எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

‘அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று புரிகிறது.. உடலளவிலா, மனதளவிலா அல்லது இரண்டளவிலுமா என்பது தெளிவாக புரியவில்லை..!! என்ன பிரச்சினையாக இருந்தாலும்.. என்னிடம் அவளது நிலையை விளக்கி சொல்லியிருந்தால்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. ஏற்றுக்கொண்டிருப்பேன் நான் அவளை..!! அதை அவளுமே அறிவாள்.. என்னுடைய காதலின் ஆழத்தை அவள் கட்டாயம் அறிந்தே வைத்திருப்பாள்..!! அவ்வாறு அறிந்து வைத்திருந்ததால்தான்.. அவளது பிரச்சினையை சொல்லி.. ‘என்னை ஏற்றுக்கொள்கிறாயா அசோக்..?’ என்ற அபத்தமான கேள்வியை அவள் கேட்கவில்லை..!! நான் அவளை ஏற்றுக்கொள்வேன் என்பதை முன்கூட்டியே அறிந்துதான்.. அந்த வாய்ப்பை அவள் எனக்கு வழங்கவே இல்லை..!! ‘நான் பாவம் செய்தவள்.. நான் உனக்கு பொருத்தம் இல்லை.. எனவே நான் பிரிந்து செல்கிறேன்.. இதுதான் என் முடிவு.. இதை நீ ஏற்றுக்கொண்டாக வேண்டும்..’ என்பது மாதிரி.. ஒரு நிர்ப்பந்தத்தில் என்னை தவிக்கவிட்டு விலகியிருக்கிறாள் என்றால்.. எனது காதலையும் அவள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள்.. அவளுடைய காதலையும் நன்றாகவே எனக்கு உணர்த்தி சென்றிருக்கிறாள்..!!’

‘ஆனால்.. ஒரே ஒரு விஷயத்தைத்தான் அவள் தவறாக எடை போட்டுவிட்டாள்..!! அந்த விஷயத்தில்தான் எனக்கு அவள்மீதும், என்மீதும் ஒருசேர பரிதாபம் பிறக்கிறது..!! அவளை மறந்து.. வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொன்னாளே.. அங்குதான் அவள் என் மனநிலையை குறைத்து மதிப்பிட்டுவிட்டாள்..!!’

“என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..??”

‘எப்படி மீரா என்னால் முடியும்..?? நீதான் என் வாழ்க்கை என்று ஆனபின்.. எப்படி என்னால் அப்படி இருக்க முடியும்..?? நீ விலகிவிட்டால்.. நான் விட்டுவிடுவேனா..?? எளிதில் உனை கண்டறிய.. எந்த தகவலையும் விட்டு செல்லவில்லை என்கிற தைரியமோ உனக்கு..?? என்ன செய்வதென்றறியாது சோர்ந்துபோய்.. என் மனதை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்தாயோ..?? நான் தேடப்போகிறேன் மீரா.. தேடி உனை கண்டுகொள்ள போகிறேன்.. ஓடி வந்து கையில் அள்ள போகிறேன்..!! என் காதலை உனக்கு புரிய வைத்தேன் அல்லவா.. விரைவில்.. நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தமேதும் இல்லை என்கிற உண்மையையும்.. உன்னை அறிந்துகொள்ள வைக்கிறேன்..!!’

மீராவை தேடிக்கண்டுபிடித்து.. அவளுக்கு தனது மனஉறுதியை உணர்த்தி.. அவளை சொந்தம் கொள்ளவேண்டும் என்ற முடிவில்.. அசோக் மிக தெளிவாக இருந்தான்..!!

மீராவை நெருங்கும் மார்க்கம் என.. அசோக்கின் மனதில் முதலாவதாக தோன்றிய விஷயம்.. வினோபா அநாதை விடுதிதான்..!! நிச்சயம் அவளுக்கு அந்த விடுதியுடன் நீண்ட கால தொடர்பு இருக்க வேண்டும்.. கட்டாயம் அவளுடைய தொடர்பு விவரங்கள்.. அந்த விடுதியின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்..!!

அசோக்கும் சாலமனும் அந்த விடுதிக்கு.. பைக்கில் வந்து இறங்கினார்கள்..!! கொஞ்சம் பழமையான ஆசிரமம்தான்.. ஆனால் நிறைய குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய.. நீண்ட வரலாறுடைய ஆசிரமம்..!! பெரிதாக அகலமாக மையக்கட்டிடம் நின்றிருந்தது.. ஆனால் பெயிண்ட் பூச்சு உதிர்ந்துபோய் சற்று பரிதாபமாக காட்சியளித்தது..!! கட்டிடத்தை சுற்றி.. உயர உயரமாய்.. பச்சை பச்சையாய்.. நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன..!! காய்ந்த சருகுகள் தரையெங்கும் இறைந்து கிடந்தன..!! சீருடை அணிந்த பிள்ளைகள்.. ஆங்காங்கே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்..!! அந்தப்பிள்ளைகளை பார்த்தவாறே.. அசோக்கும் சாலமனும் நடந்து சென்று.. ஆசிரமத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்..!!

“எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க..!!”

நாற்பதை தாண்டியிருந்த அந்த விடுதி மேலாளர் பெண்மணியின் ஆரம்பமே, அபசகுனமாக இருந்தது. சலிப்பான சாலமன், ‘இது வேலைக்காவாது’ என்று அவநம்பிக்கையாய் தலையசைத்தான். ஆனால் அசோக் மிக நம்பிக்கையாகத்தான் பேசினான்.

“பரவாலைங்க.. என்னை ஒரே ஒருதடவைதான் பாத்திருக்கீங்க.. அதுவும் இப்போ நூறு நாள் ஆகிப்போச்சு.. அதான் உங்களுக்கு என்னை மறந்திருக்கும்.. It’s obvious..!!”

“ஆமாம் தம்பி.. அதுவும் சரிதான்..!!”

“ஆனா.. அன்னைக்கு என் கூட வந்த அந்த பொண்ணு இருக்காளே.. அ..அவ இங்க அடிக்கடி வர்றவதான்..!! கண்டிப்பா அவளோட காண்டாக்ட் டீடெயில்ஸ் உங்கட்ட இருக்கும்..!!”

“ம்ம்..!!”

“எங்களுக்கு அவளோட அட்ரஸ் வேணும் மேடம்.. It’s very urgent..!!”

“ஓ..!! அவ்ளோதான் விஷயமா..??”

“ஆமாம்..!!”

“அதுக்கென்ன தம்பி.. தந்துட்டா போச்சு.. நோ ப்ராப்ளம்..!!”

“தேங்க்ஸ் மேடம்..!!” அசோக் உள்ளமெல்லாம் பூரிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஆங்.. அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னீங்க..??” என்று அந்த பெண்மணி கேஷுவலாக கேட்டாள். அருகில் இருந்த சாலமன் உடனே,

“கிழிஞ்சது..!! எங்க போனாலும் இது ஒன்னை கேட்டுர்றாய்ங்க.. ச்சை..!!” என்று முணுமுணுத்தான்.

அப்புறம் மீராவின் பெயர்க்குழப்பத்தை வேறு.. அசோக் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டி இருந்தது..!! அதுமட்டுமில்லாமல்.. மீராவுடைய அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி.. அவளுடைய ஞாபக சக்தியை தூண்டிப் பார்த்தான்..!!

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.