எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

ஸ்ரீனிவாச பிரசாத் தொடர்ந்து ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே இருந்தார். அசோக் தனது கதையை ஏற்கனவே அவருக்கு சொல்லி முடித்திருந்தான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தின் முறை. அமைதியாக அவருடைய புலம்பலை நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்த அசோக், பிறகு ஆறுதலாக அவரிடம் சொன்னான்.

“வி..விடுங்க ஸார்.. அதையே நெனைச்சுட்டு இருக்காதீங்க..!!”

“எப்படிடா விடுறது..?? அவ விட்டுட்டு போய் எட்டு வருஷம் ஆகுது.. இன்னும் இங்க உக்காந்து அப்படியே கொடைஞ்சுட்டு இருக்காடா..!!” நெற்றியை தட்டிக்காட்டியவாறே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு முகத்தை வெடுக்கென வேறுபக்கமாக திருப்பி கத்தினார்.

“டேய் அய்யனாரு.. இன்னொரு கட்டிங் கொண்டா..!!”

“போ..போதும் ஸார்.. ஏற்கனவே ரொம்ப குடிச்சுட்டீங்க..!!” அசோக்கின் கனிவு அவருக்கு ஏரிச்சலையே மூடியது.

“ஏய்.. என்ன.. அக்கறையா..?? அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!! அக்கறையா பேசுற யாரையும் நான் சுத்தமா நம்புறது இல்ல.. அதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் கண்களை உருட்டி சூடாக சொன்னார். பிறகு ஏதோ ஞாபகத்துக்கு வந்தவராய், தலையை கவிழ்த்துக் கொண்டார். அசோக் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். அப்புறம் தலையை மெல்ல உயர்த்தி, சற்றே தளர்ந்து போன குரலில் சொன்னார்.

“நா..நான் குடிக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னாடா.. ஒரு வருஷத்துக்கு மேல சுத்தமா இதை தொடாம இருந்தேன் தெரியுமா..!! இப்போ பாரு.. டெய்ய்ய்லி..!!”

அவருடைய குரலில் தொனித்த வேதனையை அசோக்கால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘இவன் நிஜமாகவே அன்புக்காக ஏங்குகிறான்.. ஆனால் எவளோ ஒருத்தி அன்பு காட்டுவது போல நடித்து ஏமாற்றிய பாதிப்பினால்.. யாருடைய அன்பும் தனக்கு அவசியம் இல்லை என்று அடம் பிடிக்கிறான்.. பாவம்தான்..!!’

அசோக் இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தை பார்த்த பார்வையில் ஒருவித பரிதாபம் கலந்திருந்தது.

அய்யனார் வந்து அரைகுவார்ட்டரை க்ளாஸில் கவிழ்த்து சென்றான். அதில் சோடா ஊற்றி கலக்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அப்படியே தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். ‘க்க்க்ஹ்ஹாஹ்..!!’ என்றொரு கனைப்புடன் முகத்தை சுருக்கிக் கொண்டார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டவர், அசோக்கின் பிரச்சினைக்கு வந்தார்.

“அவ பேர் என்ன..??”

“தெ..தெரியாது ஸார்..!!”

“ப்ச்.. அவ சொன்ன அந்த டுபாக்கூர் பேரைத்தான்டா கேக்குறேன்..!!”

“மீரான்னு சொன்னா..!!”

“ஹ்ம்ம்..!! ரொம்ப புடிக்குமா அவளை..??”

“ம்ம்..!!”

“ரொம்ப அழகா இருப்பாளோ..??”

“ஆ..ஆமாம்..!!”

“ம்ம்ம்ம்..!! அழகா பொறந்து தொலைச்சு.. நம்ம உசுரை எடுத்து தொலைக்குங்க.. சனியனுக..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் அந்த மாதிரி வெறுப்பாக சொன்னவிதம்.. அசோக்கின் உதட்டில் மெலிதான ஒரு புன்னகையை வரவழைத்தது..!! இரண்டு நாட்களுக்கு பிறகு.. அவனது இதழ்களில் பூத்த புன்னகை அது..!!

“நூறு நாள் அவகூட ஊர் சுத்திருக்கேன்னு சொல்ற.. ஒரு ஃபோட்டோ கூடவா எடுத்து வச்சுக்கல..??”

“மொபைல்ல வச்சிருந்தேன் ஸார்.. ஆ..ஆனா..!!”

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.