பூ பூக்குதே 382

என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா..

“மோகன்.. நேத்து கொடுத்த Quote that japan company, is that money paid yesterday… பதட்டமாய் கேட்டாள்….

“ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்… 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி…அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா… எதாவது ப்ரொப்ஸ்…. ”

“Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்… ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா….”

என்ன சொல்லுர…

“ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு… கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்… நல்ல வேளை நீ முடிச்சிட்ட..இல்லைன்னா நான் காலிடா.. ”

“நான் தான பணணினேன்… உன்ன எதுக்கு ….”

“இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்.. ”

இடையில் M.D. வந்தார்.. GOOD JOB.. AKILA… 2 CR… IN KITTY.. GOOD JOB KEEP IT UP…

மோகனுக்கு விளங்கவில்லை…..

அவர் போனவுடன் கேட்டான்.. என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்….

“ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. “அது குட்டி இல்லை.. கிட்டி… அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம்…..”

இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு…..

அது என்ன A 2 B….

நீ அம்மாஞ்சியா… ஒன்னும் தெரியலை… அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்..

அவள் குரலில் மகிழ்ச்சி… பொங்கியபடி…. மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது…
மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா… அது நான் தான் என்று… சொல்லிட வேண்டியது தான்… மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா,

“என்ன மோகன் கிளம்பலாமா…”
“ம்ம் இதோ வந்திட்டேன்…..”
அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும்,
மாலை 5.30 லிருந்த்து…

இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்…இரவு பாத்துக்கலாம்னு…

அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு.

“என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் எம் டி. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்”

“என்னது..”
“ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு…”
“ஏன் சொன்ன..”
“இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச… சோ த க்ரெடிட் ஈஸ் யுவர்ஸ்….”

1 Comment

  1. Lovable story…

Comments are closed.