பூ பூக்குதே 382

அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்… இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே….மோகன் அவர்களுடன் நின்றான்….

“என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே….”
“இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்….”
“இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்..”

சொல்லி விட்டு… 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க… ம்ம்ம் ஷியர் அப் மேன்… ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக….
ஏ சி கதவு திறந்தது…. வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்….

மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை
அமைதியாய் இருந்தவர்கள்… அவள் திரும்பி போன வுடன்…. ஜி எம் சேல்ஸ் சொன்னார்.”. இவளுக்கு என்ன சுகர் இருக்கா
இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா…..” சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று….

மோகனுகு வலித்தது…. ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்… அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்…

“சார் இத புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்… வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் ” சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்…

அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க…..

அவள் அருகில் போய் ” என்ன அகிலா தூங்கலையா… ”

“இல்லடா தூக்கம வரலை…”

“ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க…”

“உன்னது தான் சைடு லோயர்.. போதுமா… குடிச்சியா…. அவங்க கூட…” அவள் குரலில் கலக்கம்…

“இல்லை அகி நான் குடிக்கலை…. “அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை…

“நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்… அது தான் அவங்க கூட இருக்கேன்…”

“நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா… குடிக்க மாட்டேன் அகிலா…”

“இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ….”

அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது….

“இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்… நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ……”

சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்… மோகன்…. அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது… தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி… திரும்ப போய்….

இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்…

ஆபிஸ்… மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்… பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது… அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்… அவன் ஐடி ல…..அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்… ஆக.. இவன் தான் அவன்… அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்..

1 Comment

  1. Lovable story…

Comments are closed.