பூ பூக்குதே 382

“அதனால் என்ன நீ தான இன்ஸ்டரட் பன்னின…””
“நோடா இம்பிலிமெண்ட்டேசன் … அது மேட்டர்ஸ்…நீயும் போயிருக்கலாம்ல… இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு…”
“சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா…”
“என்ன”
“இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்… காபி கலக்கிடுவோம்…”
“என்ன விளையாடுரியா… 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்..”
“எனக்கு தான ட்ரீட் ”
“ஆமா”
“அப்ப வா என் கூட… ”
“உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்…” அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்… அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு.
ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான்.

“இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு…”
“ஆமா.. இருக்கு சந்தோசமா..”
“இதுக்கா இவ்வளவு சந்தோசம்….”
“இல்லை மோகன்.. அது வேற..”
“ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது…”
“என்ன உளர்ற… நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்… நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற..”
“இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா..”
“என்ன வித்தியாசம்… சொல்லு..”
“சொல்லிடுவேன்…”
“சொல்லு மோகன்…”
“உன் ட்ரெஸ்… எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ..”
“ம்ம்ம்ம்..”
“இன்னிக்கு அப்படி இல்லை… லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா… பிளவுஸ்…”
“இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு….”
“அப்புறம்…. ம்ம்ம்… இல்லை வேன்டாம்….”
“என்ன வேன்டாம்.. சொல்லு…”
“இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்….”

மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி…

“என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க…”
“இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்… இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி….”
“உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்…” சொல்லி சிரித்தாள்

“ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு… வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு….”
“சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட…”
“ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்…”
“சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்… வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி…”

” உன்ன யாராவது இதுவரை புரொபோஸ் பன்னி இருக்காங்களா?…”

” வாட் நோ நோப்…..” மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி… தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு…
“என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க….”
அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்…

“இல்லையே.. இது வரை இல்லை…..ஆமா நீ ஏன் அத கேட்கிற….”

“இல்லை சும்மா கேட்டேன்'” ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது…மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்….

1 Comment

  1. Lovable story…

Comments are closed.