எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்.. அதிக சலசலப்பு இல்லாமல் சாந்தமாகவே காட்சியளித்தது அந்த கட்டிடம்.. வடபழனி R-8 காவல் நிலையம்..!! கட்டிடத்துக்குள்ளே.. கைதிகளை அடைத்து வைக்கிற ஸெல்லுக்குள்.. செங்கலாலும், சிமெண்டாலும் ஆன அந்த மேடை மீது.. சற்றே வாயை பிளந்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்..!! எஸ்.ஐ ஆக இருக்கையிலேயே.. எல்லோரும் அவரை எஸ்.பி என்று அழைக்கிறார்கள் என்றால்.. தாய், தந்தை வைத்த தனது பெயருக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும்..!! ‘எஸ்.பி ஸார் வர்றார்.. எஸ்.பி ஸார் போறார்..’ என்பது மாதிரி கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் பேசி.. அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக வருகை தந்திருக்கிற நபர்களை.. புரியாமல் தலை சொறிய வைப்பார்கள்..!!

மஃப்டி உடையிலே உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்.. மார்பு திறந்திருக்க, சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழன்டிருந்தன.. தடித்த தங்கச்சங்கிலி ஒன்று அவரது கழுத்தில் தகதகத்தது..!! அசதியால் ஏற்பட்டிருந்த அவருடைய ஆழ்ந்த உறக்கத்தை.. ஸ்டேஷனுக்கு முன்புறம் இருந்து, சலசலவென வந்த அந்த சப்தம்.. சற்றே அசைத்து கலைத்துப் பார்த்தது..!! கான்ஸ்டபிள் கனகராஜன்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த யாரிடமோ.. அசுவாரசியமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்..!!

“ஓடிப்போயிட்டாளா..??”

“கா..காணாமப் போயிட்டாங்க..!!”

“ரெண்டும் ஒன்னுதானய்யா..??”

“இ..இல்ல ஸார்.. ரெண்டும் வேற வேற..!!”

முன்பிருந்து வந்த சப்தம் மட்டும் இல்லாமல்.. அவருடைய முகத்துக்கு முன்பாக ‘ஈஈய்ங்.. ஈஈய்ங்..’ என்று இரைச்சலிட்டவாறே சுற்றி சுற்றி வந்த ஈ ஒன்று.. இப்போது அவரது மூக்கிலேயே சென்று அமர.. அவருடைய உறக்கம் முழுமையாக கலைந்து போனது..!! ‘ப்ச்..’ என்று சலிப்பான குரலுடன் முகத்துக்கு முன்பாக கையை வீசியவர்.. தலையை சிலுப்பியவாறே எழுந்து அமர்ந்தார்..!! கண்கள் தூக்கத்தால் இன்னும் சுருங்கிப்போயிருக்க.. முரட்டுத்தனமான அவருடைய முகவெட்டில் இப்போது ஒருவித கடுகடுப்பு..!! ஈ மீது எழுந்த கடும் எரிச்சலுடன்.. பக்கத்து அறையில் இருந்து வந்த கனகராஜனின் கட்டைக்குரல் வேறு அவருக்கு கடுப்பை கிளப்ப..

“ஏய்ய்ய்..!!!”

என்று இங்கிருந்தே அந்த அறையைப் பார்த்து கத்தினார்..!! இவருடைய குரல் கனகராஜனின் காதில் விழவில்லை போலிருக்கிறது.. எந்த தடையும் இல்லாமல் தனது எகத்தாளப் பேச்சை அவர் தொடர்ந்துகொண்டிருந்தார்..!!

“என்னய்யா.. வெளையாடுறீங்களா..?? எல்லாம் தண்ணி போட்டு வந்திருக்கீங்களா..??”

“ஐயோ.. இ..இல்ல ஸார்..!!”

“அப்புறம்..?? பேர் என்னன்னு கேட்டா இந்தாள் மீரான்றான்.. நீ என்னடான்னா மீரா இல்லைன்ற..??”

“மீ..மீராதான் ஸார்.. அவங்க அப்படித்தான் சொன்னாங்க.. ஆனா அது உண்மையான பேரா இருக்குறதுக்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மின்னு வச்சுக்கோங்க.. கண்டிப்பா வேற பேராத்தான் இருக்கணும்..!! வேணும்னா.. இ..இப்போதைக்கு.. மீரான்னே வச்சுக்குவோம் ஸார்..!!” சாலமனின் பேச்சு கனகராஜனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

“என்னய்யா பேசுறீங்க நீங்க.. நல்லா வெளக்கெண்ணெய்ல போட்ட வெண்டைக்காய் மாதிரி.. வழவழா கொழகொழான்னு..!!” என்றார் கேலியும் கோபமுமாய்.

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.