நடந்தார்..!! அடுத்த அறையில் அவர்களுடைய பேச்சு சப்தம் இப்போது மீண்டும் கேட்டது..!!

“ஜஸ்ட்.. அந்த ஃபோன் நம்பர் வச்சு.. அவங்க அட்ரஸ் மட்டும் கண்டுபிடிச்சு தந்தா போதும் ஸார்..!!” – கிஷோர்

“புரியுதுயா.. மொதல்ல ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுங்க.. விசாரிப்போம்..!!” – கனகராஜன்

இரண்டு அறைகளையும் பிரித்த அந்த இரட்டை மரத்தடுப்பை.. இரண்டு கையாளும் விலக்கியவாறு வந்து நின்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.. பக்கத்து அறைக்குள் பார்வையை வீசினார்..!! கனகராஜனும் அவரை சுற்றி அமர்ந்திருந்த அசோக் அண்ட் கோ-வும் கண்ணுக்கு தெரிந்தனர்..!! இவர் வந்து நின்றதை அவர்கள் கவனிக்கவில்லை.. தங்களது பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்றே கவலையான குரலில் கனகராஜனிடம் கேட்டான்..!!

“க..கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணாம.. க..கண்டுபுடிச்சு தர மாட்டீங்களா ஸார்..??”

“எதுக்கு கேக்குற..??”

“எ..எனக்கு.. எனக்கு அவ மேல கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ண இஷ்டம் இல்ல..!!” சொன்ன அசோக்கை, கனகராஜன் ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்.

“ஏன்யா.. எங்களைலாம் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..?? வேலை வெட்டி இல்லாம உக்காந்திருக்கோம்னு நெனச்சியா..?? கம்ப்ளைன்ட் பண்ணாம ஆக்க்ஷன் எடுக்குறதுக்கு.. போலீஸ்காரங்க என்ன உங்கவீட்டு வேலைக்காரங்களா..?? எத்தனையோ கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டும்.. ஆக்க்ஷன் எடுக்காம அப்டி அப்டியே கெடக்குது.. நீ என்னடான்னா..”

“அதுக்கு இல்ல ஸார்.. நான்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேணு இடையில் புகுந்து

“ஏய்.. நீ சும்மா இர்டா..” என்று அவனை தடுத்தான். பிறகு கனகராஜனிடம் திரும்பி,

“ஸார்.. நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்குறோம்..!!” என்றான்.

“டேய்..!!” அசோக் இப்போது வேணுவிடம் எகிறினான்.

“என்னடா..??”

“அ..அவ மேல எதுக்குடா கம்ப்ளைன்ட்.. அவ என்ன தப்பு பண்ணினா..??”

“உன்னை நல்லா ஏமாத்திருக்காளே.. அது பத்தாது..?? இத்தனை நாளா உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சு.. நம்ப வச்சு.. பொய் பொய்யா சொல்லி..!! ச்ச.. எப்படிலாம் முட்டாள் ஆக்கிருக்கா..” சொல்லிக்கொண்டிருந்த வேணுவை இடைமறித்து கனகராஜன் கேட்டார்.

“ஏம்பா.. கொஞ்சம் இருங்க..!! ஏமாத்திட்டா ஏமாத்திட்டான்னு அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன ஏமாத்திட்டா..?? பணம், நகைன்னு ஏதாவது ஆட்டைய போட்டுட்டு போயிட்டாளா..??”

“ஹையோ.. அதெல்லாம் ஒன்னுல்ல ஸார்.. ஏன் கேக்குறீங்க..??” – இது கிஷோர்.

“என்னது.. ஏன் கேக்குறீங்களா..?? கிழிஞ்சது போ..!! கம்ப்ளைன்ட்ல அப்புறம் என்னத்தய்யா எழுதுவீங்க..?? அவ ஏமாத்தினதால.. உங்களுக்கு என்ன பாதிப்புன்னு எழுதனுமே..??”

“ஓ..!! பா..பாதிப்புனா.. ம்ம்ம்.. அவ போயிட்டதால.. இ..இவன் அப்டியே மனசு உடைஞ்சு போயிட்டான் ஸார்..!! அதான்..” கிஷோர் தயங்கி தயங்கி சொல்ல, கனகராஜன் இப்போது கடுப்பானார்.

“யோவ்.. எந்திரிங்கயா..!!”

“எ..என்ன ஸார்..??”

“டயத்தை வேஸ்ட் பண்ணாம.. எடத்த காலி பண்ணுங்க..!!”

“ஏ..ஏன் ஸார்.. என்னாச்சு..??”

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.