எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

“வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு.. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம்..!! இப்போ.. இந்த மேட்டர் தெரிஞ்சா.. அந்த சந்தோஷம் சுத்தமா காணாமப் போயிடும் ஸார்.. அப்படியே மனசு உடைஞ்சு போயிடுவாங்க..!!”

“ம்ம்..!!”

“இந்தப் பிரச்சினைக்கு காரணமே நானும் என் ஃப்ரண்ட்சுந்தான்.. வீட்டுக்கு எதுவும் தெரியாம, நாங்களே இந்தப் பிரச்சினையை சால்வ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!”

“ம்ம்..!! அதுவும் சரிதான்..!! நீ சொன்னதை வச்சு பாத்தா.. உங்க வீட்டு ஆளுகலாம் ரொம்ப சாஃப்ட் டைப்பா தோணுது.. இந்த ஷாக்கை எப்படி தாங்குவாங்களோ..?? இப்போதைக்கு அவங்களுக்கு தெரியாம இருக்குறதே நல்லது..!!”

“………………………..”

“ஹ்ம்ம்… சரிடா.. எனக்கு ஒரு நாலஞ்சு நாள் டைம் குடு.. கம்ப்ளைன்ட்லாம் எதுவும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்.. என்ன..??”

“ம்ம்..!!”

“ப்ராப்பர் கம்ப்ளைன்ட் இல்லாம மூவ் பண்றதால.. கொஞ்சம் டிலே ஆகலாம்.. மத்தபடி எதும் பிரச்சினை இல்ல..!!”

“ம்ம்..!!”

“நீ சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத.. கண்டுபுடிச்சிடலாம்.. புரியுதா..??”

“சரி ஸார்..!!”

“ம்ம்ம்..!!! சரி வா.. கெளம்பலாம்.. டைமாச்சு..!!”

சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சேரில் இருந்து மெல்ல எழுந்தார்.. அவருடைய உடம்பில் போதை மிதமிஞ்சி போயிருக்க.. எழுந்ததுமே கால்கள் தடுமாறினார்..!! கால்கள் தடுமாறி கீழே விழப் போன அவரை.. அசோக் அவசரமாக நகர்ந்து, தாங்கிப் பிடித்துக் கொண்டான்..!! உடனே அவருடைய முகம் படக்கென மூர்க்கமாகிப் போனது..!!

“ப்ச்.. விட்றா..!!” என்று சீற்றமாக சொன்னவர்.. அசோக்கின் கையை வெடுக்கென உதறினார்..!!

“எ..எனக்கு யார் தயவும் தேவை இல்ல..!!”

வாய் குழற சொன்னவர்.. கால்கள் இரண்டும் தள்ளாட.. உடல் சீரில்லாமல் அல்லாட.. தடுமாற்றத்துடனே முன்னால் நடந்தார்..!! அசோக் முகத்தில் ஒருவித அன்புப் புன்னகையுடன்.. ஓரிரு வினாடிகள் அவரையே பார்த்தான்.. பிறகு மெல்ல நடந்து அவரை பின்தொடர்ந்தான்..!!
‘ஸ்ரீனிவாச பிரசாத்திடம் வேலையை ஒப்படைத்தாயிற்று’ என்று.. அசோக்கால் அமைதியாக இருக்க முடியவில்லை.. மீராவை தேடிக்கண்டுபிடிக்க.. தன்னால் இயன்ற அளவு முயன்றான்..!! அவர் அவகாசம் கேட்டிருந்த அந்த ஐந்து நாட்களுக்குள்ளேயே.. அவளை கண்டுபிடித்துவிடவேண்டுமென.. முனைப்புடன் செயலாற்றினான்..!! இன்னும் சொல்லப்போனால்.. ‘அவள் இல்லாமல் ஐந்து நாட்கள் கழிக்கவேண்டுமா’ என்ற அவனுடைய மனதின் மலைப்புத்தான்.. அவனது செயலின் முனைப்புக்கு காரணம்..!!

அவனுடைய செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக.. அவனது மனநிலையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!!

முதலில்.. ‘இத்தனை நாளாய் தன்னை ஏமாற்றியிருக்கிறாள்’ என்றெல்லாம்.. இப்போது அசோக்கிற்கு மீரா மீது வருத்தம் இல்லை..!! ஆரம்பத்தில் அவள் மீது எழுந்த திடீர் கோபமும்.. அப்புறம் நிதானமாக யோசிக்கையில் காணாமல் போனது..!! அவளுடைய நிலையை இவன் தெளிவாக புரிந்துகொண்டான் என்றுதான் சொல்லவேண்டும்..!! பேச ஆரம்பிக்கையிலே அவளுக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை எனும்போது.. அவளுடைய பெயரைக்கூட பொய்யாக உரைத்தது பெரிய பிழையாக அவனுக்கு தோன்றவில்லை..!! ஆனால் பின்னாளில்.. அந்த மாதிரி பொய் உரைத்து தன்னுடன் பழகியதற்காக.. நிச்சயம் அவள் வருந்தியிருப்பாள் என்று அசோக் நம்பினான்..!!

“இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குறன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!!”

அன்று பார்க்கில்.. மீரா சிந்திய கண்ணீர் வார்த்தைகளின் முழு வீச்சு.. அசோக்கிற்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! ‘பொய் சொல்லிவிட்டாளே’ என்று இவன் இப்போது துடிப்பதை விட.. ‘பொய் சொல்லிவிட்டோமே’ என்று அவள் பல நாட்களாய் பலமடங்கு துடித்திருக்கிறாள்..!! அவளுடைய வேதனையையும், வலியினையும்.. அந்த வார்த்தைகளிலும், கண்ணீரிலும்.. மிக ஆழமாகவும், தெளிவாகவும் உணர முடிகிறதே..??

அதே மாதிரி.. ‘தனது காதலை புரிந்துகொள்ளாமல் மீரா பிரிந்து சென்றுவிட்டாள்’ என்றும் அசோக் நினைக்கவில்லை..!! அவனது காதலை நன்றாக புரிந்து கொண்டதாலேயே.. பதிலுக்கு அவள் மனதில் பொங்குகிற காதலை அடக்க முடியாததாலேயே.. அவள் இந்த முடிவெடுத்திருக்கிறாள் என்று நம்பினான்..!!

“நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!”

“இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!”

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.