பூ பூக்குதே 382

படவா என் கிட்டயே வாஅ… உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண…. நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா… ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்….

ம்ம்ம்ம்ம்…. அது தான் இப்ப மனசில் ஓடியது…..மனசு அவளை கேள்வி கேட்டது….அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது……

இல்லை அவன் என் அசிஸ்டண்ட்….

சோ வாட் அடிமை இல்லையே…..

ஆனா அவன் குடிக்க கூடாது….

அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே…..

இல்லை

அவனை புடிச்சிருக்கா…..

ம்ம்ம்ம்ம் ஆமா….

இப்பவா இல்லை முன்னாடியேவா…

இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா…அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு….

ஏன்…

தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது… அவன் கூட சுத்த பிடிக்குது….

அப்ப அவனை நீ காதலிக்கிற…

இல்லை….. இன்னும் இல்லை….அவனை புடிச்சிருக்கு….

என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை…. என்ன இது….

அது தான் எனக்கும் தெரியலை….. அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்…

மனசு அவளிடம் சண்டை போட்டது……..

அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா…..

மோகன் திரும்பி வந்தான்.

அதற்குள் 1/4 பாட்டில் காலி… ம்ம்ம் அவர்கள் பேச தொடங்கினார்கள்…A/C GM பேச்சு வாக்கில் GM sales கிட்ட அவர் என்ன பண்னுரார்னு போட்டு வாங்க பாக்கிறார்…..
சேல்ஸ் ஜி ம் அக்கவுண்ட்ஸ் ஜி எம் கிட்ட் வாய கிழருறாறு… இப்ப மோகனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது… ஒருத்தன் வாய ஒருத்தன் கிளரி.. அவனுக ப்ண்னுர கோல் மால் எல்லாம் அவனவன் வாயில வரவைக்க தான் இந்த் உத்தி.. இந்த கூட்டு குடி எல்லாம்… அடப்பாவிகளா.. இப்ப மட்டும் ஒரு கத்திய அவனவன் கையில கொடுத்து விட்டா தெரியும் சேதி…

ஒருத்தன ஒருத்தன் குத்திகுவாங்க போல… ஆனா வாய் மட்டும் அழகா பேசி சிரிச்சு.. உலக மகா நடிப்புடா.. சாமி…

திடீர்னு ஜிம் அக்கவுண்ட்ஸ்…

1 Comment

  1. Lovable story…

Comments are closed.